What's new

C2F BigBoss Season-2 Task-10 ( GTF Task)

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task-10

இரவு -பகல்

1.இது Golden Ticket Finale task ஆகும்.

2.இந்த Task குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும்..

3. இதில் தொடர்ச்சியாக Taskக்கள் கொடுக்கப்படும்.

4.கொடுக்கப்படும் Task களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்..

5. Extend Time கிடையாது.

6.கொடுக்கப்படும் நேரத்தில் யார் அந்த குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுகிறாரோ மற்றும் நடந்து முடிந்த Task களின் மதிப்பெண் கொண்டு முதல் Finalist தேர்வு செய்யப்படுவார்..

7. அவருக்கு Golden Ticket வழங்கப்படும்.

8.இந்த Task ன் Judge ஒரு Admin ஆவார்.

Task-GTF -1

1. கொடுக்கப்படும் தலைப்பில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து கவிதை எழுத வேண்டும்..

2.எழுதப்படும் தலைப்பின் கவிதை வைத்து அதற்குரிய படம் வரைய வேண்டும்..

3.கவிதையானது 12 வரிக்குள் இருத்தல் வேண்டும்

3. Task -1 ன் நேரம் Oct -31-2023 மாலை 6 pm முதல் Nov-1-2023 காலை 9 மணிக்குள்.

தலைப்புகள்

1. தேன்கூடு
2. வறுமையின் நிறம் பசி
3. விவசாய வாழ்க்கை

ticket-to-finale-week-on-rising-star_1555331745.jpg
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
வரப்பிலே தலை வைத்து
வயலிலே உடல் சாய்த்து
அசதியிலே உறங்குகிறான்
உழவன் என்னும் ஓர் இறைவன்

உணவுன்னு நமக்கெதுவும்
கிடைப்பதற்கு வழி வகுக்கும்
அவன் கதையை கவிதையிலே
பாடிடத்தான் முயலுகிறேன்..

சோற்றிலே நீ கையும் வைக்க
சேற்றில் அவன் கால் கிடக்கும்
பாட்டிலே அத சொல்லுறப்போ
கண்களும் தான் நீர் வடிக்கும்

ஏற்றம் கொண்டு நீர் இறச்சு
நாற்று நட்டு பயிரும் வச்சு
தூற்றுகிற மாந்தருக்கும்
போற்றுகிற உணவளிப்பான்

என்னதான் ஏற்றத்திலே
நீர அவன் இறச்சலும்
அவன் வழக்கை ஏறலையே
ஏன்னு கூட புரியலையே

பட்டினிக் கொடுமை தனை
போக்கிடவே சோறு தந்து
பல நேரம் தானே அவன்
பட்டினியா கிடந்திடுவான்

ஊருக்குள்ள வீடிருக்க
சொந்த பந்தம் தானிருக்க
வெள்ளாமை காப்பாத்த
வயக்காட்டில் தூங்கிடுவான்

பத்து தல ராவணனும்
ஒத்த தல இராமனுமே
மத்தியில உள்ள கத
சொல்ல தானே கேட்டிருப்போம்

அப்படி பல கதைகள்
எக்கச்சக்கமா இருக்க
கஷ்டப்படும் விவசாயி
கதைய யாரும் சொல்லலையே

சட்டியிலே சோறேடுத்து
வரப்பில் ஒருத்தி நடந்து வர
மனைவி தானோ என்றுணர்ந்து
மனம் குளிர பாத்திருப்பான்

அந்த நேரம் அவன் மனசில்
காதல் ஒன்னு பிறந்திடுமே
ஷாஜஹானின் காதலுமே
அதுக்குதான் இணையில்லையே

பொங்கி வரும் பொங்கல் வச்சு
கதிரவனை வணங்கிடுவான்
மழை வேண்டும் என நினைச்சு
வருணன தான் வேண்டி நிப்பான்

வானம் பார்த்த பூமியதான்
வளமாக ஆக்கிடவே
தன் வாழ்க்கை பூராவும்
அங்கேயே தொலைச்சு நிப்பான்

எத்தனையோ சாமியதான்
நாம தினம் கும்பிடுறோம்
எத்தனையோ வேண்டுதல்கள்
வரமாக கேட்டிருக்கோம்

ஆனாலும் நாமளுமே
கேட்காம சோறு தரும்
உழவனுமே ஓர் கடவுள்
என்று மட்டும் உணர்ந்திடுவோம்

எல்லோரின் வாழ்க்கையிலும்
இன்பம் துன்பம் இரண்டிருக்கும்
துன்பம் மட்டும் அதிகம் கொண்ட

உழவனை நாம் கும்பிடுவோம்!!!

(பேச்சு வழக்கு தமிழில், என் கிராமத்தில் என்னோடு ஒரு காலத்தில் ஒன்றாக விவசாயம் செய்து ஊருக்கு உணவளித்த என் விவசாய சொந்தஙகளுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்🙏🙏🙏)
(தட்டச்சு செய்யும் போது எழுத்துப் பிழை அதிகம் இருக்கலாம் எனவே பிழை பொறுத்து கவிதையின் சுவை உணர்ந்து உங்கள் கருத்துக்களை வழஙகுங்கள் நன்றி)
அன்புடன் The PopeyeIMG-20231031-WA0005~2.jpg
 
Last edited:

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
வரப்பிலே தலை வைத்து
வயலிலே உடல் சாய்த்து
அசதியிலே உறங்குகிறான்
உழவன் என்னும் ஓர் இறைவன்

உணவுன்னு நமக்கெதுவும்
கிடைப்பதற்கு வழி வகுக்கும்
அவன் கதையை கவிதையிலே
பாடிடத்தான் முயலுகிறேன்..

சோற்றிலே நீ கையும் வைக்க
சேற்றில் அவன் கால் கிடக்கும்
பாட்டிலே அத சொல்லுறப்போ
கண்களும் தான் நீர் வடிக்கும்

ஏற்றம் கொண்டு நீர் இறச்சு
நாற்று நட்டு பயிரும் வச்சு
தூற்றுகிற மாந்தருக்கும்
போற்றுகிற உணவளிப்பான்

என்னதான் ஏற்றத்திலே
நீர அவன் இறச்சலும்
அவன் வழக்கை ஏறலையே
ஏன்னு கூட புரியலையே

பட்டினிக் கொடுமை தனை
போக்கிடவே சோறு தந்து
பல நேரம் தானே அவன்
பட்டினியா கிடந்திடுவான்

ஊருக்குள்ள வீடிருக்க
சொந்த பந்தம் தானிருக்க
வெள்ளாமை காப்பாத்த
வயக்காட்டில் தூங்கிடுவான்

பத்து தல ராவணனும்
ஒத்த தல இராமனுமே
மத்தியில உள்ள கத
சொல்ல தானே கேட்டிருப்போம்

அப்படி பல கதைகள்
எக்கச்சக்கமா இருக்க
கஷ்டப்படும் விவசாயி
கதைய யாரும் சொல்லலையே

சட்டியிலே சோறேடுத்து
வரப்பில் ஒருத்தி நடந்து வர
மனைவி தானோ என்றுணர்ந்து
மனம் குளிர பாத்திருப்பான்

அந்த நேரம் அவன் மனசில்
காதல் ஒன்னு பிறந்திடுமே
ஷாஜஹானின் கதலுமே
அதுக்குதான் இணையில்லையே

பொங்கி வரும் பொங்கல் வச்சு
கதிரவனை வணங்கிடுவான்
மழை வேண்டும் என நினைச்சு
வருணன தான் வேண்டி நிப்பான்

வானம் பார்த்த பூமியதான்
வளமாக ஆக்கிடவே
தன் வாழ்க்கை பூராவும்
அங்கேயே தொலைச்சு நிப்பான்

எத்தனையோ சாமியதான்
நாம தினம் கும்பிடுறோம்
எத்தனையோ வேண்டுதல்கள்
வரமாக கேட்டிருக்கோம்

ஆனாலும் நாமளுமே
கேட்காம சோறு தரும்
உழவனுமே ஓர் கடவுள்
என்று மட்டும் உணர்ந்திடுவோம்

எல்லோரின் வாழ்க்கையிலும்
இன்பம் துன்பம் இரண்டிருக்கும்
துன்பம் மடும் அதிகம் கொண்ட

உழவனை நாம் கும்பிடுவோம்!!!

(பேச்சு வழக்கு தமிழில், என் கிராமத்தில் என்னோடு ஒரு காலத்தில் ஒன்றாக விவசாயம் செய்து ஊருக்கு உணவளித்த என் விவசாய சொந்தஙகளுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்🙏🙏🙏)
(தட்டச்சு செய்யும் போது எழுத்துப் பிழை அதிகம் இருக்கலாம் எனவே பிழை பொறுத்து கவிதையின் சுவை உணர்ந்து உங்கள் கருத்துக்களை வழஙகுங்கள் நன்றி)
அன்புடன் The Popeye
Adei manna ithula paathi enaku anupi irkalam la
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
வறுமையின் நிறம் பசி


அமைதியான வானின் கீழே
அலங்கோலமாய் விரிந்த வறுமை ..

ராட்சச பசியில் இங்கே
நாதியற்ற கைகளிலே வெறுமை....

எங்கும் உணவிருக்க
இங்கே பட்டினியே திறமை ...

ஒட்டி உலர்ந்து உள்வாங்கிய
வயிறை காட்டிக்கொள்ளாத பொறுமை ..

வறுமைப்பிடியின் கோர நிறமாக
இங்கே பசி மட்டுமே எங்கள் பெருமை..1698750495569.jpg
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
வறுமையின் நிறம் பசி

பசி என்னும் ஒரு உணர்வு

எனக்குள்ளும் தோன்றுதே

பசித்திருக்கும் பலர் முகத்தை
என் கண்கள் காணுதே


வறுமை என்னும் ஓர் இனத்தை
நானும் கண்டு கொண்டேனே


சக மனிதன் பசித்திருக்க
நாம் மட்டும் உண்பதா


என்று எண்ணி எண்ணியே
நிம்மதியும் போனதே


இந்த நொடி என் கருத்தில்
தோன்றுவது யாதெனில்


வறுமையின் நிறமது

என்றுமே பசியே
 

Attachments

  • IMG_20231031_195541.jpg
    IMG_20231031_195541.jpg
    3.1 MB · Views: 12

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
பிறந்த பயன் அறியாது
பெற்றோர் யாவர் அறியாது
தங்கும் இடம் நிலையில்லை
ஒரு வேலை உணவும் நிலையில்லை
மானிடரிடம் பிச்சை ஏந்தும் கடவுளை பார்க்கிறேன்
முதன் முதலாய் !IMG_4606.png
 
O

Ohmylove

Guest

தேன்கூடு



ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ அறுகோண அறைகளை அம்சமாய் அடுக்கி....

மெழுகால் மொழுகி
மெருகு ஏற்றி வைத்ததோர்
ஆறு கால் பூச்சிகளே ...

உழைக்கும் வர்க்கமே நீ உண்ணவும் உறங்கவும் உருவாக்கி கொண்ட
கூடோ உன் வீடு ....

மலரின் மகரந்தத்தில்
மதுவை உறிஞ்சி..
மனிதனுக்கும் சேர்த்து ஊட்டுகிறாயே..
உன்னை குடித்தாவது
உணர்ந்து கொள்ளட்டும்...

உயிரை உலகுக்கு கொண்டு வருபவளே

"உன் வீட்டின் ராணி"- என்று
நீ உரக்க கூறியதை..

உள்ளங்கை தேனை நக்கி கொண்டே உயிர்நாடி நரப்பில் கலந்து சேரட்டும் ... IMG_20231031_233827_837.jpg
 
Last edited by a moderator:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தேன் கூடு
முத்தலைமுறையும் மகிழ்ந்திருந்த முற்றங்கள் மறைந்தன...

எந்தையுந்தாயும் தன்னந்தனியாய்
தங்கியும்.. அவர்தம் அன்னையுந் தந்தையும் தனிமையில் தவித்தும்
தீவென தெளித்து விடப்பட்ட தானுமாய்


அரிதாய் அறியப்படுபவர்களாய்.. அறிமுகப்படுத்தப்படுபவர்களாய்...

தித்தித்த தேன்கூடு...

தேவைகளுக்கும்.. தேடல்களுக்கும்.. திசைக்கொன்றாய் கலைக்கப்பட்டது.. காலமெனும் கல்லினால்......

20231101_000008.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task-2 GTF

மெட்டு போடு

1.இங்கு மீதமுள்ள 7 நபர்களில் ஒரு நபரை தேர்வு செய்து அவர் இந்த Bigboss Season -2 ல் கடந்து வந்த செய்கைகளை வைத்து ஒரு படத்தின் பாடலை Remake பாடலாக தயார் செய்தல் வேண்டும்..

2. 7 நபர்களில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

3. இந்த Task-ன் நேரம் Nov-1-2023 காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
1. கொடுக்கப்படும் தலைப்பில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து கவிதை எழுத வேண்டும்..

2.எழுதப்படும் தலைப்பின் கவிதை வைத்து அதற்குரிய படம் வரைய வேண்டும்..

3.கவிதையானது 12 வரிக்குள் இருத்தல் வேண்டும்

3. Task -1 ன் நேரம் Oct -31-2023 மாலை 6 pm முதல் Nov-1-2023 காலை 9 மணிக்குள்.

தலைப்புகள்

1. தேன்கூடு
2. வறுமையின் நிறம் பசி
3. விவசாய வாழ்க்கை
உலகெங்கும் பொருள்செய்வோர் விலையைச் சொல்வார்
முடிந்தவரவ் விலைதந்து வாங்கிச் செல்வார்
கலங்கள் செய்வதிலை கூடா தோர்கள்
கள்வரென பொருளினையும் கவர்வ தில்லை 2

அதைபோலோர் வேளாளன் விலையைச் சொல்லும்
உரிமையினை தந்ததுவோ இந்தத் தேசம்?
விதைக்குமுனே உழுவதெவண்? களைகள் நீக்கி
விழலுக்கு கொட்டியதோ உழைப்பும் நீரும்? 4

துப்புகெட்ட ஆட்சியரின் கேலிக் கூத்தால்
துண்டுவிழும் மிகைச்செலவை அச்சடித்து
தப்பிதமாய் மக்களுளே உலவ விட்டு
சேர்த்தபண மத்தனையின் மதிப்பழித்தே 6

வறுமையினைப் பெற்றோமென் றறிவில் லாத
வாக்காளன் துவக்கியதிக் கேட்டுச் சுழலை
வெறுங்குப்பை கல்விபெற்ற அதிகாரிக்கும்
விளங்கிடுவ தில்லையிக் கேட்டின் மூலம் 8

கூழ்முட்டை வகுத்ததொழிற் கொள்கை யிங்கே
கோடிகளில் கொழிப்பவர்க ளின்னும் வீங்க
ஏழ்மையிலே அழுந்தியவன் இன்னும் தாழ
கொள்முதலின் விலைவைத்தார் கம்மி யாக 10

அவன்பொருளுக்கு அவனைவிலை கேட்டிடாமல்
அடக்கத்தை கணக்கினிலே எடுத்திடாமல்
எவனிடமோ பிடுங்கியதாம் வரிப்பணத் தில்
எறிந்ததுவே வேளாளன் பெற்ற கூலி 12

களவன்றோ அடக்கத்தில் குறையத் தந்தால்?
கற்றவரும் கயவர்களாய் ஆகிப்போ னார்
உளமிருந்தும் உத்தமரும் கள்வர் ஆனார்
உழுதவனின் கூலியினை குறைத்த தாலே 14

அரசாங்கம் கொள்முதலின் விலைவைக் காது
அவரவரே விலைசொல்லி வாங்கிப் போனால்
பிரசங்கம் பிரச்சாரம் எதுவும் இன்றி
பிற்பட்ட வேளாளர் நிமிர்ந்து நிற்பார் 16

துண்டுவிழா வீண்செலவைத் தவிர்த்துத் தேர்ந்து
துளிசெலவில் மிகுபயனாய் ஆட்சி செய்தால்
மண்டுகின்ற வெள்ளமென பணம் ஓடாது
மாறிமாறி பணத்தினையச் அடிக்காத தால் 18

நவநவமாய் அடித்தபணம் கலக்காத தால்
நாட்டினிலே பணத்தளவு சமனாய் நிற்கும்
தவறெதுவும் இல்லாத பணங்க ளாலே
தறிகெட்டுப் போவதில்லை விலைகள் நாட்டில் 20

நாளெல்லாம் ஊரெல்லாம் சுற்றித் தேடி
சேர்த்துவைத்த தேன்கூடு பறிபோதல் போல்
தோளெல்லாம் புடைத்திடவே சேர்த்த செல்வம்
பணவீக்கக் களவின்றி நிறைந்தே நிற்கும் 22

மற்றவர்போல் வேளாளன் செழிப்பில் வாழ்வான்
மாநிலத்தே வறுமையொழிந் தகன்று போகும்
கற்றவர்கள் கொள்கைகளை வகுப்பா ரானால்
கயவரெலாம் அரசியலைத் துறந்து சாவர் 24
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
உலகெங்கும் பொருள்செய்வோர் விலையைச் சொல்வார்
முடிந்தவரவ் விலைதந்து வாங்கிச் செல்வார்
கலங்கள் செய்வதிலை கூடா தோர்கள்
கள்வரென பொருளினையும் கவர்வ தில்லை 2

அதைபோலோர் வேளாளன் விலையைச் சொல்லும்
உரிமையினை தந்ததுவோ இந்தத் தேசம்?
விதைக்குமுனே உழுவதெவண்? களைகள் நீக்கி
விழலுக்கு கொட்டியதோ உழைப்பும் நீரும்? 4

துப்புகெட்ட ஆட்சியரின் கேலிக் கூத்தால்
துண்டுவிழும் மிகைச்செலவை அச்சடித்து
தப்பிதமாய் மக்களுளே உலவ விட்டு
சேர்த்தபண மத்தனையின் மதிப்பழித்தே 6

வறுமையினைப் பெற்றோமென் றறிவில் லாத
வாக்காளன் துவக்கியதிக் கேட்டுச் சுழலை
வெறுங்குப்பை கல்விபெற்ற அதிகாரிக்கும்
விளங்கிடுவ தில்லையிக் கேட்டின் மூலம் 8

கூழ்முட்டை வகுத்ததொழிற் கொள்கை யிங்கே
கோடிகளில் கொழிப்பவர்க ளின்னும் வீங்க
ஏழ்மையிலே அழுந்தியவன் இன்னும் தாழ
கொள்முதலின் விலைவைத்தார் கம்மி யாக 10

அவன்பொருளுக்கு அவனைவிலை கேட்டிடாமல்
அடக்கத்தை கணக்கினிலே எடுத்திடாமல்
எவனிடமோ பிடுங்கியதாம் வரிப்பணத் தில்
எறிந்ததுவே வேளாளன் பெற்ற கூலி 12

களவன்றோ அடக்கத்தில் குறையத் தந்தால்?
கற்றவரும் கயவர்களாய் ஆகிப்போ னார்
உளமிருந்தும் உத்தமரும் கள்வர் ஆனார்
உழுதவனின் கூலியினை குறைத்த தாலே 14

அரசாங்கம் கொள்முதலின் விலைவைக் காது
அவரவரே விலைசொல்லி வாங்கிப் போனால்
பிரசங்கம் பிரச்சாரம் எதுவும் இன்றி
பிற்பட்ட வேளாளர் நிமிர்ந்து நிற்பார் 16

துண்டுவிழா வீண்செலவைத் தவிர்த்துத் தேர்ந்து
துளிசெலவில் மிகுபயனாய் ஆட்சி செய்தால்
மண்டுகின்ற வெள்ளமென பணம் ஓடாது
மாறிமாறி பணத்தினையச் அடிக்காத தால் 18

நவநவமாய் அடித்தபணம் கலக்காத தால்
நாட்டினிலே பணத்தளவு சமனாய் நிற்கும்
தவறெதுவும் இல்லாத பணங்க ளாலே
தறிகெட்டுப் போவதில்லை விலைகள் நாட்டில் 20

நாளெல்லாம் ஊரெல்லாம் சுற்றித் தேடி
சேர்த்துவைத்த தேன்கூடு பறிபோதல் போல்
தோளெல்லாம் புடைத்திடவே சேர்த்த செல்வம்
பணவீக்கக் களவின்றி நிறைந்தே நிற்கும் 22

மற்றவர்போல் வேளாளன் செழிப்பில் வாழ்வான்
மாநிலத்தே வறுமையொழிந் தகன்று போகும்
கற்றவர்கள் கொள்கைகளை வகுப்பா ரானால்
கயவரெலாம் அரசியலைத் துறந்து சாவர் 24
This is fiscal economics though, the policies that explain poverty of farming community and poverty in general, the root cause of it and the ways and means of reversing this sorry state of affair to a wealthy state of abundance. Right wing idea though. Not so famous in this part of the world. Becoz i took all the 3 into one poetry, had to take more lines. May please be condoned and pardoned. As for picture. I m sorry. Its very late. and i m not good in sketching either. Hope these lines are self explanatory. I ll post the explanation separately.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
திரைப்படம் - பிரியா
பாடல் - டார்லிங் டார்லிங் டார்லிங்
இந்த பாடலின் மெட்டை Ohmylove பெயருக்கு வரிகளை அமைத்து பயன்படுத்தி உள்ளேன்

ஓ மை லவ்
@Ohmylove

டார்லிங்..டார்லிங்..டார்லிங்..
ஓ மை லவ்!! மை லவ்!! மை லவ்!!
டார்லிங்.. டார்லிங்.. டார்லிங்..
ஓமைலவ்!!!

பிபி 2 கேமில் முதலில்
வராமல் போனாயே...

டாஸ்க் 2 உன்னை படமும்
வரைய வைத்தது..
என்றாலும் நீயும் அகப்படாமல்
டான் கண்ணில் தப்பினாயே..
ஓ மை லவ்!! ஓ மை லவ்!!

டார்லிங் டார்லிங் டார்லிங்
ஓ மை லவ்!! மை லவ்!! மை லவ் !!

யாரும் சொல்லாமல் நீயே
கட்டுரை எழுதினாய்.. என்ன
விவேகம் என்று கண்டோம்..
மோதும் எண்ணங்களில்
நீடுவிடம் சவால் சொல்லி
ஓடி வந்தாயே....

புது வரவு..
துப்பு தர.. தீவிரவாதி
அதை நீ சொல்லவில்லையே...
ஓ மை லவ்!! ஓ மை லவ்!!

டார்லிங் டார்லிங் டார்லிங்
ஓ மை லவ்!! மை லவ்!! மை லவ்!!

நீயும் இல்லாத கேமில்..
எனக்கென்ன வேலை..
சொல்லு எப்படி
விளையாட அடியே ...
மொக்கை போட்டாலும்
தப்பில்லை கணக்கு பாடம்
டாஸ்க் ஆறில் சொல்ல அடியே வா...

மீமி எனும் மருந்து தரும் சிரிப்பு
அதை நீ கொண்டா யே!!
ஓ மை லவ் !! ஓ மை லவ்!!

டார்லிங் டார்லிங் டார்லிங்
ஓ மை லவ்!! மை லவ்!! மை லவ்!!

கணவர் இல்லாத நேரம்
ஆம்லெட் போட
தேவை என்று வைத்திருந்த
வெங்காயம் மாறி பூவானதே...
அதையும் அஸ்திரா புள்ள
உண்ண ஓடி வா...

பணி தரும் அரசி இவள்
அதைக்கேட்டிடாத அமைச்சர்
பிரகாஷ் வாருமே!!
(அரசியை சைட் அடித்த எதிர் அரசர் பாப்பேயும் நாட்டுக்கு ஓடுமே)

ஓ மை லவ்!! ஓ மை லவ்!!!

டார்லிங்.. டார்லிங்.. டார்லிங்..
ஓ மை லவ்!! மை லவ்!! மை லவ்!!
டார்லிங்.. டார்லிங்.. டார்லிங்..
ஓ மை லவ் !!
முதலில் பிபி கேம்
வராமல் போனாயே !!!

மன்னர் பாலன் உந்தன் நிர்வாகத்தால்
நெஞ்சில் வைத்து
(பஞ்சமில்லாமல் வைது)
என்றும் உண்மை அன்பை
கமென்டில் வைத்தாரே.....

ஓ மை லவ்!!! ஓ மை லவ்!!! ஓ மை லவ்!!!
 
Last edited:

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
பாடல்: நாளை இந்த வேளை பார்த்து
பாடலாசிரியர்: அஸ்திரா
பாடல் நாயகன்: the great terrorist, மங்குனி மந்திரி பிரகாஷ்


டாஸ்க் தேடியே
Forum room இலே
Don பார்க்கவே
நீ ஆடினாய்

நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா பிரகாஷ்
இன்று எந்த task um இல்லை சென்று வா பிரகாஷ்
Task இலே உன் drawing கண்டு வியந்து போனோமே
Task இலே உன் drawing கண்டு வியந்து போனோமே

(நாளை)

மந்திரியாக நீ வந்தது மகிழ்ச்சி தந்ததே
மந்திரியாக நீ செய்த வேலை
மறக்க முடியாதே

Popoye um தான் நீ content il வராமல் உயிரை விட்டானே
உயிரை விட்டானே

(நாளை)

Needuvudan நீ போட்டி போட்டு
வசனம் பேசினாய்
நிலா வயும் உன் கூட சேர்த்து
Terrorist ஆகினாய்

Balan sir ஐ நீ பார்த்து தான்
பயந்து நடுங்கினாய்
பயந்து நடுங்கினாய்

(நாளை)

Oh my love வந்தால் பேசும் என்று
நீ ஓடி போகிறாய்
ஓவராக memes ஐ போட்டு mark um வாங்கினாய்

தலைவனை நீ தளபதி என்று மாற்றி பேசினாய்
மாற்றி பேசினாய்
(நாளை)
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
படம் : நேருக்கு நேர்
பாடல் : மனம் விரும்புதே உன்னை...


இந்த பாடலை @Nilaa க்கு பாடுகிறேன்..

பல்லவி.


ஃபன் பண்ணத்தான் ஃபோரம் ஃபோரம் நான் வந்தேனே...

நிலா பொண்ணுதான் பிக்பாஸ் கேமில் சேர் சொல்லுச்சே...

பிக்பாஸில் தான் சேரத்தான் டானு‌ கிட்ட நான் கேட்டெனே...

நான் கேட்ட மறு நிமிடமே டாஸ்க் ஆறில் டான் சேத்தாரே..

பிக்பாஸுல சந்தோஷமா நான் சேந்தெனே......


சரணம் 1

ஆறாம் டாஸ்கில் உள்ளயும் வந்து
எல்லாரோட டெகஸ்டையும் கண்டு தல சுத்தி நான் கீழே விழுந்துட்டேன்..
கோரஸ் - விழுந்துட்டேன்..

கேள்வி எதுவுமே எனக்கும் புரியல , பதிலும் என்னனு எனக்கும் தெரியல, ஒன்னுமே புரியாம ஒதுங்கியும் நின்னுட்டேன்...

கோரஸ் - நின்னுட்டேன்

அப்போது மனசுல நிலாவ நானும் தான் திட்டுனேனே
பத்தலனு பிரைவேட்டு பண்ணி அங்கயுமே திட்டுனேனே .

ஏன் கொலவெறி என்மேல உனக்கும் ஏன் கொலவெறி....

பிக்பாஸில் தான் சேரத்தான் டானு‌ கிட்ட நான் கேட்டெனே...

நான் கேட்ட மறு நிமிடமே டாஸ்க் ஆறில் டான் சேத்தாரே..


ஏன் கொலவெறி நிலா உனக்கும் ஏன் கொலவெறி....

ஏன் கொலவெறி நிலா உனக்கும் ஏன் கொலவெறி...



சரணம் 2

ஒருவழியா நான் ரெண்டு டாஸ்க் கடந்து மெதுவா தான் டாஸ்க் நைண்ல நுழைஞ்சு என்னோட ஆக்டிங்க நான் குடுத்தேன்..

என் ஆக்டிங் அதில் முடிஞ்சதா நெனச்சு சாகுற மாதிரி வசனமும் பேசி அப்பாடானு நானும் ஒதுங்கிட்டேன்..

அப்பவுமே என்ன தொல்ல பண்ண இந்த நிலா வந்துச்சே..
செத்தவன மீண்டு வர வச்சு திட்டு
வாங்க வச்சுச்சே ...

ஏன் கொலவெறி என்மேல உனக்கும் ஏன் கொலவெறி....

பிக்பாஸில் தான் சேரத்தான் டானு‌ கிட்ட நான் கேட்டெனே...

நான் கேட்ட மறு நிமிடமே டாஸ்க் ஆறில் டான் சேத்தாரே..


ஃபன் பண்ணத்தான் ஃபோரம் ஃபோரம் நான் வந்தேனே...
 
Last edited:

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
This chong is dedicated to the apprentice @Nilaa thozhi
Song /movie sola thevai erukadhunu nenaikren..theryadavangalku..end la potruken..check karo

Nilaa adhu vaanathu melee..
Forum roomla okandhutaa keele..
BB task la vitu oda patha apprentice eh..
Hoiyaa hoi adhu ennaa hoi

Drawing task la pogai engai keta kelvi ava..
achum..achum..achum...
Adku answer kedaikama.. nondhu pona ava
achum..achum..achum...

Theevaravathi task la - kuda nina kula nari naan...
achum..achum..achum...
vennaiya vechutu nei ku alanja noodles manda ava..
achum..achum..achum...

Results venumnu agni kita kenjuna apprentice ava...
achum..achum..achum...
Kenji kenji..moochu erachi pochu ava...
achum..achum..achum...

Puzzle task la perku dan captain kepmaari ava..
achum..achum..achum...
payapula oruthanum avala suthama madhikala ava
achum..achum..achum...

thalapathi ..mandhiri kum..vaaku vaadham dan...
devi kum..arasi kum vaaku vadham dan
mama vela paatha...single ponu dhaan
bore adikdnu...sandai podum..thalapathi daan
adi aathadee...naan paataali..un kootali...hoi

Nilaa adhu vaanathu melee..
Forum roomla okandhutaa keele..
BB task la vitu oda patha apprentice eh..
Hoiyaa hoi adhu ennaa hoi


Movie: Nayagan
Song: Nilaa adhu vaanahtu mele..
 
O

Ohmylove

Guest
@Needu

This song for needu... (Ra ra ra ramayya remake) lyricist : ohmylove

ஒரே ஒரு task-u
தான் இரவுக்கெல்லாம்
ஒரே ஒரு task-u
தான் பகலுக்கெல்லாம்
ஒரே ஒரு Don-nu
தான் BB-கெல்லாம்


நீ நீ நீ நீடு யா
நீளமா போகுது டாஸ்க் அய்யா
இங்கு
நீ நீ நீ நீடு யா
Forum குள்ள post
இருக்கு பாரய்யா

பத்து பத்தா BB- taska பிரிச்சுக்கோ
நீ எந்த டாஸ்கில்
இப்போ இருக்க புரிஜிக்கோ...

முதல் task -il போட்டது postyae இல்லை...

இரண்டாம் task-ல புடிச்சிட்டா
மீன வலையா போல

மூன்றாம் டாஸ்கில் மாறினாய் அன்னை ஆக ...

நாலாம் டாஸ்கில் தேடினாய் திவராவதியை திண்ணை திண்ணை ஆக

பத்து பத்தா BB- taska பிரிச்சுக்கோ
எனக்கு எந்த டாஸ்க் இப்போ புடிச்சிருக்கு தெரிஜிக்கோ

(நீ நீ நீ நீடு யா
நீளமா போகுது டாஸ்க் அய்யா)


ஐந்தாம் task- il நீயும் ஆனாய் bigboss -ஆக...
ஆறாம் task நீயும் ஆனாய் famous-ஆக...
ஏழாம் task-il எட்டி பாய்தாய் ஈட்டி போல...
எட்டாம் task-il நிம்மதி கண்டாய் captain-ஆக..
ஒன்பதாவது task-il ஓரமா போனாய் astira கூட

பத்து பத்தா BB- taska பிரிச்சுக்கோ....
நீ பத்தாவது task ல
இப்போ நிக்கிற தெரிஜிக்கோ

நீ நீ நீ நீடு யா
நீளமா போகுது டாஸ்க் அய்யா ....
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
மாற்றி அமைத்த பாடல் : வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (படம் -அண்ணாமலை )
அர்ப்பணம் : பிரகாஷ் க்கு

_________________________________________________________________

வெற்றி நிச்சயம், இது forum சத்தியம்..
இளவலை கை பிடிப்பதே, நான் கொண்ட லட்சியம்
என்னவளுக்காக என்னுயிர் தந்து காப்பேன்
நடுவில் வந்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன் ...

அடேய் தம்பி உண்மை சொல்வேன் , சவால் வேண்டாம் அவளை வெல்வேன்

சரணம் 1:

டைம் மெஷினில் தாத்தாவை, அழகாக கொணர்ந்தாயே,
வரை படத்தில் விவசாயி ,அற்புதமாய் வரைந்தாயே..
மாத்தி யோசியில் உன் பெண்ணை ,அழகாய் நீ வளர்த்தாயே..
தீவிர வாதியாகி ,டாஸ்க் 5 தாவினாயே ..
ஒவ்வொரு டாஸ்க்கும் உன் பெயர் சொல்கிறதே ..
ஒவ்வொரு முறையும் குழப்படி செய்கிறதே ...
அழகும் செயலும் உன் கண்ணை மறைக்கிறதே ...

அடேய் தம்பி உண்மை சொல்வேன் ...சவால் வேண்டாம் ...அவளை வெல்வேன் ...

சரணம் 2 :

puzzle டாஸ்கிலே ,ஆளே காணாமல் போனாயே ...
மீம்ஸ் டாஸ்கிலே, எல்லோரையுமே வதைத்தாயே ...
கை வினை தொழிலில் நீ, வெங்காயம் வரைந்தாயே...
அடுத்த டாஸ்கிலே, என்னை நீ பதம் பார்த்தாயே..
பாலனிடம் போய் நீயும் நிறைய முறையிட்டாயே ..
அவரும் நிறைய கேள்விகள் எல்லாம் கேட்டாரே ...
அப்படி இருந்தும் நானே இன்று வென்றேனே..

அடேய் தம்பி உண்மை சொல்வேன் ...சவால் வேண்டாம், அவளை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது forum சத்தியம்..

இளவலை கை பிடிப்பதே நான் கொண்ட லட்சியம்
என்னவளுக்காக என்னுயிர் தந்து காப்பேன்
நடுவில் வந்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன் ...

அடேய் தம்பி உண்மை சொல்வேன் , சவால் வேண்டாம் அவளை வெல்வேன்

 
Top