- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,235
- Points
- 133
இந்த உபதேசம் கிபதேசம்லாம் சாதர்ண பழக்க வழக்கங்கள், ஹோம் ரெமெடி, ட்ராவல் டிப்ஸ், பைனான்ஷியல் ப்ளானிங் திப்ஸ், கரீயர் க்ரோத், இப்டி ஓவரால் பெர்சனாலிட்டி டெவெலப்மெண்ட்க்கு தலையிடலாம், சொல்லலாம் வேன்னா இடிக்கலாம்,இதுல யாராவது ஒருத்தருக்கு இன்னொருத்தர் செய்றது irritate ஆகலாம். அதுவே வெறுப்பும் ஆகலாம். பிரியவும் வாய்ப்பு இருக்கு. இயல்பை மாத்திட முடியாதில்ல.
ஆனா இந்த காதல் விவகாரம் இருக்குல்ல காதல். எவ்லோ தான் ஒருத்தங்க நெருக்கமா இருந்தாலும் அதுக்குள்ள நம்ம மூக்க நுழைக்க கூடாது. ஏன்னா காதல் உணர்வோட வீச்சு ரொம்ப தீவிரமா இருக்கும். பெற்ற அம்மா அப்பாவையே வீசியெறியும்ன்னா நம்மல்லாம் எந்த மூலைக்குன்னு புரிஞ்சிக்கணும்.
காதலில் விழுந்தவர்கள் அவங்களுக்கு சாதகமான சொற்களை எதிர்பாப்பாங்க. அந்த அழகிய கனவை கலைக்கிற மாதிரி சொற்கள் எங்கேர்ந்து வந்தாலும் அதை சொல்றவங்க பகையாகிடுவாங்க. அங்கே லாஜிக்கெல்லாம் வேலைக்கு ஆகாது. சரி தப்பெல்லாம் பட்ட பின் கெட்ட பின் தான் தெரியும். இன்னும் சில பேருக்கு கெட்டோம்னு கூட தெரியாது. அதனால் காதல் விவகாரத்தில் மட்டும் கவனம்.