What's new

காதலும் 🥰காமமும் ❤️

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
What is going on !!!!
ஒரே களேபரமா அல்லோலகல்லோலப் படுது .
ஒரு டாக்ட்டர் படக்னு காதல்னு ஒரு கருமாத்திரமும் இல்லைன்னு தீர்ப்பை எழுதி போட்டுட்டு போயிட்டார்
பிரச்னை என்னன்னா கொஞ்சசத்துக்கு கொஞ்சமா காதலை அனுபவிச்ச உயிர்கள் கொழம்பிடுச்சு. அப்டின்னா நாம அனுபவச்சது காதல் இல்லியோன்னு.

அதுவன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்றும்

கொன்றிடுமென இனிதாய்
இன்பக் கொடுநெருப்பாய்
ஆனற் சுவையமுதாய்
நன்றியல் காதலுக்கே
இள நாரியர் தமையெனக் கனுப்பி வைத்தாள் என்றும் மகாகவி வியந்து பாடிய வரிகள் பொய்யானவையா?

அப்படிக்கில்லை. அது எல்லோருக்கும் கிடைக்காதாம். யாரோ சிலருக்கு தான் வாய்க்குமாம். ஏனென்றால்

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

மிகச்சிலரே அதன் அருமையை உணர்ந்துகொள்ள முயற்சி செய்ய முடியுமாம்
ஏனெனில் அந்த உணர்வு அத்தனை மென்மையானது.
காதலை உணராதவர் தம் அனுபவத்தை சொன்னதும் சரி
காதலை உணர்ந்தவர்கள் தாம் உணர்ந்த வரை உரைப்பதும் சரி.
 
Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63

ஒரு சிறு பிழை திருத்தம் தோழரே காதல் ன உயிர் னு நானும் ஏழு வருஷம் அலைஞ்சு திரிஞ்சு கடைசில காதல் காமம் னு ஒரு கருமந்தூரம் மம் இல்லைனு முடிவுக்கு வந்த தருணம் எனக்கு. அருணாச்சலம் படம் ஞாபகம் இருக்க தோழரே அதுல ரஜினிய எதுக்கு அவ்ளோ பணத்தையும் செலவு பண்ண சொல்லுவான் அப்பன் ரஜினி? சிம்பிள் ஆஹ் சொல்லனும்னா அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அது காதல் காமம் ரெண்டுத்துக்கும் பொருந்தும். ;)
 
saringa sir
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Neenga neraiiiyyyyyaaa padichavanga. Neengale sonna correct ah thaane irundhu aaganum?
Sari thaane nga.
LOVE IZ STILL BULLSHIT:D;)
Adavadu..ji ena sola varar na..kaadhal enbadhu jalli kaatu (bulls + hit) . Neenga adhu kita maatikita..komba pudichitu..adhu kuda travel pani dan aganum..but kandipa sedharam guaranteed.

edhu dan avaroda sinthanai
 
O

Ohmylove

Guest
ஒரு சிறு பிழை திருத்தம் தோழரே காதல் ன உயிர் னு நானும் ஏழு வருஷம் அலைஞ்சு திரிஞ்சு கடைசில காதல் காமம் னு ஒரு கருமந்தூரம் மம் இல்லைனு முடிவுக்கு வந்த தருணம் எனக்கு. அருணாச்சலம் படம் ஞாபகம் இருக்க தோழரே அதுல ரஜினிய எதுக்கு அவ்ளோ பணத்தையும் செலவு பண்ண சொல்லுவான் அப்பன் ரஜினி? சிம்பிள் ஆஹ் சொல்லனும்னா அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அது காதல் காமம் ரெண்டுத்துக்கும் பொருந்தும். ;)
Urukagaaya ah thottu sapdanum alli thinaa apdi than... 🤣🤣 neenga nerya saptutu vandhu pesurengaa pola pavam nama pasanga inum amuthathaiyae pakaala apram engutu nanju ahurathu🤣.... 10thum pathavan da nan nu sirichutu pongaa !! 😂

Ana enaku oru doubt?? Enga appatha solum "Periyaa thriviyam ivaru!! " Nu oru ala pathu thitum🤔?? Unga perey ipdi iruku 🤔@Thiraviyam
 
Last edited by a moderator:

Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63
Neenga neraiiiyyyyyaaa padichavanga. Neengale sonna correct ah thaane irundhu aaganum?
Sari thaane nga.
Sarcasm😉😁.neraya padichrundha mattum enna elaam terinjurukanumnu avasiyama yenna...enna porutha varai ettu suraikai kariku udhavadhu.....puriyumnu nenaikiren😉 எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. நல்லா புரிஞ்சுக்கோங்க தோழரே என்ன பொறுத்தவரை எதுவுமே எனக்கு தெரியாது நான் ஒரு முட்டாள் அப்டினு நெனச்ச தான் நான் கத்துக்க முடியும் தெரிஞ்சுக்கு முடியும் புரிஞ்சுக்க முடியும். நான் கண்டிப்பா ஒரு முட்டாள் தான் undefined அப்டி தான் இதுவரை நான் என்னை உருமாற்றி கொண்டிருக்கேன் இனிமேலும் அப்டி தான் இருப்பேன். அதுக்காக எல்லோரையும் நான் முட்டாளா இருகாபினும்னு எதிர்பார்க்கறது ஏன் தப்பு தான்.
yet still IGNORANCE IZ A BLISS AND BLESSING.IM IGNORANT AND A SCHMUCK ;) :cool:

Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
காதல் வாழ்வின் பெருமை என்ன? காதலின்மையின் குறைதான் என்ன?
ஒற்றை குறளிலே இவ்விரண்டு நிலைகளையும் ஐயன் காட்டியிருக்கிறார்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

ஒருவன் பெறத்தக்க செல்வங்கள் (பணம் மட்டும் செல்வம் இல்லை, அது பதினாறு வகைச் செல்வங்களுள் ஒன்று தான் ) எல்லாவற்றையும் பெற்றவனாக இருக்க முடியுமா? அதெப்படி சாத்தியமாகும்? என்றால் அவனுடைய காதல் மனைவி மாண்புடையவளாக அவனோடு அன்பு பொருந்தி இருப்பாளானால், அதாவது காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று பாட்டி சொன்னாரே அது போல் ஒரு காதல் மனைவி வாய்க்கப் பெறுமானால் ஐயன் நம்மை பார்த்து கேட்க்கிறார் இல்லதென்? ஏலேய் இவன்ட்ட என்னடா இல்ல?. இவன்ட்ட இல்லாதது தான் என்ன சொல்லு பாக்குறேன் என்று சேலஞ் விட்றார்.

இந்த கிருத்துருவம் புடிச்ச மனுஷன் அதோட விடாம இன்னொரு கேள்வியையும் கேட்டு தொலைச்சுட்டார். அது என்னான்னா உள்ளதென்? மேற்சொன்னது போல் மாண்புடைய காதலி வாய்க்காமல் கருத்தொற்றுமை இன்றி நீ ஒரு பக்கம் நானொரு பக்கம் என்று அமைந்து விட்டால் அது வீடல்ல. வேட்டைக்காடு. அப்படிப்பட்ட துணையுடன் வாழ்வது குடங்கருள் பாம்போடு உடனுறைந்த்தற்று என்று வேறு கவியில் எச்சரிக்கிறார். ஒருவன் அத்தகைய காதலி அமையப்பெறாமல் மற்ற எல்லா விதமான செல்வங்களும் அடுக்கடுக்காக பெற்றிருந்தாலும் (பட்டங்கள் பதவிகள் விருதுகள் மாளிகைகள் மற்றும் ஆள் அம்புகள் போன்ற பணியாட்கள் வாகனங்கள் பொருட்கள் முதலியவை) அந்த ஆளைக்காட்டி நம்மிடம் கேட்கிறார் உள்ளதென்? அவன்ட்ட என்னதான்டா இருக்கு?. அவன்ட்ட என்ன செல்வம் தான் இருக்கு சொல்லு பாக்குறேன் என்று. குசும்பு தானே? அப்போ யாருக்கு காதல் துணைவரை கொடுப்பது? யாருக்கு மறுப்பது? எது தீர்மானிக்கிறது அதனை ?

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

மற்றொன்று சூழினும் தான் முந்துறும் ஊழ் வலியது.

கல்பொரு திரங்கு மல்லர் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் பூனைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம்

அதனால் நாமும் வியக்கிறோம்
ஊழிற் பெருவலி யாவுள?
 
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது

ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.
— புலியூர் கேசிகன்

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
— மு. வரதராசன்

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
— சாலமன் பாப்பையா

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்
— மு. கருணாநிதி

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

சாலமன் பாப்பையா உரை : நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

  • ஊழின் ஆட்சி வலிமையை உணர்ந்து அறநெறியைப் போற்றி வாழ்வதே கடமையாகும்.
  • ஊழ் என்பது உலகச் சூழ்நிலை. அஃது ஒருவனுக்கு நன்று தீது ஆகிய இருதிறமும் செய்ய மாட்டுவது.
  • மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஊழ் கூறப்படுகிறது.
  • ஊழே மிக்க வலியுடைத்து; மனிதன் செய்யும் முயற்சிகளை யெல்லாம் தள்ளிக்கொண்டு தான் முன்னே வந்து நிற்கும்.
  • ஊழினால் தமக்கு வந்துள்ள கேட்டினை மாற்றிக் கொள்ளப் பலருடன் கூடிக் கலந்து பேசி பல்லாற்றான் முயற்சி செய்தாலும் ஊழின் பயனை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியாது. அப்படியானால் ஊழினை வெற்றி பெற முடியாதா, என்ற வினா எழும். ஊழினை வெற்றி பெற முடியும். வாழ்க்கையின் நோக்கமே ஊழினை வெற்றி பெறுவதுதானே!
  • வள்ளுவர் ஊழின் வலிமையை மிகமிக உயர்த்திக் காட்டியிருப்பதெல்லாம், முயற்சியின் அருமையையும் பெருமையையும் காட்டுதற்கே. ஊழை மனித முயற்சி புறங்காண வேண்டும் என்பதற்காகவே, அதற்குச் சிறுமுயற்சி போதாது, பெரு முயற்சி பெரிதும் வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே அவ்வாறு கூறினார்.
  • ஊழுக்குத் தெய்வம் என்பதும் ஒரு பெயர். தெய்வத்தின் வலிமை மனித வலிமையிலும் மேம்பட்டது. எனவே ஊழிற் பெருவலி யாவுள என்கிறார்.
  • உலகியல்பு வேறாக இருக்க நாமொன்றைச் செய்தால் அவ்வுலகியல்புப்படியே நடக்குமாகையால், அவ்வுலகியல்பை விட வலியுடைய பொருள் இல்லை என்றார்.
கல்பொரு திரங்கு மல்லர் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் பூனைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம்

கணியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நூற்றுத் தொண்ணூற்று இரண்டாம் பாட்டு

புறநானூறு

கணியர் என்பார் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறும் சோதிட நூலாராவர். இக்கணியன் பூங்குன்றனார் சமண சமயத்தவரென்று சிலரும் ஆசீவக சமயத்தவரென்று சிலரும் கூறுவர். “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் உறவினர்; கேடும் நன்மையும் தாமே வரும். அவை பிறர் நமக்குத் தர வருவன அல்ல. அவற்றைப் போன்றே துன்பப்படுதலும் துன்பம் தீர்தலும் தாமே நிகழ்வனவாகும். இறப்பு என்பது இவ்வுலகிற்குப் புதியதன்று; அவ்விறப்பு உயிர் கருவில் தோன்றிய நாள் தொடங்கியே உள்ளது. வாழ்வதை இனியதென்று மகிழ்ந்ததும் இல்லை. அதனை வெறுத்துத் துன்பமானது என்றும் கருதவில்லை. மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும்.

அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும் என அறிவுமிக்கவர் கண்டறிந்து கூறினர். அவ்வறிவைத் தெளிவாக அறிந்து கொண்டோம். ஆகவே பெருமை மிக்க பெரியோரை நாம் வியந்து போற்றுதலும் இல்லை; சிறியோரைப் பழித்தல் அப்போற்றுதலை விடவும் இல்லை” என்பது இப்பாட்டின் கருத்து.
அதனால் நாமும் வியக்கிறோம்
ஊழிற் பெருவலி யாவுள?

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.குறள் 373

நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்
புலியூர் கேசிகன்

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
மு. வரதராசன்

பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)
சாலமன் பாப்பையா

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்

மு. கருணாநிதி

KURAL1102
காமத்துப்பால்----> களவியல்----->புணர்ச்சி மகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.​

நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்
—மு. கருணாநிதி
நான் என்ன சொல்றேன் அப்படிப்பட்ட நோயே எனக்கு தேவை இல்லைங்கறேன் பிணி இருந்தால் தானே மருந்து நுகர்வோம் பிணியே நமக்கு இல்லைனா?
 
Last edited:

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
ஒரே களேபரமா அல்லோலகல்லோலப் படுது .
ஒரு டாக்ட்டர் படக்னு காதல்னு ஒரு கருமாத்திரமும் இல்லைன்னு தீர்ப்பை எழுதி போட்டுட்டு போயிட்டார்
பிரச்னை என்னன்னா கொஞ்சசத்துக்கு கொஞ்சமா காதலை அனுபவிச்ச உயிர்கள் கொழம்பிடுச்சு. அப்டின்னா நாம அனுபவச்சது காதல் இல்லியோன்னு.

அதுவன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்றும்

கொன்றிடுமென இனிதாய்
இன்பக் கொடுநெருப்பாய்
ஆனற் சுவையமுதாய்
நன்றியல் காதலுக்கே
இள நாரியர் தமையெனக் கனுப்பி வைத்தாள் என்றும் மகாகவி வியந்து பாடிய வரிகள் பொய்யானவையா?

அப்படிக்கில்லை. அது எல்லோருக்கும் கிடைக்காதாம். யாரோ சிலருக்கு தான் வாய்க்குமாம். ஏனென்றால்

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

மிகச்சிலரே அதன் அருமையை உணர்ந்துகொள்ள முயற்சி செய்ய முடியுமாம்
ஏனெனில் அந்த உணர்வு அத்தனை மென்மையானது.
காதலை உணராதவர் தம் அனுபவத்தை சொன்னதும் சரி
காதலை உணர்ந்தவர்கள் தாம் உணர்ந்த வரை உரைப்பதும் சரி.
" இள நாரியர் தமையெனக் கனுப்பி வைத்தாள் என்று"
- apdina? 😬😬
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Adavadu..ji ena sola varar na..kaadhal enbadhu jalli kaatu (bulls + hit) . Neenga adhu kita maatikita..komba pudichitu..adhu kuda travel pani dan aganum..but kandipa sedharam guaranteed.

edhu dan avaroda sinthanai
Thozhaaa sema👌👌👏👏
One para la puriya vechitteenga 🤝👍👍
images - 2023-06-11T191118.001.jpeg
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
காதல் வாழ்வின் பெருமை என்ன? காதலின்மையின் குறைதான் என்ன?
ஒற்றை குறளிலே இவ்விரண்டு நிலைகளையும் ஐயன் காட்டியிருக்கிறார்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

ஒருவன் பெறத்தக்க செல்வங்கள் (பணம் மட்டும் செல்வம் இல்லை, அது பதினாறு வகைச் செல்வங்களுள் ஒன்று தான் ) எல்லாவற்றையும் பெற்றவனாக இருக்க முடியுமா? அதெப்படி சாத்தியமாகும்? என்றால் அவனுடைய காதல் மனைவி மாண்புடையவளாக அவனோடு அன்பு பொருந்தி இருப்பாளானால், அதாவது காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று பாட்டி சொன்னாரே அது போல் ஒரு காதல் மனைவி வாய்க்கப் பெறுமானால் ஐயன் நம்மை பார்த்து கேட்க்கிறார் இல்லதென்? ஏலேய் இவன்ட்ட என்னடா இல்ல?. இவன்ட்ட இல்லாதது தான் என்ன சொல்லு பாக்குறேன் என்று சேலஞ் விட்றார்.

இந்த கிருத்துருவம் புடிச்ச மனுஷன் அதோட விடாம இன்னொரு கேள்வியையும் கேட்டு தொலைச்சுட்டார். அது என்னான்னா உள்ளதென்? மேற்சொன்னது போல் மாண்புடைய காதலி வாய்க்காமல் கருத்தொற்றுமை இன்றி நீ ஒரு பக்கம் நானொரு பக்கம் என்று அமைந்து விட்டால் அது வீடல்ல. வேட்டைக்காடு. அப்படிப்பட்ட துணையுடன் வாழ்வது குடங்கருள் பாம்போடு உடனுறைந்த்தற்று என்று வேறு கவியில் எச்சரிக்கிறார். ஒருவன் அத்தகைய காதலி அமையப்பெறாமல் மற்ற எல்லா விதமான செல்வங்களும் அடுக்கடுக்காக பெற்றிருந்தாலும் (பட்டங்கள் பதவிகள் விருதுகள் மாளிகைகள் மற்றும் ஆள் அம்புகள் போன்ற பணியாட்கள் வாகனங்கள் பொருட்கள் முதலியவை) அந்த ஆளைக்காட்டி நம்மிடம் கேட்கிறார் உள்ளதென்? அவன்ட்ட என்னதான்டா இருக்கு?. அவன்ட்ட என்ன செல்வம் தான் இருக்கு சொல்லு பாக்குறேன் என்று. குசும்பு தானே? அப்போ யாருக்கு காதல் துணைவரை கொடுப்பது? யாருக்கு மறுப்பது? எது தீர்மானிக்கிறது அதனை ?

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

மற்றொன்று சூழினும் தான் முந்துறும் ஊழ் வலியது.

கல்பொரு திரங்கு மல்லர் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் பூனைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம்

அதனால் நாமும் வியக்கிறோம்
ஊழிற் பெருவலி யாவுள?
Nandringa 🙂 thelivana arthathukku💐💐
Ithila irunthu onnu nalla theriyudhu ☺️☺️
images - 2023-06-11T192349.088.jpeg
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது

ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.
— புலியூர் கேசிகன்

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
— மு. வரதராசன்

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
— சாலமன் பாப்பையா

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்
— மு. கருணாநிதி

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

சாலமன் பாப்பையா உரை : நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

மற்றொன்று சூழினும் தான் முந்துறும் ஊழ் வலியது.

  • ஊழின் ஆட்சி வலிமையை உணர்ந்து அறநெறியைப் போற்றி வாழ்வதே கடமையாகும்.
  • ஊழ் என்பது உலகச் சூழ்நிலை. அஃது ஒருவனுக்கு நன்று தீது ஆகிய இருதிறமும் செய்ய மாட்டுவது.
  • மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஊழ் கூறப்படுகிறது.
  • ஊழே மிக்க வலியுடைத்து; மனிதன் செய்யும் முயற்சிகளை யெல்லாம் தள்ளிக்கொண்டு தான் முன்னே வந்து நிற்கும்.
  • ஊழினால் தமக்கு வந்துள்ள கேட்டினை மாற்றிக் கொள்ளப் பலருடன் கூடிக் கலந்து பேசி பல்லாற்றான் முயற்சி செய்தாலும் ஊழின் பயனை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியாது. அப்படியானால் ஊழினை வெற்றி பெற முடியாதா, என்ற வினா எழும். ஊழினை வெற்றி பெற முடியும். வாழ்க்கையின் நோக்கமே ஊழினை வெற்றி பெறுவதுதானே!
  • வள்ளுவர் ஊழின் வலிமையை மிகமிக உயர்த்திக் காட்டியிருப்பதெல்லாம், முயற்சியின் அருமையையும் பெருமையையும் காட்டுதற்கே. ஊழை மனித முயற்சி புறங்காண வேண்டும் என்பதற்காகவே, அதற்குச் சிறுமுயற்சி போதாது, பெரு முயற்சி பெரிதும் வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே அவ்வாறு கூறினார்.
  • ஊழுக்குத் தெய்வம் என்பதும் ஒரு பெயர். தெய்வத்தின் வலிமை மனித வலிமையிலும் மேம்பட்டது. எனவே ஊழிற் பெருவலி யாவுள என்கிறார்.
  • உலகியல்பு வேறாக இருக்க நாமொன்றைச் செய்தால் அவ்வுலகியல்புப்படியே நடக்குமாகையால், அவ்வுலகியல்பை விட வலியுடைய பொருள் இல்லை என்றார்.
கல்பொரு திரங்கு மல்லர் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் பூனைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம்

கணியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நூற்றுத் தொண்ணூற்று இரண்டாம் பாட்டு

புறநானூறு

கணியர் என்பார் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறும் சோதிட நூலாராவர். இக்கணியன் பூங்குன்றனார் சமண சமயத்தவரென்று சிலரும் ஆசீவக சமயத்தவரென்று சிலரும் கூறுவர். “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் உறவினர்; கேடும் நன்மையும் தாமே வரும். அவை பிறர் நமக்குத் தர வருவன அல்ல. அவற்றைப் போன்றே துன்பப்படுதலும் துன்பம் தீர்தலும் தாமே நிகழ்வனவாகும். இறப்பு என்பது இவ்வுலகிற்குப் புதியதன்று; அவ்விறப்பு உயிர் கருவில் தோன்றிய நாள் தொடங்கியே உள்ளது. வாழ்வதை இனியதென்று மகிழ்ந்ததும் இல்லை. அதனை வெறுத்துத் துன்பமானது என்றும் கருதவில்லை. மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும்.

அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும் என அறிவுமிக்கவர் கண்டறிந்து கூறினர். அவ்வறிவைத் தெளிவாக அறிந்து கொண்டோம். ஆகவே பெருமை மிக்க பெரியோரை நாம் வியந்து போற்றுதலும் இல்லை; சிறியோரைப் பழித்தல் அப்போற்றுதலை விடவும் இல்லை” என்பது இப்பாட்டின் கருத்து.
அதனால் நாமும் வியக்கிறோம்
ஊழிற் பெருவலி யாவுள?

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.குறள் 373

நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்
புலியூர் கேசிகன்

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
மு. வரதராசன்

பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)
சாலமன் பாப்பையா

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்

மு. கருணாநிதி

KURAL1102
காமத்துப்பால்----> களவியல்----->புணர்ச்சி மகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.​

நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்
—மு. கருணாநிதி
நான் என்ன சொல்றேன் அப்படிப்பட்ட நோயே எனக்கு தேவை இல்லைங்கறேன் பிணி இருந்தால் தானே மருந்து நுகர்வோம் பிணியே நமக்கு இல்லைனா?
🤔
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இந்த பதிவில் நான் ஏன் பேசவில்லை🤔 My darling Neha @Nehasankar ♥️
Nethra, நண்பன் Prakash, @Prakash
Balan @balan ,
ohmylove @Ohmylove Vanathi and our Doctor எல்லாரும் பேசியுள்ளதை முழுவதும் படித்தேன் இப்போதான்.

பதிவிட்ட Solitary வரதில்லையா இப்போ 🤔
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
இந்த பதிவில் நான் ஏன் பேசவில்லை🤔 My darling Neha @Nehasankar ♥️
Nethra, நண்பன் Prakash, @Prakash
Balan @balan ,
ohmylove @Ohmylove Vanathi and our Doctor எல்லாரும் பேசியுள்ளதை முழுவதும் படித்தேன் இப்போதான்.

பதிவிட்ட Solitary வரதில்லையா இப்போ 🤔
yaenna ungaluku love mela avlo oru hate adhaan :ROFLMAO: :D
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
காமம் என்பதென்ன??

இரு உடல்கள் பேசிக்கொள்வது!!!

காதல் என்பதென்ன??

அந்த உடல் உறவுக்குப்பின் இரு கண்கள் பேசிக்கொள்வது!!!

காதலுடன் காமமும்..
காமத்துடன் காதலும்..
பிண்ணிப் பிணைந்தவை....

உயிர் காதல்... உடல் காமம் ....

உயிரற்ற உடல் போல
காதலில்லா காமம்...

உடலற்ற உயிர் போல
காமமில்லா காதல்....

கலந்து படைக்கப்பட்ட
படைப்புகள் தானே நாமெல்லாம்.
நமது தோற்றத்தின் மூலமே அதுதானே...

ஈருயிர்கள் காதலுடனும்
காமத்துடன் இணைந்து
இன்னோர் உயிர்
இங்கே சிருஷ்டிக்கப்படுகிறது..

படித்து, உணர்ந்து, பல பிரதிகளாக
உலகிற்கு அளிக்கப்படும் புத்தங்கள் ..

இதை எப்படி வெறுக்க முடியும்..

Love and Lust are divine.
 
Top