What's new

April'23 competition

Status
Not open for further replies.

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
விடியல்கள் விரைந்திட
இரவுகளோ நீளும்
கவிதைகள் துலங்கிட
நின் நினைவுகள் கொல்லும்
விழிகளும் கசிந்திட
திசையற்ற பாதை நோக்கும்
உணர்வுகள் விழித்திட

உயிர்மெய் கருகும்
IMG_20230428_164124.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
விடியல்கள் விரைந்திட
இரவுகளோ நீளும்
கவிதைகள் துலங்கிட
நின் நினைவுகள் கொல்லும்
விழிகளும் கசிந்திட
திசையற்ற பாதை நோக்கும்
உணர்வுகள் விழித்திட

உயிர்மெய் கருகும்
View attachment 10999
Unakullaiyum🤔 ஒரு வைரமுத்து கண்ணா மூச்சி ரே ரே சொல்றாரு 🥰👌😊😁
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
உன் விழி
கணைகளால்
என்னை தாக்கினாய்!

இரத்த கசிவின்றி
இதயம் தனை
சூறையாடினாய்!

காதல்

அஹிம்சையா வன்முறையா?

IMG_20230428_165727.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
ஒவ்வொரு மௌனத்துள்ளும்
ஒராயிரம் அர்த்தங்கள்!

ஏளனித்தவரிடம்
எத்தனிக்காத மௌனம்
அவமானம்;

ஓங்கிய சுடுசொல்லால்
ஒடுங்கும் மௌனம்
ஆத்திரம்;

சீராத சினத்தில்
சிவக்கும் மௌனம்
எதிர்ப்பு;

கலைந்த கனவில்
கலையாத மௌனம்
ஏக்கம்;

துடிக்கும் மனதின்
துவண்ட மௌனம்
துக்கம்;

அசையும் உடலில்
அசையா மௌனம்
தூக்கம்;

அசையா உடலில்
உயிரின் மௌனம்
மரணம்;

மௌனம் ஆனந்தம்
மௌனமே ஆதி அந்தம்!
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
700
Points
113
கவிதை

வலிகள் எவ்வளவு தான் எனக்கு நீ தந்தாலும்..♥

நான் தாங்கி கொள்ள தயாராக இருக்கிறேன்.,

பிரிவு என்ற ஒன்றை மட்டும்.,

நீ எனக்கு தர மாட்டாய் என்ற நம்பிக்கையுடன்..♥
542bc1635dfbf4718a9d883581288fc7.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
கண்களில் மல்லிகை
இதழ்களில் ரோஜா
கரங்களில் பவளமல்லி
கால்களில் பன்னீர் புஷ்பங்கள்
மழலை மணம் பரப்பும்

புதிரான பூச்செடி இவள்!

IMG_20230428_175812.jpg
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
பறவைகளின் சப்தமே
உலகின் இனிதென
உணர்ந்தேன்
உன் மௌனம் உடையாத வரையில்!

மழையில் மயிலாட்டமே
மதிமயக்கும் மாபெரும்
செயலென்றேன்

உன் கூந்தல் கலையாத வரையில்!

IMG_20230428_180833.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
களத்து மேட்டுல போறவளே
என் மனசுல பாத்தி கட்டி
நீ நட்ட பயிருக்கு
பெயரு தான் என்னடியோ?

நெல்லு விதைக்க போறவளே
நீங்காம உன் நினைப்ப
நெஞ்சுல தான் விதைச்சுப்புட்ட
கனவுலயும் நீங்காதது ஏனடியோ?

கொலுசு குலுங்க போறவளே
கிளுக்கி சிரிக்கும் பொண்மயிலே
காதுக்குள்ள நீ நிறைச்சா - மனசுல கிங்கினிக்கும் பெயருதான் என்னடியோ?

புல்லு கட்ட தூக்கிகிட்டு
மல்லுகட்டி போறவளே
கண்ணால என்ன தாக்கிப்புட்டு
கள்ளி செய்யும் கலகம் ஏனடியோ?

சீராள புடவை உடுத்தி
சிங்காரமா போறவளே
உன் முந்தாணி படபடப்பு
எனக்கு சொல்லும் செய்தியும் என்னடியோ?

காளை நெஞ்ச கொன்னுபுட்டு
களை பறிக்க போறவளே
மாலை திரும்பும் போது - மாமனுக்கு
மறக்காம செய்தி சொல்லடியோ!



IMG_20230428_183544.jpg
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
700
Points
113
♥உறவு♥

வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும்.,

ஆறுதல் சொல்ல ஒரு உண்மையான உறவு அமையும் போது.,

கஷ்டம் கூட இஷ்டம் ஆகி விடுகிறது..😍
Capture.png
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20

உன்னை முதன்முறை
கண்ட பொழுதில் - என்னுள்
ஒராயிரம் மின்னல் வெட்டுகள்;

என் கரம் உன்னை
தொடத் துடித்ததில் - மனதுள்
நூறாயிரம் ஏக்க தாபங்கள்;

என் மீளா உழைப்பில்
மூழ்கா முயற்சியில்
உன்னைத் தொட்டடைந்த
நகரா நொடிகளில் - களிப்புடன்
விழியோரத்தில் கண்ணீர்த் திவலைகள்;

மெல்ல தடவினேன் ஒளிர்ந்தாய்
அரவணைத்தேன் ஏற்றுக் கொண்டாய்
திருக்கினேன் மு டுக்கினேன் மெதுவாய்
மென் சத்தத்தில் சுழன்றாய் சாதுவாய்;

சீராய் என்னுள் அடங்கினாய்
என்றும் நீங்கா உறவானாய்;

இதுவரை காணா உலகங்கள்
தொடா சிகரங்கள்
காணாக் காட்சிகள்
நுழையா சந்துகள்
முந்தா வழித்தடங்கள்;

முத்தமிட்டேன் மோட்சம் அடைந்தேன்
மறுபிறவியிலும் உன்னையே அடைவேன்



#BikeLove
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

பூவே.... பூவே... காதல் எந்தன் நெஞ்சில் பூத்தாயே.... ❤🥰❤ காதல் மட்டும் இல்லை என்றால் சுற்றும் பூமி நின்றிடுமே ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

பூவே இளைய பூவே.... வரம் தரும் வசந்தமே.... மலர் மீது தேங்கும் தேனே... எனக்கு தானே 😍😍😍 எனக்கு தானே ❤😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

ஜூன் போனால்.... ஜூலை காற்றே.... கண் பார்த்தால்.... காதல் காற்றே.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

முதல் நாள் இன்று.... ❤🥰 எதுவோ ஒன்று.... ❤🥰 வேறாக உனை மாற்றலாம்.... ❤🥰
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
700
Points
113
கவிதை💪

உனக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை நோக்கி செல்.,

வழிகள் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம்.,

முற்றும் இடம் முற்றிலும் உனதாகவே இருக்கும்..💪
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கவிதை💪

உனக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை நோக்கி செல்.,

வழிகள் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம்.,

முற்றும் இடம் முற்றிலும் உனதாகவே இருக்கும்..💪
Nice ❤🥰 @Anija
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
700
Points
113

கவிதை🌸

பிறந்தேன் எதுவும் இல்லாமல்..,🌸

அலைந்தேன் எல்லாம் வேண்டுமென்று..,🌸

அறிந்தேன் எதுவும் நிரந்தரம் இல்லை என்று..,🌸

உணர்ந்தேன் உயிரும் சொந்தமில்லை என்று..,🌸

கடந்தேன் நொடி மட்டுமே சொந்தம் என்று..,🌸


புரிந்தேன் இதுதான் வாழ்க்கை என்று..🌸
 
Status
Not open for further replies.
Top