What's new

April'23 competition

Status
Not open for further replies.

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

தாயாக நீதான் என் தலை கோத வந்தாய் உன் மடி மீது மீண்டும் ஜெனனம் வேண்டும் ❤🥰
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
என்னத் தாங்கி சீராட்டிய மடி
சுருங்கித்தான் போச்சு
என் உள்ளங்கை ரேகை தடவும்
மென்விரலும் வத்தித்தான் போச்சு;

இருந்தும் உன் பாசம் மட்டும்
வாழ்ந்து நிக்கும் வானம் முட்டும்;

வெத்தலைய இ டிச்சு
வாயில அதக்கிக்கிட்டு
நீ கதைக்க நான் கேப்பேன்
வாய தொறந்துகிட்டு;

மணக்கும் ராகி களி கிண்டி
உன் பாசம் முழுசா அதுல கொட்டி
நெத்திலி கருவாடோட நீ ஊட்ட
நெதமும் தி ண்பேன் பொட்டாட்ட;

அழகானு உச்சி மோந்து நீ பார்ப்ப
ஊருசனம் கண் அழிக்க
கருப்பன துணைக்கழைப்ப
முக்கூட்டு மண்ணுல சுத்தியும் போடுவ;

எந்த  தேசம் போனாலும்
என் உசுருக்குள்ள உன் வாசம்;
சுருக்கு பை ராணி
நீ சொன்ன நெறிப்படி
நான் சிறப்பா வாழ்ந்திருப்பேன்!

IMG_20230428_230506.jpg
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை❤

வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்..,❤❤

ஆனால் அன்பு♥ மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும்.❤❤
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை💚

புரிந்து நடக்க ஒரு துணையிருந்தல், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்..,

வாழ்க்கை முழுவதும்..💚
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை🌿

நீ வாழும் வாழ்க்கையை நேசி.,🌿

நீ விரும்பும் வாழ்க்கையை வாழு.,🌿

பிடித்த மனிதரோடு சிரித்து பேசு.,🌿

பிடிக்காத மனிதரோடு சிந்தித்து பேசு.,🌿


வாழ்க்கை அழகாகும்..🌿
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

காதல் கடிதம் தீட்டவே... மேகம் எல்லாம் காகிதம்... வானில் நீலம் கொண்டு வா... பேனா மையோ... தீர்ந்திடும்.... ❤🥰
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
உலக மலர்கள் ஊஞ்சலாட ஏங்கும் - கார்மேக
கூந்தல் இவளது என்றறியா மடந்தை;
இலையுதிர் கால காற்றில், தானே கிழியும் இலைகள் -
இவளது பாதம் தீண்ட தானென்று தெரியா குழந்தை !

மழைத்துளிகள் முத்தமிட்ட புல்வெளியில் -
மலர் பாதம் பதித்து நடந்ததோர் பூந்தேர்;

பூவை சுற்றி வண்டுகள் தானே வட்டமிடும் -
பூங்கொத்தை சுற்றி இப்பூவும் வட்டமிடுவதேன் ;
பூவில் வண்டு தேன் தேடும் - பிற
பூக்களில் இப்பூக்குட்டி என்ன தேடிடுமோ !


IMG_20230428_233518.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
மழைச்சாரலுக்கு வழிவிட
ஒரு ஜன்னல்
நாம் அடுக்கடுக்காய் அமர
ஒரு இருக்கை
குளிர் காய தேநீர் கோப்பை!

காற்றில் குப்பைகளை
கூட்டி பெருக்கி
மழைத்துளிகள் தெளித்து
வானவில் கோலம் போட்ட சாலையில்
உன்னுடன் ஒரு பொடிநடை!

அளவான வீடு
அளவில்லா பேச்சு
சாப்பிட ஒரு தட்டு
ஊட்டிவிட உன் கரங்கள்
உப்பில்லா உணவு
தொட்டுக்கொள்ள அலுவலக கதை!

கண்ணை உறுத்தும் நிலவு
போர்த்திகொள்ள மேகம்
அதிகாலை ஒன்பது மணியின்
விழிப்பில்
கன்னத்தில் அறையும்
உன் கூந்தல் !

உன்னை தட்டி கேட்க ஒரு பையன்
எனக்கு வாதாட ஒரு பொண்ணு
தித்திப்பாய் வாழ்க்கை
திகட்டாத காதல்!


IMG_20230428_234206.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
என் உலகம் சிறியதுதான்
எனினும் அதில் இருக்கின்றது
என் சிறகுகள் வாழ்வதற்கு போதுமான
ஒரு சிறு வானம்!

உங்கள் பிரபஞ்சம் மிகப் பெரியது
ஆயினும்
அட்டவணையிட்டு ஒரே வட்டப்பாதையில்
சுற்றிவரும் கோளினுடையது போன்றது
உங்கள் இருத்தல்!

IMG_20230428_234802.jpg
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
💜🏃‍♀️🏃‍♀️🏃‍♀️Finally one from me before the Month ends 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️💜

💜 அந்தி சாயும் நேரம்
அவன் உயிராய் நானும்
உரையாடிய நேரம் 💜

💜என் வாழ்வில் நீ நிஜம் தானா என்றேன்?
புன்சிரிப்போடு தெரியவில்லை
உன் வாழ்வில் நான் யாரென என்றான்...
என்னுடைய பதிலை எதிர்பார்த்தவனாய்... 💜

💜என் வாழ்வில் நீ நிஜமே என்றேன்...
அவன் வாழ்வில் நான் யார் என தெரிந்து கொள்ளும் ஆசையுடனே...
அதே கேள்வியுடன் அவனிடம் நான்...!💜

💜 உன் வாழ்வில் நான் நிஜமா என்றேன்?
நீ நிஜம் மட்டுமல்ல என் வாழ்வே நீதான் என்றான்...!💜

💜என் உயிரில் முழுவதுமாய்
நிறைந்தவளும் நீதான்...
என் வாழ்விற்கு புது அர்த்தம் கொடுத்தவளும் நீதான்...
என் தலை முதல் பாதம் வரை
அனு அனுவாய் கலந்தவளும் நீதான்...💜

💜கடவுளிடம் கோபம் கொண்டேன் ஏன் என் ஆயுளை குறைத்தாய் என்று...!
இன்று புரிந்து கொண்டேன்
இருப்பது சில வருடங்களானாலும் நூறு வருட காதலையும் மொத்தமாக உன்னிடம் மட்டுமே கொடுத்து விட வேண்டும் என்றான்...! 💜

💜அங்கேயே தொலைந்தேன்
மீளவும் முடியாமல்
மீள ஆசையும் இல்லாமல்
அவனுள் நான்...!💜

💜அடிமனதில் ததும்பும்
இந்த அழகிய நினைவுகள் போதாதா...
நான் ஆயுளுக்கும் அசைபோட...💜

💜அவனின் மொத்த அன்பையும் நான் மட்டுமே பெற்று விட்டேன் என்ற கர்வத்துடன்...💜

💜என்றும் அவன் நினைவுகளோடு நான்💜
friendship-break-print.jpg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை🌸

என் இதயமே என்னை காதல் செய் என்று,🌸

நான் உன்னிடம் கேட்க போவதில்லை.🌸

உன் அன்பான வார்த்தைகள் போதும் எனக்கு,🌸


உன் காதல் விருப்பத்தை என்னிடம் தெரிவிப்பதற்கு.🌸
images (2).jpeg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கவிதை🍂

வானம் ஒன்று தான் அதில் நிலவும் ஒன்று தான்.,🍂

இதயம் ஒன்று தான் அதில் வரும் காதல் ஒன்று தான்.,🍂

அந்த ஒரு காதல் உன் மீது மட்டும் தான்..🍂
images (4).jpeg
 

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
My Magic Mirror

I have always felt like a queen, palace I may not be seen
A magic mirror like the snow white's queen
made me feel like I have always been

Mirror O Mirror, who is the most beautiful today,
I dont need to ask everyday
For I see myself, the reflection, most beautiful I say

Been with me all my life, and seen it all
Messy hair, grey hair, no hair at cancer's fall
Dark circles, chapped lips, pimples big or small
Still my reflection stayed the most beautiful on the mirrored wall

Until one day, my mirror shattered into pieces
my world imploded and ceases
only then did I feel my wrinkles, burden in other faces

With one empty side of bed, whats the point now, I thought,
When a picture of the mirror, gave me the reason I sought
Made me still feel the most beautiful and a queen, until the last breath I got.

#poem
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
கதை📝
என்னவள்♥

அது பாரிஸிலிருக்கும் ஒரு கிளினிக். காலை ஏழு மணிக்கெல்லாம் அவர் கிளினிக்குக்கு வந்துவிட்டார். அவருக்கு 65 வயதுக்கு மேலிருக்கும். கட்டை விரலில் கட்டுப்போட்டிருந்தார்.

அவர்தான் கிளினிக்குக்கு வந்த முதல் நோயாளி. அவரை வரவேற்ற நர்ஸ், அவரின் பெயரைக் கேட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொண்டார். அவரை உட்காரச் சொன்னார்.
அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்த அந்த முதியவர் வாட்ச்சைப் பார்த்தார்.

பிறகு மெதுவாக எழுந்து நர்ஸிடம் வந்தார். ``ஏம்மா...‘’
``சொல்லுங்க சார்...’’
``டாக்டர் வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகுமா?’’
``இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, நீங்கதான் முதல்லயே வந்துட்டீங்களே... டாக்டர் வந்தவுடனே பார்த்துடலாம்...’’
அவர் மறுபடியும் போய் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். ஆனால், மிகவும் பரபரப்பாக இருந்தார் என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

அதற்குள் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் உள்ளே வந்தார். அந்த நர்ஸ் அந்தப் பெண்மணியை கவனிக்க ஆரம்பித்தார். முதியவர் தன் வாட்ச்சைப் பார்த்தார். அவர் உள்ளே வந்து பத்து நிமிடங்கள்தான் ஆகியிருந்தன. இன்னும் டாக்டர் வருவதற்கு 50 நிமிடங்களாவது ஆகும்.

அவருடைய பரபரப்பு கொஞ்சம் அதிகமாகியிருந்தது. நர்ஸ் அவரை ஒரு கணம் பார்த்தார். பிறகு அருகே வந்தார்.
``சார்... ஏன் இவ்வளவு பரபரப்பா இருக்கீங்க? வேற எங்கேயாவது போகவேண்டியிருக்கா?’’
``ஆமா.’’

``சரி... எதுக்காக நீங்க டாக்டரைப் பார்க்க வந்திருக்கீங்க?’’
அந்த முதியவர் தன் கட்டை விரலைக் காட்டினார். ''இதுல அடிபட்டிருந்தது. கட்டுப் போட்டிருக்கேன். அதை டாக்டர்கிட்ட காண்பிக்கணும்...’’
``அப்படியா... நானே பார்க்கிறேன். என்கூட வாங்க...’’என்ற நர்ஸ் அவரைக் கட்டுப்போடும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

கட்டை விரலில் போட்டிருந்த கட்டைப் பிரித்தார். அவர் விரலில் பட்டிருந்த காயம் ஆறியிருந்தது. நர்ஸ், மெதுவாகப் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே டிரெஸ்ஸிங் செய்ய ஆரம்பித்தார்.

``அவ்வளவு அவசரமா எங்கே சார் போகப் போறீங்க? யாரையாவது பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கீங்களா?’’
``இல்லை. நான் இன்னொரு நர்ஸிங் ஹோமுக்குப் போகவேண்டியிருக்கு.’’
``ஏன்... அங்கே இன்னொரு டாக்டரைப் பார்க்கணுமா என்ன?’’

``ம்ஹும். அங்கே என் மனைவி இருக்கா. அவளோட சேர்ந்து டிபன் சாப்பிடணும்...’’
``உங்க ஒய்ஃப் மேல உங்களுக்கு அவ்வளவு காதலா?’’
`ஆமாம்’ என்பதுபோல் அவர் தலையசைத்துச் சிரித்தார்.
நர்ஸ் கேட்டார்... ``சரி... உங்க ஒய்ஃப் அங்கே ஏன் இருக்காங்க?’’

``அவளுக்கு உடம்பு சரியில்லை. வயதான சிலருக்கு வர்ற அல்சைமர்’ஸ் டிசீஸ்ங்கிற (Alzheimer's disease) மறதி நோய்...’’
``அடடா... அப்போ நீங்க கொஞ்சம் லேட்டா போனாலும் வருத்தப்படுவாங்க இல்ல?’’
``அதெல்லாம் இல்லை. கடந்த
அஞ்சு வருஷமா நான் யாருன்னுகூட அவளுக்கு ஞாபகத்துல இல்லை.’’

``அவங்களுக்கே உங்களை அடையாளம் தெரியாதப்போ நீங்க ஏன் அவங்ககூட தினமும் சேர்ந்து சாப்பிடணும்னு நினைக்கிறீங்க?’’


முதியவர் சிரித்தபடி சொன்னார்..,♥

``அவளுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம்... எனக்கு அவளைத் தெரியுமே♥..’’


1D274906512588-today-simpson-140805.jpg
 

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
Miracle

Miracle looks like my mother's face
Glows like her cheeks even when she was in pain and forces a smile
Soft like her lips even when they are dry from all her meds and she kisses my cheeks
Hopeful like her fake expressions even when she felt lost
Brave like her voice even when she lies that she's okay
Cheerful as her eyes even when she hasn't slept all night
Pink as the pills she places on her tongue
And red as the blood she coughs out

If you ever wonder what miracle looks like
It looks like my mother's face

#poem
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Miracle

Miracle looks like my mother's face
Glows like her cheeks even when she was in pain and forces a smile
Soft like her lips even when they are dry from all her meds and she kisses my cheeks
Hopeful like her fake expressions even when she felt lost
Brave like her voice even when she lies that she's okay
Cheerful as her eyes even when she hasn't slept all night
Yellow as the pills she places on her tongue
And red as the blood she coughs out

If you ever wonder what miracle looks like
It looks like my mother's face

#poem
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Status
Not open for further replies.
Top