What's new

April'23 competition

Status
Not open for further replies.

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
பேருந்து நிறுத்தம்

கமகமவென மணக்கும் காளான் வண்டிகள்..!
வறுக்கும் சத்தம் ஒலிக்கும் வேர்க்கடலை வண்டிகள்..!

கடும் பசியுடன் பணப்பையைப் பார்க்கும் பலர்..!
நண்பர் குழுமத்துடன் பசியாறும் சிலர்..!

செல்லிடப்பேசியை செல்லமாய்
சொடுக்கும் இளம் மொட்டுக்கள்..!

தலையணியின் தாளத்திற்கு
மெதுவாய் தலையசைக்கும் பெண் சிட்டுகள்..!

எட்டாவது ஆளிற்காக
ஏங்கி நிற்கும் ஆட்டோக்கள்..!

பாதை கடக்கும் பாலம் முழுவதும்
பல வண்ண விளம்பர போட்டோக்கள்..!

ஓரிடத்தில் குவிந்து நிற்கும்,
ஈரைம்பது ஜனங்கள்..!

அனைவரின் கவனமும்
ஒன்றின் மேல் பாய்ந்து,
ஓட்டமெடுக்கும் நொடியில்..!

ஆடி அசைந்து அங்கே நுழைந்தது,
அரசுப் பேருந்து..!
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
017aa318b42fe6d1c065b9ac69acc70e.gif
💕🎶இன்பம் துன்பம் எது வந்த போதிலும் என் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது, உன் இசையும் நீயும்🎶💕
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
View attachment 10589
💕🎶இன்பம் துன்பம் எது வந்த போதிலும் என் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது, உன் இசையும் நீயும்🎶💕
🥰😍இசையும் நீயும் இக்கவியும் என்றுமே அற்புதம் 😍👌
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud
கண்கள் இரண்டால்.... உன் கண்கள் இரண்டால்.... என்னை கட்டி இழுதாய்.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

பூவாசம் புறப்படும் பெண்ணே... நான் பூவரைந்தால்.... தீ வந்து விரல் சுடும் கண்ணே.... நான் தீ வரைந்தால்.... 🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

ரகசியமானது காதல்.... மிக மிக... ரகசியமானது காதல்.... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

🥰❤ உயிரே வா.... நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி.... ❤🥰
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
pexels-pixabay-256678.jpg
உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும்..
நம்மை அழவைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது..

💔💔
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
இடை இடையே உலாவரும் உன் நினைவுகள்..♥

மனதில் தோன்றி
உயிரை குடித்த காதல்..♥

இதயத்தில் உருவாகும் மரணத்தின்
வாசலுக்கு வழிகாட்டும்..♥

இன்னொரு யுகத்தில்
நாம் முந்திக்கொள்வோம்..♥

இன்ப வாழ்க்கை சிகரத்தில்..♥
28dhanush-1.jpg
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
அவளும் நானும்

தேன் அமுது பொழியும்
வெண்திங்கள் நீயே..!
நின் வருகை நோக்கும்
சிறு கண்கள் நானே..!

மினு மினுப்பாய் ஜொலிக்கும்
மின்மினியும் நீயே..!
உனை உயர்த்திப் பறக்கும்
பொன் சிறகு நானே..!

உறை காற்றினிலே நிறையும்
பனித்துளியும் நீயே..!
உனை ஏந்தி நிற்கும்
புல்வெளியும் நானே..!

நுரை ததும்பி வழியும்
கடல் அலையும் நீயே..!
உனை அணைத்து ஏற்கும்
கடல் கரையும் நானே..!

என் எழுத்துக்கு உயிரான
உயர் எண்ணங்கள் நீயே..!
காதல் தன்னாலே சொல்லான
சொல் வண்ணங்கள் நானே..!
 

Hiroshi

Well-known member
Joined
Jul 1, 2022
Messages
313
Points
133
Dear
@Agnii ,@agamahilan ,@Anija , @Ohmylove , @Argus , @Needu , @MASK , @sita And Future Participants,

Any of your points miscalculated then please feel free to ping me. Anyway points are gets updated periodically. Everytime I am counting from the first post.

* Neenga reply la thara kavithai post ah separate ah consider pannala. Separate post ah pottu reply ku tag paninaa antha likes mm add aagum.

* Many songs in single post la irnthaa likes one time thaa add aagum. You can upload in separate post.

* Likes of Valid post only counted. Stories Article or general talk format la ilama any of story format la yeluthunga Please. Pictures, memes are not considered as valid post.

* 👍🏻😲😍 these 3 emojis mattume counts la serum. Like kuduthuttu Other emojis or your opinion neenga reply la kooda kudukalam.

Thanks for all your Support. All the Best.
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
♡♥தமிழ்♥♡

எழுத்தில் இருக்கும்
என்னையும்..♥

மனதில் இருக்கும்
உன்னையும்..♥

வெளிப்படுத்தவே முடியாமல்..♥

நமக்கான சந்திப்பு என்பது
பெரும்பாலும்..♥


மௌனத்திலேயே விடைபெறுகிறது..♥
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
Anija பாட்டு பிடிச்சிருக்கா?😂😍😜


கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்😉
என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?🙈
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?😌

மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?💕
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
நீ

அதிகாலை ஜன்னலோரம்
திரைச்சீலை விலகலின்
மேனி தழுவும்
மிதமான கதிர்வீச்சுகளில் நீ!

காற்றில் தவழ்ந்து
விழிகள் அடைத்து
செவிகள் வருடும்
மெல்லிசை பாடல்களில் நீ!

தேநீர் கோப்பை
ஏந்திய பொழுதின்
தரை நோக்கும்
வெறித்த பார்வைகளில் நீ!

தனித்த பொடிநடையின்
தோழமை தந்து
தொடர்ந்து வரும்
பூவின் நறுமணத்தில் நீ!

புலன்கள் யாவிலும் நீ!
நித்தம் என் நினைவில்
நீங்காமல் நீ!

IMG_20230413_100550.jpg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
இங்கு தான்
எங்கோ இருக்கும்…
திரும்ப தேடி,
கண்டுபிடித்து,
தூசு தட்டி
முகத்தில்
அணிய வேண்டும்,
வெட்கத்தை…...
மீண்டும் ஒரு
பெண் பார்க்கும் படலம்….

முதிர்கன்னி…!!

A39D4B55-96D3-45AC-A7C2-F30B50A26582.jpeg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
வாழும் நாள் எல்லாம்
வாழ்நாள் அல்ல;

உன் வருகைக்காக
காத்திருக்கும்- பல
நாழிகையின் தவிப்பை
அர்த்தமுள்ளதாக்கி கடக்கிறது-
உன் சந்திப்பில் நான் வாழும்

கண்ணிமை காலங்கள்!
 
Status
Not open for further replies.
Top