What's new

April'23 competition

Status
Not open for further replies.

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

கொஞ்சம்.... கொஞ்சம்.... உளறிகொட்டாவா 😍😍😍
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
விழி சவால்களின் காதல்

இருளில் வளரும் நிலவாய், கண்ணம்மா..!
நீ உன் அழகை உணர்ந்ததில்லை..!

உன் அழகை உணர ஏக்கம் கொண்டாய், கண்ணம்மா..!
தவறும் அதில் இல்லை..!

விழிகளும் தேவை இல்லை..!
எந்த ஒளிகளும் தேவை இல்லை..!
இரு உள்ளங்கள் பேசிடவே,
ஒரு ஊடகம் தேவை இல்லை..!

உன் உள்ளம் கொண்டு நீ,
என் உள்ளம் பாரடி..!
அதில் ஒளிரும் தேவதை
என்றும் நீயடி..!

#Poem
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
704
Points
113
கவிதை♥

என்வானில் வானவில் கூட
ஒரே வண்ணத்தில் தான் இருந்தது
நீ 👑 வந்த பின் தான் அது

ஏழு வண்ண வானவில் ஆனது..😍
silhouette-girl-sitting-swing-under-tree-grunge-rainbow-background-30286712.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
அணு ஆயுத
போரா புரிகிறாய்?

என்னுடலின்
ஒவ்வொரு அணுவிலும்
காதல் செலுத்தி

என்னை வீழ்த்தினாய் நீ!

IMG_20230426_071050.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
மகோற்சவம்;

நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
தேவகானம்;

இதழ்கள் வளைந்த
உன் சிரிப்புகள்
மினுக்கும் நட்சத்திரங்கள்;

முகந்திரிந்த நொடிப்பில்
நீ சுளிக்கும் உதடுகள்
வெள்ளி நீரோடைகள்;

உன் பேருவகையில்
சுருங்கும் கண்ணோரம்
என் கவி வரிகள்;

உன் முசட்டு பார்வைகளில்
நமக்கு பிறக்கவிருக்கும்
பிள்ளையின் சாயல்;

உன் மேக கூந்தல்
நான் மறையும்
மோக காடு;

மார்பில் முகம் புதைத்து
நீ அணைக்கும் நொடி
என் மகோன்னதம்!


IMG_20230426_075837.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கவிதை♥

என்வானில் வானவில் கூட
ஒரே வண்ணத்தில் தான் இருந்தது
நீ 👑 வந்த பின் தான் அது

ஏழு வண்ண வானவில் ஆனது..😍
View attachment 10958
Superb @Anija
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
மகோற்சவம்;

நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
தேவகானம்;

இதழ்கள் வளைந்த
உன் சிரிப்புகள்
மினுக்கும் நட்சத்திரங்கள்;

முகந்திரிந்த நொடிப்பில்
நீ சுளிக்கும் உதடுகள்
வெள்ளி நீரோடைகள்;

உன் பேருவகையில்
சுருங்கும் கண்ணோரம்
என் கவி வரிகள்;

உன் முசட்டு பார்வைகளில்
நமக்கு பிறக்கவிருக்கும்
பிள்ளையின் சாயல்;

உன் மேக கூந்தல்
நான் மறையும்
மோக காடு;

மார்பில் முகம் புதைத்து
நீ அணைக்கும் நொடி
என் மகோன்னதம்!


View attachment 10960
😍😍👌 அவ்ளோ feel பண்ணி எழுதிருக்க macha ❤ @Agnii
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
704
Points
113
கதை📝
நம் பார்வையை மாற்றுவோம்..

ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் கடுமையான கண் வலியால் அவதிப்பட்டான். அவர் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிகிச்சை செய்துகொள்ள முயற்சித்தார். ஆனால், எதுவும் உதவவில்லை. மேலும் கண் வலி முன்பை விட அதிகமானது. கடைசியாக, இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் என்று புகழ் பெற்ற ஒரு துறவியைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அவரிடம் சென்று தனக்கு இருக்கும் கண் பிரச்னையைச் சொன்னான்.


துறவி அவரது பிரச்னையைப் புரிந்துகொண்டு, "நீங்கள் பச்சை நிறங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், உங்கள் கண்கள் வேறு எந்த நிறத்தையும் பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்" என்று கூறினார்.

செல்வந்தன் இந்த வகையான மருத்துவத்தை விசித்திரமாகக் கண்டான். மேலும் அவர் கூறிய அந்த சிகிச்சை முறையை முயற்சிக்க முடிவு செய்தான். செல்வந்தன் ஓவியர்களைக் கூட்டி வரவழைத்து ஏராளமான பச்சை வண்ணப்பூச்சுகளை வாங்கி, துறவி கூறியதை போலவே தனது கண்ணில் விழும் ஒவ்வொரு பொருளும் பச்சை நிறத்தில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.


சில நாட்களில் அந்த செல்வந்தன் வீட்டில் அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் பச்சை நிறத்தில் இருந்தன. செல்வந்தன் சுற்றிலும் உள்ள எதுவும் வேறு எந்த நிறத்திலும் வராமல் பார்த்துக்கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு, துறவி செல்வந்தரைப் பார்க்க வந்தார்.

செல்வந்தரின் வேலைக்காரன் ஒருவன் பச்சை வண்ணப்பூச்சின் வாளியுடன் ஓடி வந்து துறவியின் மீது ஊற்றினான். துறவி வேலைக்காரனிடம் இதற்கான காரணத்தைக் கேட்டார்.

"நீங்கள் காவி வண்ணத்தில் உடை அணிந்துள்ளீர்கள். பச்சை நிறத்தை தவிர எங்கள் எஜமானர் வேறு எந்த நிறத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது…" என்று வேலைக்காரன் பதிலளித்தான்.


அதைக் கேட்டு துறவி சிரித்துவிட்டு, "அவர் அணிவதற்கு ஒரு ஜோடி பச்சை நிறக் கண்ணாடியை நீங்கள் வாங்கியிருந்தால் செலவு குறைந்திருக்கும். நீங்கள் இந்த சுவர்களுக்கு பூசிய வண்ணங்களுக்கான அனைத்தையும் சேமித்திருக்கலாம். மேலும் அவரது செல்வத்தில் பெரும் தொகையைச் சேமித்திருக்க முடியும். உங்களால் உலகத்தை பச்சையாக வரைய முடியாது." என்றார் துறவி.

செல்வந்தனுக்கும் அப்போதுதான் புரிந்தது. அடடா பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை துறவி புரிய வைத்துவிட்டார் என்று துறவியை தந்து வீட்டில் தங்கவைத்து விருந்தளித்து அனுப்பிவைத்தார்.

குறிப்பு☝💁:
உலகை வடிவமைப்பது அல்லது மாற்றுவது என்பது முட்டாள்தனம். முதலில் நம்மை வடிவமைப்போம். நம் பார்வையை மாற்றுவோம், அதன்படி உலகம் தோன்றும்.
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
மாயத்திடல்

அறியவகைப் பொக்கிஷமாம்,
அறியாதவர்களின் அன்பைப் பெறல்..!

பெரு உவகை நம் வசமாம்,
பிரியாதவர்களின் நட்பைப் பெறல்..!

இரண்டும் பெற்றால் அற்புதமாம்,
வாழ்க்கை எனும் மாயத்திடல்..!

#Poem
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
குழந்தையாய் தவம் இயற்றி வந்தோம்!

பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்து
இயற்கை அன்னையின்
மடியில் திளைத்தோம்;

தடுப்பூசி முன்பே இங்கு
சாதி அடையாளங்கள்
குத்தி கொண்டோம்;

இதழ்கள் பிரித்து மலரும் முன்னே வழிமுறையென
வண்ணம் தொலைத்தோம்;

புத்தக பொதி சுமந்து
வகுப்பறை
சிறையில் அடைந்தோம்;

ஆன்மாவை அகாலமாய்
தொலைத்து
மதிப்பெண்கள் சேர்த்தோம்;

அறிவியலுடன் ஆகபலவும் கற்று
மாய போட்டியில்
மனிதம் மறந்தோம்;

தன்னிறைவு என்னும்
உயிரொளி தொலைத்து
அறிவகந்தை வளர்த்தோம்;

அளவற்ற ஆசை பெருக்கி
அகவிருட்டில்
பணம் மோகத்தில் அலைந்தோம்;

கணினி மடியில் அகிலம் மறந்தோம்
செயற்கை வியந்து இயற்கை துறந்து
மனதின் மாசில் மூழ்கித் திளைத்தோம்;

நவீன வாடிக்கை இதுவென வாழ்ந்து
முடிவிலாவது - பிணமென
இயற்கை மண்ணை திண்போம்!

IMG_20230426_111438.jpg
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மாயத்திடல்

அறியவகைப் பொக்கிஷமாம்,
அறியாதவர்களின் அன்பைப் பெறல்..!

பெரு உவகை நம் வசமாம்,
பிரியாதவர்களின் நட்பைப் பெறல்..!

இரண்டும் பெற்றால் அற்புதமாம்,
வாழ்க்கை எனும் மாயத்திடல்..!

#Poem
Nice😍👌
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குழந்தையாய் தவம் இயற்றி வந்தோம்!

பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்து
இயற்கை அன்னையின்
மடியில் திளைத்தோம்;

தடுப்பூசி முன்பே இங்கு
சாதி அடையாளங்கள்
குத்தி கொண்டோம்;

இதழ்கள் பிரித்து மலரும் முன்னே வழிமுறையென
வண்ணம் தொலைத்தோம்;

புத்தக பொதி சுமந்து
வகுப்பறை
சிறையில் அடைந்தோம்;

ஆன்மாவை அகாலமாய்
தொலைத்து
மதிப்பெண்கள் சேர்த்தோம்;

அறிவியலுடன் ஆகபலவும் கற்று
மாய போட்டியில்
மனிதம் மறந்தோம்;

தன்னிறைவு என்னும்
உயிரொளி தொலைத்து
அறிவகந்தை வளர்த்தோம்;

அளவற்ற ஆசை பெருக்கி
அகவிருட்டில்
பணம் மோகத்தில் அலைந்தோம்;

கணினி மடியில் அகிலம் மறந்தோம்
செயற்கை வியந்து இயற்கை துறந்து
மனதின் மாசில் மூழ்கித் திளைத்தோம்;

நவீன வாடிக்கை இதுவென வாழ்ந்து
முடிவிலாவது - பிணமென
இயற்கை மண்ணை திண்போம்!

View attachment 10961
👌👌👌 cute ❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஓர் பாராமுகத்தின் கவிதை

இசைக்கும் இசையானாவளே -----
நீ இசைக்கும் வேலையிலே பறிக்குடுத்தேன் என் இதயத்தை அன்று உன் பாட்டிலே ----
முகம் தேவை இல்லை இந்த உறவிற்கு ----- காதலோ காமமோ அல்ல
பரிபூர்ண அன்பே எமக்கு உன்னிடம் வேண்டும் என் செல்லமே ❤❤❤❤❤
வேறென்ன இவ்வுலகில் வேண்டும் , ஓர் பெண்ணிடம் அதுவும் பூவாய் பிறந்து அன்பை செலுத்திடும் அவள் புன்னகைக்கு..!

😊😊😊
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
704
Points
113
Song🎶


பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு😉😍..,என்
நெஞ்சுக்குள்ளே யார்

என்று சொல்வேன்😜🙈...
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
#SoundCloud

கனவு தேவதையே... நிலவும் நீதானே... உன் நிழலும் நீதனே..... ❤😍
 
Status
Not open for further replies.
Top