- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
அதிகம் சுவாரஸ்யமான அதே சமயம் கடினமான ஒன்று. பழைய தமிழில் உரையாட வேண்டுமென்பது.இந்த Task -9 பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.. இதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்
நான் ரசித்து சிரித்து அனுபவித்தேன்.
கதாபாத்திரங்கள் உண்மையாய் தெரிந்தார்கள். ஒரு சரித்திர கதையை வாசிக்கையில் அதில் ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்வோமே அதைப்போன்று உணர்ந்தேன்.
அதிகம் சிரித்தது மந்திரி @Prakash அவர்களின் நகைச்சுவையிலும் புலம்பலிலும். அருமையான பாத்திர படைப்பு.
@Needu மக்கள் படைத் தலைவரின் கவிதை நடை உரையாடல் அழகு. @Astira இளவரசியின் கதாபாத்திரத்தில் வியந்தேன். சொல்வளம் அருமை. இவர்கள் இருவரின் காதல் வசனங்கள் சிரிக்கவும் மலைக்கவும் வைத்தன.
@Ohmylove அரசியார் எனக்கு சிவகாமியாக தெரிந்தார். உணர்வு கலந்த அதிகாரம் மிக்க பாத்திரம். அந்த தலையை எடுத்து வரச் சொன்னது நகைச்சுவை @Balan72 இறுதியில் அருமையாய் முடித்தார். அவர் கொடுந்தமிழ் போன்ற அழகுத் தமிழில் அழகாய் அதிகாரம் செய்திருந்தார்.
உண்மையான குடும்பம் போன்ற தோற்றம்.
@ThePopeye எதிரி நாட்டு அரசர் பரிதாபமாய் இருந்தாலும் வசனங்கள் கவிதைகள் அருமை. ஒரு வழி ஆனார் பாவம்
@InnocentVictim புதிய கதாபாத்திரமாய் சுவாரஸ்யம் கூட்டினார்.
@Assistantdon மிகச் சிறப்பு கதாசிரியரே!!