What's new

February Love Stories: A Journey of Hearts

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Oru story nalla irundhathala, Over thalaganathula aadatheenga, result varatum. Ethana per story padichaanganu theriyala.
Oru story ya? I think neenga LCU madiri ellathaiyum onnu serkka paarkaringanu nenaikren... Unga feelings puriyudhu... But ippadi yosichu paarungalen, what if all 3 are independent stories
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
Oru story ya? I think neenga LCU madiri ellathaiyum onnu serkka paarkaringanu nenaikren... Unga feelings puriyudhu... But ippadi yosichu paarungalen, what if all 3 are independent stories
Adhu unga mana brandhi
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
We have four characters here. Elaborate each and every character and their story behind. You can add few more wherever necessary and take this story in different direction of love filled life. Looking forward to being swept away by your imagination once again!
Goodie. I m not a story teller, nor can i fathom any fiction. So much so that i don't even read fiction. Some of the thoughts here i read and wonder how on the world people think things that ain't happened at all? Its something i m yet to comprehend. Sorry to disappoint you. You guys are amazing in weaving events and characters. Good luck. I ll read as you post.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
Goodie. I m not a story teller, nor can i fathom any fiction. So much so that i don't even read fiction. Some of the thoughts here i read and wonder how on the world people think things that ain't happened at all? Its something i m yet to comprehend. Sorry to disappoint you. You guys are amazing in weaving events and characters. Good luck. I ll read as you post.
That's how the fiction is right? It's all our imagination. Each individual will definitely have their own imagination which may or may not happen.

Keep reading and as always support everyone :)
 

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
Picture this: the brooding loner who decides to open up his heart to love, or the ambitious dreamer who dares to chase her passions against all odds. Each decision sends ripples through the fabric of their existence, reshaping their realities in unexpected ways.
is this not part of the actual plot with Karthik, Meena, Priya and Ramya?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
is this not part of the actual plot with Karthik, Meena, Priya and Ramya?
Idhu goodie edit panna portions ah 🤔 munnadi padicha madiriye gnaabagam illaiye
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
is this not part of the actual plot with Karthik, Meena, Priya and Ramya?
Not exactly, its an example but you can use it in the actual plot.

What my thought was,
Expanding the story with details on each of their life and how one's decision over something would change their entire life in different direction. And how Karthick's life would have been if his love was accepted by one of those and how that changed their life..
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
edit pannana?? poi uthu paarunga, edited irukadhu
Lol, now I remember... Edho vala vala nu ezhudhirkeenganu, straight ah story ya padikka poitten... Ippodhan padichen... Ennanamo sollirkinga, lol
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Not exactly, its an example but you can use it in the actual plot.

What my thought was,
Expanding the story with details on each of their life and how one's decision over something would change their entire life in different direction. And how Karthick's life would have been if his love was accepted by one of those and how that changed their life..
So moonu perume avana reject pannitanga? Naa chumma fun ku attakathi nu sonnen nijamaave adhudhana😂
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
Lol, now I remember... Edho vala vala nu ezhudhirkeenganu, straight ah story ya padikka poitten... Ippodhan padichen... Ennanamo sollirkinga, lol
So moonu perume avana reject pannitanga? Naa chumma fun ku attakathi nu sonnen nijamaave adhudhana😂
vazhakkam pola story ah olunga padikama ezutha aarambichiraanga. rules lam padinga. pls start from scratch. idhu oru plot avaloethan. ungalukaga note kuda poda marandhuten..
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
vazhakkam pola story ah olunga padikama ezutha aarambichiraanga. rules lam padinga. pls start from scratch. idhu oru plot avaloethan. ungalukaga note kuda poda marandhuten..
Start from scratch na? Neenga koduthirukka overview vechu oru story develop pannanum... Priya and Karthik Schooldays la irundhu... Right?
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
மனங்களில் கணங்கள்

கார்த்திக்கின் இடைவிடாது துரத்தும் இந்த நட்பும் அதை சுற்றி வரும் காதலும் வேறு வேறு திசையில் பயணித்தாலும் அதில் வந்த வண்ணங்களின் எண்ணங்கள் மாறி மஞ்சம் அடைந்து தஞ்சம் அடைந்தது..

பள்ளியில் வரும் ஒரு பார்வை காதலை கடந்தோர் பலர். அதில் கார்த்திக் மட்டும் விதிவிலக்கல்ல..

பதினொன்றாம் வகுப்பில் அவனுக்கு வந்த இனம் புரியாத ஒரு ஈர்ப்பு பிரியா மேல் இருந்தது. பிரியாவை நட்பாய் பார்த்தவன் , அதில் மெல்ல மெல்ல உருகும் மெழுகுவர்த்தி போல் அவளின் மேல் காதலை கொண்டான்..பிரியாவிற்கு இந்த காதல் தந்தது என்ன?

காலை 9 மணி பள்ளிக்கு 7 மணிக்கே அவன் வருவதற்கு ஒரே காரணம்.- பிரியா.
அவன் பார்வை தேடும் ஒரு பார்வை பிரியா பார்வை. அவளும் பார்ப்பாள்.. கார்த்திக் மீது பிரியாவிற்கு தனிப்பட்ட அக்கறை. கார்த்திக் படிப்பில் சுமார். பிரியா அப்படி அல்ல..படிப்பில் படுச்சுட்டி, டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியம்..
கார்த்திக்கு மற்றவர்களிடம் எளிதாக பேசிவிடுவான்.. ஆனால் பிரியாவிடம் மட்டும் ஒரு வித வெட்கம் கலந்த கூச்சமே..
நாட்களில் நொடிகள் நகர பிரியாவிற்கு அவன் மாற்றம் தெரிந்தது..அந்த மாற்றத்தில் இருக்கும் பார்வைகள் மட்டும் மாறாமல் இருந்தது..

பிரியா- " கார்த்திக்.."

கார்த்திக் - " சொல்லு பிரியா_

பிரியா - " பேச மாட்டியா?"

கார்த்திக் -" தெரியல"

ஏன் தெரியவில்லை என்ற தேடல் அவளுக்குள் ஒரு காதலை மெல்ல மெல்ல அரும்ப ஆரம்பித்தது..

அவர்கள் பார்வையால் மட்டுமே காதலித்தனர்..

பள்ளி அறையில் படிப்பது போல் புத்தகத்தை மேசை மேல் வைத்து அந்த நகத்தை கடித்தவாறு கருவிழி கருவியால் அவள் பார்வை இவனை கடப்பதும், அதை ரசித்து கொண்டே தெரியாத முட்டாள் போல் நடிப்பதும் எத்தனை நாட்கள் நீளும்?

கார்த்திக் அம்மாவின் சமையலுக்கு கார்த்திக் பள்ளி நண்பர்களுக்கு அலாதி பிரியம்.. மதியம் அவன் சாப்பிடவே மாட்டான். கல் விட்டு அடித்தால் பறக்கும் வௌவால்களை போல் அந்த கார்த்திக் நண்பர்கள் அவன் மதிய உணவு சாப்பாடு டப்பாவிற்காக அடித்துக்கொள்வர்..அது கார்த்திக்கு பிடிக்கும்..ஆனால் பிரியாவிற்கு அல்ல. ஆகையால் தினமும் தான் கொண்டு வரும் சாப்பாட்டில் கார்த்திக்கு ஒரு பங்கு செல்லும். ஆனால் பேசி கொள்ள மாட்டார்கள்.வேறு ஒரு தோழி மூலமாக கை மாறும்.

ஆனால் நீளம் குறைவாகவே நாட்கள் இருந்தே இருவரும் மறந்தனர்.

வருடம் இறுதி பண்ணிரெண்டாம் ஆண்டு தேர்வு வரை வந்து சென்றும் காதலை இருவரும் சொல்லாமலே விலகினர்.. ஆனால் விலகல் தொடருமா? மீண்டும் சேருமா? இது கார்த்திக் - பிரியா இருவரின் தேடலின் தேன் துளிகள், தேடிக்கொண்டே சேகரித்தன.

ஒரு வேளை சொல்லிருக்கலாம் என்ற அவனும் அவளும் ஒருமித்து யோசித்தனர்..

கார்த்திக் மற்றும் பிரியாவின் அண்ணன் காசி இருவரும் நண்பர்கள். பள்ளி தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் (Tournament )இருவரும் சந்தித்து கொண்டனர். அப்பொழுது கார்த்திக் கையில் அணிந்திருந்த கடிகாரம் பாதுகாப்பிற்காக காசியிடம் கொடுத்துவிட்டு விளையாட சென்றான். போட்டி முடித்துவிட்டு மீண்டும் வந்து பார்க்கையில் காசி அங்கு இல்லை.. தேடி விட்டு நண்பன் தானே அப்புறம் வாங்கி கொள்ளலாம் என்று சென்றுவிட்டான்..

மீண்டும் ஒருமுறை காசியை பார்க்கும் பொழுது தன் கை கடிகாரம் பற்றி கேட்கையில் " மச்சான் தங்கச்சி Room ல் வச்சேன்டா..காணும் டா , என் தங்கச்சி கிட்டயும் கேட்டேன்டா..தெரியல சொல்லிட்டா டா, Sorry Da " என்றான்..

"சரி விடுடா பார்த்துக் கொள்ளலாம்." என்று சொல்லிவிட்டு சோகமாய் சென்றவன் போல் நடித்தவனுக்கு உள்ளே அப்படி ஒரு மகிழ்ச்சி.. அவளிடம் இருக்கும்.. என்று..எது தொலைந்தது ? கடிகாரமா? இதயமா? இதயத்தின் துடிப்பும், கடிகாரத்தின் துடிப்பும் ஒன்றாகவே துடித்து நகர்ந்தது‌..

இருவரும் ஒன்றாக சேர்ந்தார்கள்..வேறு வேறு கல்லூரியில்.. எப்படியும் பார்ப்போம் என்று நம்பிக்கை மட்டுமே இருவருக்கும்..

தொலைவான ஒரு கல்லூரியில் சேர்ந்து கார்த்திக் தன்னுடைய முதலாவது ஆண்டில் காலடித்து வைத்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஆக இருந்த ஒரு விஷயம்.
தன் பள்ளியில் படித்த ரம்யா அதே கல்லூரியில் சேர்ந்து இருக்கிறாள் என்பதுதான்.

பள்ளி நாட்களில் ரம்யா மற்றும் கார்த்திக் அதிகம் பேசிக்கொண்டதே இல்லை. காரணம் ரம்யா பயந்த சுபாவம் கொண்டவள். முதல் நாள் அந்த கல்லூரியில் ரம்யா பயந்துக்கொண்டு சென்றவளுக்கு கார்த்திக் கண்டதும் ஒரு ஆனந்தம்.. தெரிந்த முகம் ..பார்த்து பழகிய முகம் ..பயந்தவளுக்கு ஒரு பதட்டத்தை போக்கியது கார்த்திக்யின் முகம்..

ரம்யா - " ஐய்யோ கார்த்திக், சத்தியமா நம்ப முடியல.. Thanks da, பயந்துகிட்டே இருந்தேன். பரவாயில்லை நீ இங்க இருக்க.. போதும்டா சாமி"

கார்த்திக் - " ரம்யா, எனக்கும் Shock தான்., புது இடம் புது life, எப்படிடா ஓட்ட போறோம் நினைச்சேன்.. பரவாயில்லை நீ இருக்க.. உன் நம்பர் கொடு. ஏதாச்சும் Helpக்கு வச்சுக்குறேன்..

ரம்யா - "88895.."

கார்த்திக் - " ஓகே மேடம் சந்திப்போம்."

ரம்யா- " பிரியா கிட்ட பேசுனியா"

கால்கள் நின்று நடுங்கின

திரும்பி பார்த்தான்.

கார்த்திக் - " என்ன சொல்ற ரம்யா, உனக்கெப்படி தெரியும்.."

ரம்யா-" பிரியா எனக்கும் பிரண்ட், "

கார்த்திக் - " பிரியா என்ன லவ் பண்ணாலா? உன்கிட்ட சொன்னாலா?"
இப்ப இருக்க இந்த கொஞ்சம் தைரியம் கூட அப்போ எனக்கு இல்லை..

ரம்யா -" yes. அவ மனசுல என்ன இருக்குனு கூட நீ ஒரு வார்த்தை கேட்கலயா? நீ பேசிடுவனு ரொம்ப எதிர்பார்த்தா டா.. "

கார்த்திக் -" பிரியா நம்பர் இருக்கா? அவகிட்ட பேச வைக்க முடியுமா?

ரம்யா- " உனக்குத்தான் பிரியா வீடு பத்தி தெரியும்ல..கஷ்டம்டா"

கார்த்திக் -" பேசனும்"

ரம்யா -" பேசிடலாம்.. இப்போ போறேன். Text பண்றேன் உனக்கு"

நகர்ந்து சென்றனர்.

நாட்கள் சென்றன.. நட்பும் கூடவே சென்றது..

அடிக்கடி இவன் பிரியா பற்றி பேசுவதை பார்க்கையில் அவன் மேல் ரம்யாவிற்கு பரிதாபம் வந்தது..

ஒருநாள் இரவில் மது அருந்திவிட்டு ரம்யாவிடம் புலம்பி தள்ளினான். ரம்யா அவனுக்கு பக்க பலமாக பாலமாக இருந்தாள்..

அவள் எங்க படிக்கிறா தெரியும்.. கண்டிப்பா நான் பேச வைக்கிறேன். என்று கூறினாள்..

அரை போதையில் "பிரியா அப்புறம் நான் பார்த்த Best நீதான்..எனக்காக இவ்வளவு பண்ற நீ? ஆனா அந்த பிரியா எங்க இருக்கா? என்ன நினைச்சு கூட பார்க்கல அவ.. பேசமா உன்னை லவ் பண்ணிருக்கலாம் " என்றான்.

" அமைதி காத்தாள்.

" ஏன் அமைதியா இருக்க? உண்மை சொல்லு உனக்கு என்ன பிடிக்கும்தானே " என்று கத்தினான்..

" கார்த்திக் நீ போதையில் ஏதேதோ பேசுற."

"நான் உண்மை பேசுறேன். நான் உன்னை லவ் பண்றேன்.. நீயும் அவள மாதிரி ஏமாத்திட்டு போய்டாதே" என்றான்..

அவள் தொடர்பை துண்டித்து நட்பையும் துண்டித்தாள்..

காலமும் காதலும் சென்றது.

இடைப்பட்ட காலத்தில் பள்ளியில் Re- Union நடைபெற்றது. அனைவருக்கும் அழைப்பு இருந்தது. நிராகரித்தனர் சிலர், சேர்ந்தனர் பலர்.நிராகரித்ததில் கார்த்தியும் உண்டு.

பழைய நண்பர்கள் மீண்டும் சேர்ந்தனர்.பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு இருந்தனர். அந்த தொகுப்பு புத்தகத்தில் இருந்த பக்கங்களில் ஒரு மூன்று பக்கங்கள் மீனா,பிரியா, ரம்யா..

ரம்யா - " மீனா உனக்கெப்படி போகுது life" குழந்தைய School இன்னும் சேர்க்கலயா?

மீனா- " போகுது, எப்படி வாழனும் இப்படிலாம் இருக்கனும் கனவு கண்டது எல்லாம் கனவாதான் இருக்கு"

ரம்யா - " ஏன்டி படிக்குற டைம்ல நீதான் சூப்பரா இருப்ப" உனக்கென்ன?

மீனா- " அழகு ஆசை எல்லாம் அப்போதான், இப்போ கடமை வேலை குழந்தை, ஆசை எல்லாம் புதைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்..பொண்ணா பொறந்தா அதுதான் கெதி.

ரம்யா -" உண்மைதான், ஆனால் உனக்கு வேணும்னா நீ தான் தேடனும்..என் வீட்டுக்காரர் என் மேல் ரொம்ப பாசம்..ஆனால் சில டைம் அதுவே ரொம்ப கடுப்பாவும் இருக்கும்..அதை பண்ணாதே, இவங்களுக்குகிட்ட பேசாதேனு, எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிகிறது பிடிக்காது..ஆனால் sometimes gentleman, happy ஆக இருக்கேன்.."

ரம்யா - " பிரியா உன் லைஃப் எப்படி போகுது..ஹே உனக்கு தெரியுமா? நானும் கார்த்திக் ஒரே காலேஜ் ல படிச்சோம்..

பிரியா- "யா, தெரியும்"

ரம்யா -" அவன் எனக்கு Propose வேற பண்ணா? "

மீனா-" உனக்குமா"

ரம்யா- "ஓ மீனா உனக்கும் பண்ணானா?

மீனா- " ஆமாம் அதெல்லாம் பெரிய கதை."

ரம்யா-" நல்ல வேளை பிரியா நீ தப்பிச்ச, இல்லைனா அந்த பொம்பள பொறுக்கிகூட வாழ்ந்திருக்க முடியாது."
அதனால்தான் தலைவரு Re-union வரல போல"

பிரியா சிரித்தாள்.

ரம்யா - " Sorry for your loss, உன் Husband accident ல் இறந்துட்டாரு நம்ம மணி சொல்லி கேள்விப்பட்டேன்.. நீ ஏன் இன்னொரு Marriage பண்ணிக்க கூடாது..உன்ன Hurt பண்ணனும் சொல்லல..but என் friend கஷ்டப்படுறா அப்படி ஒரு அக்கறை..

பிரியா - " நல்லது.. " அப்போ கார்த்திக் பொறுக்கி சொன்னதும் இப்போ நான் marriage பண்ணாலும் ரெண்டும் ஒன்னுதானே?

ரம்யா -" Practical ஆ பேசு பிரியா, அது பக்குவம் இல்லாத வயசு.. எது சரி தப்பு புரிஞ்சுக்க நேரம் எடுக்கும்..

பிரியா -" உண்மைதான், கொஞ்சம் நேரம் எடுத்தது உண்மைதான்"

ரம்யா - " புரியல "

பிரியா - " சரி உனக்கு புரியுற மாதிரி தெளிவா சொல்லுறேன். ஆசைப்பட்டது எதும் கிடைக்கல. டாக்டர் ஆகனும் ஆசை பட்டேன், கிடைக்கல, கார்த்திக் ஆசை பட்டேன், கிடைக்கல, யாரோ ஒருத்தர் என் மேல ஆசைப்பட்டு என்னை கட்டிக்கிட்டார். அதாவது நிரந்தரமா போகனும் ஆசைப்பட்டேன். கிடைக்கல. இப்படியே போகுற வழி எல்லாம் அதுவா நடந்தாலும் , ராசி இல்லாதவ பேரு வாங்குனேன்.அதை அழிக்க ஆசைப்பட்டேன். முடியல.. வாழ்க்கை வெறுத்து சாகலாம்கூட ஆசைப்பட்டேன்.அதும் நடக்கல..இப்படி எல்லாம் negative ஆக இருக்கும் பொழுது வேற ஒருத்தன் என் உடம்புக்குதான் ஆசைப்படுவான்."

ரம்யா -" என்னடி சொல்லுற "

பிரியா -" அப்படி மனசு ஆசைப்பட்டு ஒருத்தன என் வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்துடு வாழ்ந்துட்டுதான் இருக்கேன்.

ரம்யா -" அப்போ கல்யாணம் பண்ணிட்டியா?"

பிரியா-" மனசார பண்ணிக்கிட்டோம். சீக்கிரம் மத்தவங்க பார்வைக்காக பண்ணிப்போம்"

ரம்யா அதிர்ச்சி அடைந்தாள்.

ரம்யா- " அவரு என்ன ஊருடி .? என்ன Work பண்றாரு". வீட்டுக்கு தெரியுமா?

பிரியா - " அவரு Black decor company la project engineer இருக்காரு துபாய்ல.

ரம்யா -" உன் past life தெரியுமா?"

பிரியா -" சொல்லிட்டேன்."

ரம்யா -" என்ன சொன்னார்"




1000_F_187474655_oAWqyq6wEGTZQgVNJCNvwksMFNX7ughZ.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
பிரியா -" அப்போ miss பண்ணிட்டேன். இப்போ பண்ணமாட்டேன் சொன்னாரு..

ரம்யா மற்றும் மீனா - " 😳😳😳"

பிரியா - " யெஸ். நான் பொம்பள பொறுக்கியதான் கல்யாணம் பண்ண போறேன்.நான் இன்னைக்கு உங்ககிட்ட பேசுறேனா அதுக்கு காரணம் கார்த்திக்.. அன்னைக்கு கார்த்திக் உன்கிட்ட மீனாகிட்ட propose பண்ண கதை எல்லாம் தெரியும்..அதே பக்குவம் இல்லாம அவன் பண்ணிருக்கலாம்.. ஆனால் அவனுக்கு தேவைப்பட்டது ஆறுதல்தான்.காதல் இல்ல. அப்போ அவனுக்கு அத எப்படி சொல்றது தெரியாம இருந்திருக்கலாம். ஆனால் அவன்கிட்ட இருந்த காதல்விட நான் கஷ்டப்பட்ட நேரத்துல அவன் கொடுத்த அரவணைப்புதான் இன்னைக்கும் என் கூட வாழுது. நான் லவ் பண்ணிட்டேன் அதுக்காக பேசுறேன் நினைக்காதே. கார்த்திக் மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க, லவ் பண்ணி விட்டுட்டு போனவங்களும் இருக்காங்க.ஆனால் விட்ட இடத்திலிருந்து அவன் வரல, விட்டு போனது என்ன பண்ணுது பார்க்க வந்தான்.. நான் தொலைச்சதும் ஒரே காதல்தான், நான் எடுத்ததும் ஒரே காதல்.. ஒரே ஒரு வித்தியாசம், அப்போ பக்குவம் இல்ல.,இப்போ ரெண்டு பேரும் பக்குவ பட்டுருக்கோம் நம்புறோம், அவன் என்னை கல்யாணம் பண்ணனும்னு ஆசை படல, நான்தான் ஆசை படுறேன்..எனக்காகவும் அங்கே விளையாடிட்டு இருக்கிற என் பிள்ளை காகவும்" "சீக்கிரம் கல்யாணம் அப்போ கூப்பிடுவேன். இதே போல எல்லாம் வரணும்..அவன் துபாய் ல இருக்கிற ஒரே காரணத்திற்காகதான் வரல. இல்லைனா கண்டிப்பா வந்து மன்னிப்பு கேட்டுருப்பான்"


ரம்யா- சாரிடா.. எனக்கு தெரியாது.. கார்த்திக்கிட்ட பேச முடியுமா?


பிரியா - " நீ என் பிரண்ட், அவன் கண்டிப்பா உன்னை தேடி வருவான் ஒரு மனுஷனா"

மீனா -" கேட்க சந்தோஷமா இருக்கு.. அய்யோ time என்ன பிரியா? அவரு வேற Phone அடிப்பாரு"


பிரியா கையில் கட்டியிருந்த தொலைந்து போன கார்த்திக்கின் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்..

download.jpeg


காதல் என்பது திருமணம் அல்ல .. திருத்தங்களும் திருப்பங்களும் நிறைந்த திறப்பு விழா புத்தகம்..
அந்த புத்தகத்தின் பக்கங்கள் அப்படியே இருக்கும், நமக்கு தேவையான பக்கத்தை மட்டும் காரணங்களால் தவிர்த்து விடுவோம்.

சிலருக்கு அமையும் நேரத்தில் தடுமாற்றங்கள் வரலாம்., கலைந்து போகலாம், வென்று செல்லலாம், உறவுக்குள் சென்று துணைகளிடம் தேடலாம்.. ஆனால் ஒரு சில நினைவுகள் ஓரமாய் அமரும். ஒவ்வொன்றாய் நினைவில் வந்து பார்த்து விட்டு செல்லும்,


இது எழுதப்படாத ரணங்கள், அது மனங்களில் கணங்களில் ஒன்றாகி தெரியும்..
 
Last edited:

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
If you can neengalum unga story post panunga, after 27th deadline. It will tell us what were you expecting with the given plot.
I'll try to and Don post panna story padichu parunga. You will get an idea.

All you have to do is elaborate their love story and how their decision changed their life.

In don story, Priya Karthick going to be together after all those happenings and how Priya 'S life changed.

One can write how Ramya and Karthik are going to be together and how's Priya's and meenas life events taking a different path.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
27 August 2013

3pm

Priya: Avanuku enna achunu theriyala Divya, thideernu weird ah nadanthukuranu. Enaku konjam bayama iruku.

Divya: na vena ennaku ketkatuma?

Priya: venam, venam apadiyae pogatum. Let’s wait.



8pm

Divya calling Karthick

Divya: Dei, ennada panra?

Karthick: vazhakam pola friends oda veliya suthitu ippothan book eduthutu padikalama venamanu yosichitu iruken.

Divya: nee urupidra idea ve illaiya?

Karthick: ippo enna? Na nalla thana iruken?

Divya: seri apram un love ellam eppadi pogudhu?

Karthick: unaku eppadi theriyum?

Divya: chumma pottu vanguradhuthan

Karthick: adipaavi, naathan olaritena?

Divya: haha, seri sollu namma class ah? Illa D section ah

Karthick: namma class than

Divya: adapaavi, sollavae illa

Karthick: athan ippo sollitenla

Divya: yaaru? Vanitha va?

Karthick: cha ava en thangachi maari

Divya: appo nana?

Karthick: neeyum en thangachi than

Divya: appo Geetha?

Karthick: ava en akka, avala paatha love varuma?

Divya: Priya va?

Karthick: cha cha ava illa

Divya: appo yaarunu neeyae sollu

Karthick: yaarum illa, na chumma unkitta vilayatitu irundhen

Divya: idhukuthan ivaloe built up ah. Seri namma nalaki class la meet pannalam. Bye

Karthick: Bye



28 August 2013

Divya: Priya, nethu Karthick kitta pesinen

Priya: edha pathi??

Divya tells about their conversation.



Priya: so en name sollum bodhu, he said no thana?

Divya: ellarayum sister nu sonnan, unna solla layae

Priya: enaku onnum puriya, konjam bayama iruku. He is a good friend to me. En ippadi panranu theiryala. Avan kitta edhoe changes theiryudhu

Divya: vidu, paathukalam



15 September 2013



Prem: Priya, ingava

Priya: enna sollunga

Prem: nee enna innum vaanga ponganu koopitra, namma pazhagi 2 yrs aaga poguthu, innum ippadiya?

Priya: adhu illa Prem, enaku pazhakiduchu. Seri sollunga

Prem: onnum illa po, aparama peikalam

Karthick was with Prem, listening to their conversation. Karthick and Prem are close friends



14 August 2011

8am

Priya entering her class (10th std)

Priya: oye, eppayum nathana first varuven. Inaki enna nee firstu vandhuruka classla

Karthick: yen neethan first entry kudukanumnu edhavadhu rules ah?

Priya: apadilam illa, chummathan keten.





17th August 2011



Priya: inaikum neethan first pola. Romba padika aarambichitiyoe?

Karthick: enna padichalum, un alavuku mudiyuma. Chocolate saapiduriya?

Priya: enna spl inaki?

Karthick: onnumilla, enaku onnu vaanginen. Change illanu inonu kuduthutaan.

Priya:seri kudu

Karthick giving her 50paise Mango bite to Priya



And this has become routine now, Karthick comes early and waits for Priya’s arrival and give her Mango chocolate.



15 June 2012

8am

After completing their 10th, its happens that Priya and Karthick shifts school and joins the same school.

Priya: enaku indha school paatha, konjam bayama iruku. Paaka ellam annas akkas maari irukaanga. Ellarumae bayangarama irukaanga

Karthick: Puthusa paakum bodhu apaditha. Pazhagidum

Priya: nee endha group?

Karthick: na Csc, nee?

Priya: Na bio. Appo rendu perum vera vera class than. Touch la iru

Karthick: illa class shuffle pannuvaangalam, announce panna arambichitanga. Iru na poi paakuren



8.45am

Priya: Oye Karthick, ketiya? Na B section, neeyum B than

Karthick: anga than unna dailyum paaka vendiyatha pochu, inga vandhum nee thana?

Priya: unaku happy ah illaya?



16 November 2013

Prem: Priya, inga vaaa

Priya: Divya, nee poite iru 2 minsla vandhuduren

Divya: ok da

Prem: Karthick unkitta pesanumam

Divya: yen? Avanuku vaai illaya? Avanuku ennathan prechanaiya?

Prem: iru iru, edhoe thayakam



Karthick: aama na unna love panren, ippo enna adhuku?

Priya, hearing this moves away , out of the classroom

Divya: enna achu, un face yen ippadi iruku

Priya: Karthick enna love panrenu sollitan

Divya: Kalakurapo, Congratualtions.

Priya: nee vera, enaku idhellam set aagadhu. Enaku love panra idea lam illa. He is a good friend. I don’t know how I’m going to face him now.

Divya: straight ah sollidu

Priya: illa, inimel na avan kooda pesaporadhu illa. Pesina idhu stop aagadhu.



Days passed. Priya stopped talking with Karthick. And Karthick didn’t disturb her.



2nd March 2014

Friends kulla ellam greetings exchange pannikiraanga.



Priya was strong and she roams with her friends without any thoughts of Karthick but inside she felt bad.

Priya started crying all of a sudden. The whole class watching her.

Divya: enna achu da?

Priya: innum 1 month than, aparam ellam piriya poromela.

Divya: namma ellam touchla than irupome. Azhatha pls, ellarum paakuranga paaru.







10th March 2014

6pm

Priya dialling Karthick

Karthick’s mom picks up

Karthick’s mom: Hello

Priya: Hello

Karthick’s mom: yaaruda pesuradhu, unaku yaaru venum?

Priya: ……….



Karthick at the back: Yaaruma?

Karthick’s mom: theriyalada, edhoe kolathai. Theriyama calla panniduchunu ninaikiren. Edhuvm pesa maatingudhu.

Karthick: seri cut pannuma

Karthick ammakitta irundhu mobile vaangi paakuren. Priya number. He is shocked.



9pm

Karthick text Priya

Karthick: Hi

Priya: hi

11 pm

Avangalukulla conversation poitae iruku

12pm

Karthick: anaki yen azhutha?

Priya: enaku ellarayum miss panna poroma nu oru feeling irundhuchu and unna miss panna porenu ninakum podhu azhukaiya vandhuruchu

Karthick: enaku theriyum

Priya: theriyuma? Eppadi?

Karthick: I came after you that day after school. Sheela unna vazhila paathu unga veetla drop pannavanu ketta thana? And Prem kooda enna achunu ketrupaanae?

Priya : adapaavi, unaku eppadi theriyum?

Karthick: Na un pinnadi than vandhen. I wanted to make sure you are ok.

Priya: nee yen aparam enkitta anaki pesala?

Karthick: I respect your decision and don’t want to disturb you

Priya: I missed you Karthick



11th March 2014

Priya: Divya, na Karthick kitta nethu pesinen

Divya: What, yen?

Priya: theriyala, thonuchu

Divya: ippo nee thappu panrenu thonudhu. Ivaloe naal avan kitta pesama irundhutu ippo thirupiyum nee start panna avan feel pannuvanla

Priya: paathukalam vidu

Divya: nee avana love panriya?

Priya: illa





23rd March 2014


Priya: indha question padichitya?

Karthick: illa. Nee appo thoonguva

Priya: na thoongra idea illa. Night fulla padikalamnu iruken

Karthick: seri, nanum unaku company kudukuren. Important questionslam sollu. Naanum padikiren

Priya: ok done





19th September 2014



Divya hugs Priya

Divya: ennadi one yr aachu unkitta pesi? Enna achu enga pona, en yaarkoodayum contactla illa?

Prem: het Priya, eppadi iruka

Karthick: Priya

Priya: Sorry guys, ungalukae theriyum, neraiya dreams vachi irundhen en studiesla. And na ninachathu enaku kidaikala, joined in Engineering. And eppadiyoe poitu iruku. Neenga ellam eppadi irukeenga?

After few conversation Prem and Divya let them alone to talk and moved away

Karthick: Priya, oru text kooda panala. Eppadi iruka?

Priya: nalla iruken Karthick. Nee eppadi iruka? Enna panra?

Karthick: nanum Engineering than join panniten. Unkitta onnum solanum

Priya: enna sollu?

Karthick: En coll la, Ramya nu oru ponnu. Avala na love panren





To be Continued​
 
Last edited:
Top