சாத்வீக உண்ணி சொல்லிட்டு fast food pizza burger சாப்டறயே னு கேட்டுட்டார்.
எனக்கு யாராவது தெரிந்தால் சொல்லுங்க. இது உணவு மட்டும் சார்ந்ததா. சத்வம் ரஜஸ் தமஸ் எல்லாம். அல்லது குணம் சார்ந்ததா..
உணவைப் பொறுத்ததா குணம்.
படைப்பிலே முக்குணங்களும் கலந்தே இருக்கும். சித்தாந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தான் குதர்க்க வாதிகளுக்கு வாதம் செய்திட ஒரு சாக்காகவும் அமைகிறது. ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
மூன்று குணங்களும் இருக்கும். அதில் ஒன்று ஓங்கியிருக்கும். ஒரு மனிதரே சத்துவ குணம் ஓங்கியிருக்கும் பொது அருள் நிலையில் ஈகை செய்து உயிர்களின் துன்பத்தை நீக்குவிப்பார். அதே நபர் தாமசம் மிகுந்திருக்கும் போது உயிர்க்கொலை செய்து ஊனுண்பார். இம்மூன்று குணங்களும் உயிர்க்கு தேவை. இவை உயிரின் இயல்புகள். அவ்வப்போது ஓங்கியும் மங்கியும் இருக்கும். நிற்க.
அடுத்த குழப்பம். அசைவம் என்றால் தாமச உணவென்றும் சைவம் என்றால் சாத்வீக உணவென்றும் ஒரு குழப்பம். அசைவ உணவு தாமச உணவு தான். அதில் சந்தேகம் இல்லை. சில அசைவ உணவு ராஜஸம் தாமசம் இரண்டு உணர்வையும் தூண்டும். சைவ உணவிலும் தாமசம் இருக்கிறது. பூண்டு வெங்காயம் போன்ற சில நிலத்தடியில் விளையும் காய்களிலும் பட்டை கிராம்பு ஏலம் போன்ற சில மூலிகைகளில்
இன்னொன்று உணவுபழக்கம் செய்தொழிலுக்கு தக்கவாறு இருக்க வேண்டும். அல்லது ஏற்றதில்லாமல் முரணாக இருக்கக்கூடாது. இதற்கு ஒரு நடந்த வரலாற்று உண்மையை சொல்ல வேண்டும் என்றால் திபெத்தில் படைத்ததொழிலில் இருப்போர் சாத்வீகம் பழகி சத்துவம் அவர்கள் குணமாகி ரஜோ குணம் அவர்களை விட்டடக்கன்று அந்த படை ஒன்றுமில்லாம போனது படையெடுத்து வந்த சீனர்கள் படை முன்.
நமது படையிலும் தற்காலத்த்திலும் முற்காலத்தில் போர்த்தொழில் புரிவோருக்கு ஏற்ற உணவாக அசைவ உணவையும் கொடுத்திருக்கிறார்கள். முதலில் நாம் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தி க காரர்கள் போல் வெறியோடு அணுககக் கூடாது. யாருக்கு சத்துவ குணம் தேவையோ அவர்கள் ராஜஸ உணவை தாமச உணவை தவிர்க்கவேண்டும். அப்படி தவிர்த்தால் அவர்களுடைய சத்துவ குணம் ஓங்கும். அப்படியென்றால் மற்ற இரு குணங்களான ராஜசமும் தாமஸமும் அடியோடு அழிந்து போய் விடுமா? இல்லை. முடியாது. அது அமிழ்ந்திருக்கும். மிக சிறியதாக இருக்கும். ஆள்வினையுடைமை தேவைப்படும் பொது ராஜஸம் ஓங்கி நிற்கும். சினந்திடும் போது தாமசம் ஓங்கும். ஆனால் உடனே மறைந்து போயிருக்கும். ஐயனும் இதனையே குறிக்கிறார் " கணமேயும் காத்தல் அரிது" என்று. யாருக்கு கணமேயுங் காத்தல் அரிது? எல்லோருக்கும் இல்லை. குணமென்னும் குன்றேறி நின்றாருக்கு.
சினம் வரும். அடுத்த கணமே அது மறைந்து போகும். ஆனால் வெறி முற்றிய தாமச குணத்தோர் தமது சினத்தை வஞ்சசமாக ஆக்கி வருடக்கணக்கில் சுமந்து கொண்டு அலைவார்கள். அது தாமசம். செய் தொழிலைப்பொருத்து உணவுப்பழக்கம். அமைச்சு கல்வி ஆராய்ச்சி போன்றவற்றிற்கு சாத்விக குணம் உசிதம் என்பதால் அது பரிந்துரைக்க படுகிறது. ஒரு பாடகர் தமது குரல் வளத்தை காத்திட ஐஸ்கிரீம் தவிர்த்திடுவது போல, இது ஒவ்வொருவர் தேவை பொறுத்தது. ஆனால் இரண்டும் கிடைக்காது. ஐஸ்கிரீம் சாப்பிட்டால் குரல் போக வாய்ப்பிருக்கிறது நெடு நாளில். ஒரே இரவில் இல்லை.
அது போல. அசைவம் சாப்பிட்டால் சத்துவம் குறைந்து தாமசம் ஓங்கும். ஒரு நாளில் அல்ல. நெடுநாளில். அது குணமாகி மரபணுவில் பதிவதால் பொறுப்பு நம்மோடு நிற்பதில்லை. நம் வழித்தோன்றலுக்கும் கடத்துகிறோம் அந்த குணத்தை. ஒவ்வை சொல்லில் பழுதிருக்க காரணமில்லை. மெய்யறிவில் வள்ளுவருக்கு நிகரான அவர் சொல்கிறார் பாருங்க குணம் எதனால் தீர்மானிக்கப்படுகிறது என்று.
நீரளவே யாகுமாம் நீராம்பல் தாங்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாம் தாம்பெற்ற செல்வம்
குலத்தளவே யாக்குமாங் குணம்.
ஆமாம். துல்லியமாக குணம் வந்த வழியை ஒட்டி மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது.
அதிலும் இன்றைய அறிவியல் காட்டுகிறது, நிறுவுகிறது நம் மரபணுவில் எல்லா மூதாதையரின் பண்புகளில் சில ஓங்கியிருக்கும் பெரும்பாலானவை மங்கி தூங்கிக்கொண்டிருக்கும். அடுத்த வழித்தோன்றலுக்கு கடத்தப்பட்டு அவற்றிலிருந்து எது வேண்டுமென்றாலும் ஓங்கும். மங்கும். கணக்கிலே நிகழ்தகவு விளக்க வெவ்வேறு நிற குண்டுகளை ஒரு பையிலிருந்து எடுப்பது போல். நிறைய சிகப்பு குண்டுகள் சில மஞ்சள் குண்டுகள் ஒரு வெள்ளைக்குண்டு போட்டால் சிகப்பு வர வாய்ப்புக்கள் அதிகம். வெள்ளையும் மஞ்சளும் வரலாம். வாய்ப்பு குறைவு. வெறும் சிகப்பு குண்டுகளால் நிரம்பிய பையிலிருந்து நிறக்குண்டுகள் வர வாய்ப்பே இல்லை. இது அறிவியல்.
இப்போ புரியுதா தமிழன் ஒரு பழ மொழி சொன்னானே அதுக்குள் புதைந்திருக்கும் வீரியத்தை?
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஆம் இன்று நட்டு சில வாரங்களில் எடுக்கும் காய்கறி செடி அல்ல. மூணு மாசத்துல அறுத்து அடுத்த வருடத்தில் உண்டு தீர்க்கும் அரிசியல்ல தவறென்றால் கலைத்து போட்டுவிட்டு மீண்டும் புதிதாக நட. இன்று நட்டு 100 வருடம் பயன் தரும் மாமரம் அல்ல. 120 வருடம் பயன் தரும் பனைமரம் அல்ல. ஆயிரம் காலத்துக்கும் உறங்கிக்கிகொண்டிருக்கும் மரபணுவில் குணமாய். அதனால் அந்த முடிவை மிகக்கவனமாக எடுக்க வேண்டும். இழப்பதற்கு ஏதுமற்ற கயவர்களுக்கு இதில் இழப்பில்லை. இருப்பவன் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் தமது செல்வங்களை.