What's new

கதை சொல்லவா

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
பழக்கப்படுத்தப்படாத உடை, ஒப்பனைகள். முகத்தில் தெரிவது நாணமா, கவலையா, கனிவா எனக் கண்டுபிடிக்க முடியவில்லை

மெல்லிய கழுத்துச் சங்கிலி. அதில் ஒரு இதய வடிவ டாலர் மிகவும் சிறியதாக. காதில், மாணிக்கம் பதித்த சிறிய தோடு

Sema da epadi ipadilam think panureenga. Looking forward to next episode 👌👌👌😍😍😍💜💜💜💜
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

Thanks dear..
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 4

அடுத்த நாள் தான் அவளிடமிருந்து பதில் வருமென நினைத்து , அலைபேசி எடுத்துப் பார்க்கவில்லை . தொலைகாட்சியில் மூழ்கி விட்டான். தூங்கும் முன் பார்த்தால் 4 பதில்கள் அவளிடமிருந்து.

1. பிடித்திருந்தது.
2. உங்களுக்கு பிடித்ததா ?
3. சாப்பிட்டீங்களா

ஒரு மணி நேரம் கழித்து, (எதிர்பார்த்திருப்பாளோ)

4. இரவு வணக்கம்.

மாதவனுக்கு இதழோரம் ஒரு சிறு புன்னகை. மீண்டுமொரு முறை படித்தான்.

'நாளைக்கு அழைத்துப் பேசவா?'
என அனுப்பி விட்டு உறங்கினான்.

அடுத்த நாள் காலையில் அவளின் செய்தியில் தான் முழித்திருந்தான். அவளே முந்திக்கொண்டு அனுப்பியிருந்தாள்.

'காலை வணக்கம்'
'இன்று மாலை பேசலாமா'
'இனிய நாளாக அமையட்டும்'

ஒரு சிறு முன்னேற்றம் என எண்ணிக் கொண்டான்.

அவளிடம் பேச வேண்டியிருந்தது. அன்றைய நாள் ஏனோ ஆமை போல நகர்ந்தது. ஒரு யுகம் போல காத்திருந்தான்.
ஒரு வழியாக மாலை நேரம் வந்து சேர்ந்தது.

ஒரு சிறு பரபரப்புடன் அவளின் எண்ணிற்கு அழைத்தான். மணி அடித்து அடங்கியது. சிறிது நேரம் விட்டு, மீண்டும் அழைத்தான். அதே நிலைதான். ஒரு ஏமாற்றம். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றங்கள் சகஜம்தானே.

ஏதாவது வேலை இருந்திருக்கும். வண்டி ஓட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். அவளே அழைத்துப் பேசுவாள். தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினான்.

இரவில் ஒரு செய்தி வந்த சத்தம்.

...அவளாகத்தான் இருக்க வேண்டும். ..

...அவளே தான். ..

'மன்னிக்கவும். பேச முடியவில்லை. சூழ்நிலை அப்படி. இன்னோர் நாள் பேசலாமா.. ?' - அவள்

'ஒன்னும் பிரச்சினையில்லை. இன்னோர் நாள் பேசலாம்.'
'இனிய கனவுகள்' - இவன்

மறுபடியும் பேசுவதற்கு இவனும் முயற்சி செய்யவில்லை. அவளும் திரும்ப கேட்கவில்லை.

அடுத்த வந்த நாள்கள் வேகமாகக் கழிந்தன. பத்திரிக்கை தயாராகி வந்திருந்தது. சமையல் காரர் தேர்வு செய்வது, அலங்கார புக்கிங், புகைப்பட வீடியோ ஏற்பாடுகள் என ஆளாளுக்கு வேலைகளைப் பகிர்ந்து செய்து கொண்டிருந்தார்கள்.

மாதவன், அலுவலக ஊழியர்களுக்கு திருமணத் தகவலை உறுதிப்படுத்தினான். உடன் படித்தவர்களை வாட்சேப் குழுக்களில் தேடிப்பிடித்து அவர்களையும் அழைத்திருந்தான். அந்த வாரம் முழுக்க வாழ்த்துமழையில் நனைந்தான்.

அவ்வப்போது குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டார்கள். இரண்டு முறை மாற்றப்பட்ட அவளின் புரொஃபைல் புகைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தான்.

புடவையில், சல்வாரில் பார்த்திருந்த அவளை, நவ நாகரீகமாகவும் பார்த்தான். விரித்து விடப்பட்ட, தோள்களைத் தாண்டிய கூந்தல், முழங்கை வரை மடித்து விடப்பட்ட சட்டை, கார்கோ என வேறு பரிணாமம்

இவனும் ஒருமுறை சொந்த புகைப்படம் வைத்துப் பார்த்தான். விருப்ப பொம்மை வந்தது.

பத்து நாள்களே இருந்தன கல்யாணத்திற்கு.

மாதவனின் அக்கா கணவர் விசாரித்தார் இவனிடம் தனியாக.

'எல்லாம் சரியாத்தானே போய்ட்டிருக்கு? பேசிக்கறீங்களா? எத்தனை முறை சந்திச்சீங்க? ஏதாவது மனசில் இருந்தா என்கிட்ட சொல்லு' என்றார்.

'பேசிட்டுதான் இருக்கோம். விடுமுறை எடுக்கப் போவதால் பணிச்சுமை இருவருக்குமே'

என்று சமாளித்தான். தன் மனதையும் சேர்த்து சமாளித்தான்.

மணக்கும்....
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

😍😍😍❤❤❤ so cute 👌👌 @Vennilaa eagerly awaiting for next episode.... மாதவன் இடத்துல நம்ம இருந்தா என்ன பண்ணிட்டு irupome கர அளவுக்கு ur story went deep into my heart 🥰❤ very nice da👌😍
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
😍😍😍❤❤❤ so cute 👌👌 @Vennilaa eagerly awaiting for next episode.... மாதவன் இடத்துல நம்ம இருந்தா என்ன பண்ணிட்டு irupome கர அளவுக்கு ur story went deep into my heart 🥰❤ very nice da👌😍
Thank you
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 5

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்!!!!
- வாரணமாயிரம்

வீடே கல்யாணக் களை கட்டியிருந்தது..
நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்திருந்தனர்.

பந்தக்கால் நட்டு, வாழைக்குலைகள் இருபுறமும் தோரணமாக இருக்க, குத்து விளக்கு மின்னுமாறு அழகான பந்தல் வாசலை நிறைத்திருந்தது. கதவு நிலவில் மாவிலைத் தோரணம்.
வாசலில் வண்ணக் கோலம்..
நாற்காலிகள், உணவு மேஜைகள் போட்டிருந்தனர்..

விஷேசம் பிரதிபலித்தது எங்கும்.

மாதவனின் ஒரே நண்பன் ஒருவனும் வந்திருந்தான். துணை மாப்பிள்ளையாக.. பள்ளிப்பருவத் தோழன் .

சிலபல சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தன.
மாலையில் ஒரு சடங்கு.. மாப்பிள்ளையை அமர வைத்து, தலையில் நீர் ஊற்றி ஒரு சீர் செய்தார்கள். அப்போது, பெண்ணிற்கும் அவள் வீட்டில் அதே நேரத்திலென பேசி வைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு குளிருமே என்று இவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்ற யோசனையை கைவிட்டான்.

சீரியல் விளக்குகளால் வீடு பிராசித்தது

இருவரும் ஒரே ஊர்தான் என்பதால் போக்குவரத்து எளிதுதான்...மண்டபம் செல்ல, வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவில் கல்யாண மண்டபம் செல்ல வேண்டும்..

அடம்பிடித்துக்கொண்டிருந்த சில வாண்டுகள், பழக்கவழக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த சில பெரியவர்கள், கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சில அதிகார வகை உறவினர்கள், பட்டுப்புடவைகள், மலர்களின் வாசம், அணிகலன்கள் என பெண்கள் வசீகரிக்க , சீர் தட்டுகள் சகிதமாக, புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டே புறப்பட்டனர்.

முக்கால் மணி நேரத்தில் மண்டப இடத்தை அடைந்தனர்...

மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தின் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று காத்திருந்தார்கள். பெண் வீட்டார் வந்து அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு எனும் வழக்கம்.

மண்டபத்தின் முகப்பில் மாதவனுக்கு அருகில் அவளது பெயர் பெரிதாக வரையப்பட்டு பெரிய பதாகை வைத்திருந்தனர்.

இவனுக்கு கண்களில் ஒரு கண நேர மகிழ்வு.

மாதவனின் நண்பன் அவனுடன் இருந்து கொண்டான் மாப்பிள்ளை அறையில்..

இரவு உணவிற்குப் பின் முக்கிய உறவினர்கள் அமர்ந்திருக்க நிச்சயதார்த்தம் ஆரம்பமானது .

நீல வண்ணப் பட்டுப்புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள். அருகில் சில பெண்களுடன் சேர்ந்து..

வந்தவள், மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த புடவை வைத்திருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள்.

அதிகம் நேரமெடுக்காமல், மாதவன் தேர்ந்தெடுத்திருந்த மயில் தோகை நிறப் புடவையில் வந்தாள். இரவிற்கு ஏற்றாற் போல கல் பதித்த அணிகலன்கள். நெற்றிச் சுட்டி மட்டும் புதியதாகச் சேர்ந்திருந்தது. மிதமான, கண்களை உறுத்தாத ஒப்பனை.

பல சீர் தட்டுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. தட்டு மாற்றிக் கொண்டார்கள். சம்பிரதாயம் அதுதானாம்.

'கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நிக்கறது, எங்க காலத்தில் எங்க இருந்தது., இப்போ எல்லாமே மாறிடுச்சு'

எனும் பெரியவர்களின் ஆதங்க முனுமுனுப்புகளோடு , மாலை அணிவிக்கப்பட்டு அருகருகே அமர வைக்கப்பட்டு இருந்தனர் இவனும் அவளும். முகங்களில் சந்தன பூசல்களும், தலைகளில் அட்சதை பூக்களும் .. புகைப்படக்காரர்கள் கடமையே முக்கியமாக சில உறவினர்களை பகைத்துக் கொண்டு வேலை செய்தனர்.

நிச்சயதார்த்தம் எனும் அத்தியாயம் இனிதே முடிந்திருந்தது.

விடிந்தால் கல்யாணம் ...

மணக்கும்...
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20

இருவரும் ஒரே ஊர்தான் என்பதால் போக்குவரத்து எளிதுதான்...மண்டபம் செல்ல வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவில் கல்யாண மண்டபம் செல்ல வேண்டும்..

அடம்பிடித்துக்கொண்டிருந்த சில வாண்டுகள், பழக்கவழக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த சில பெரியவர்கள், கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சில அதிகார வகை உறவினர்கள், பட்டுப்புடவைகள், மலர்களின் வாசம், அணிகலன்கள் என பெண்கள் வசீகரிக்க , சீர் தட்டுகள் சகிதமாக, புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டே புறப்பட்டனர்.

முக்கால் மணி நேரத்தில் மண்டப இடத்தை அடைந்தனர்...

மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தின் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று காத்திருந்தார்கள். பெண் வீட்டார் வந்து அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு எனும் வழக்கம்.

மண்டபத்தின் முகப்பில் மாதவனுக்கு அருகில் அவளது பெயர் பெரிதாக வரையப்பட்டு பெரிய பதாகை வைத்திருந்தனர்.

இவனுக்கு கண்களில் ஒரு கண நேர மகிழ்வு.

மாதவனின் நண்பன் அவனுடன் இருந்து கொண்டான் மாப்பிள்ளை அறையில்..

இரவு உணவிற்குப் பின் முக்கிய உறவினர்கள் அமர்ந்திருக்க நிச்சயதார்த்தம் ஆரம்பமானது .

நீல வண்ணப் பட்டுப்புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள். அருகில் சில பெண்களுடன் சேர்ந்து..

வந்தவள், மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த புடவை வைத்திருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள்.

அதிகம் நேரமெடுக்காமல், மாதவன் தேர்ந்தெடுத்திருந்த மயில் தோகை நிறப் புடவையில் வந்தாள். இரவிற்கு ஏற்றாற் போல கல் பதித்த அணிகலன்கள். நெற்றிச் சுட்டி மட்டும் புதியதாகச் சேர்ந்திருந்தது. மிதமான கண்களை உறுத்தாத ஒப்பனை.

பல சீர் தட்டுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. தட்டு மாற்றிக் கொண்டார்கள். சம்பிரதாயம் அதுதானாம்.

'கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நிக்கறது, எங்க காலத்தில் எங்க இருந்தது., இப்போ எல்லாமே மாறிடுச்சு'

எனும் பெரியவர்களின் ஆதங்க முனுமுனுப்புகளோடு , மாலை அணிவிக்கப்பட்டு அருகருகே அமர வைக்கப்பட்டு இருந்தனர் இவனும் அவளும். முகங்களில் சந்தன பூசல்களும், தலைகளில் அட்சதை பூக்களும் .. புகைப்படக்காரர்கள் கடமையே முக்கியமாக சில உறவினர்களை பகைத்துக் கொண்டு வேலை செய்தனர்.

நிச்சயதார்த்தம் எனும் அத்தியாயம் இனிதே முடிந்திருந்தது.

விடிந்தால் கல்யாணம் ...

மணக்கும்...
Wow... Semmaiya ezhudhura... Appadiye andha scenario ellam Kan Munna kondu varradhuku oru Thani skill venumm... And you have it ...

Apram oru doubt.. Vaaranam aayiram nu oru stanza mention pannirka? What is that
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
Wow... Semmaiya ezhudhura... Appadiye andha scenario ellam Kan Munna kondu varradhuku oru Thani skill venumm... And you have it ...

Apram oru doubt.. Vaaranam aayiram nu oru stanza mention pannirka? What is that

@Agnii

Thanks anna.

வாரணம் ஆயிரம், வைணவ ஆழ்வார் ஆண்டாள் எழுதிய பாசுரம்.

கண்ணனை(இறைவனை) மாப்பிள்ளையாக நினைத்து, திருமணத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கனவு கண்டது போல தோழியிடம் சொல்வதாக எழுதப்பட்டிருக்கும்.

நாளைக்குத் திருமணம் என்று நாள் குறிச்சு , பாக்குமரப் பட்டைகளால் அலங்கரிச்சு, அழகான மணப் பந்தல் போட்டு அதன் கீழே அழகான மிடுக்கான, அப்டியே ஒரு ஒளிவட்டம் தெரியும், மாதவன் என்ற பெயருடைய மாப்பிள்ளை கம்பீரமாகப் புகுவது போன்று கனாக் கண்டேன் தோழி.. என்கிறாள்..

மாதவன் னா, கண்ணனின் இன்னொரு பெயர். நம்ம மாப்பிள்ளைக்கும் அதே பேர்தான்..

கல்யாணத்துக்கு முன்னாடி நாள் இந்த stanza பொருந்தும்...

Watch this song

Last edited:

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 5

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்!!!!
- வாரணமாயிரம்

வீடே கல்யாணக் களை கட்டியிருந்தது..
நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்திருந்தனர்.

பந்தக்கால் நட்டு, வாழைக்குலைகள் இருபுறமும் தோரணமாக இருக்க, குத்து விளக்கு மின்னுமாறு அழகான பந்தல் வாசலை நிறைத்திருந்தது. கதவு நிலவில் மாவிலைத் தோரணம்.
வாசலில் வண்ணக் கோலம்..
நாற்காலிகள், உணவு மேஜைகள் போட்டிருந்தனர்..

விஷேசம் பிரதிபலித்தது எங்கும்.

மாதவனின் ஒரே நண்பன் ஒருவனும் வந்திருந்தான். துணை மாப்பிள்ளையாக.. பள்ளிப்பருவத் தோழன் .

சிலபல சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தன.
மாலையில் ஒரு சடங்கு.. மாப்பிள்ளையை அமர வைத்து, தலையில் நீர் ஊற்றி ஒரு சீர் செய்தார்கள். அப்போது, பெண்ணிற்கும் அவள் வீட்டில் அதே நேரத்திலென பேசி வைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு குளிருமே என்று இவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்ற யோசனையை கைவிட்டான்.

சீரியல் விளக்குகளால் வீடு பிராசித்தது

இருவரும் ஒரே ஊர்தான் என்பதால் போக்குவரத்து எளிதுதான்...மண்டபம் செல்ல, வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவில் கல்யாண மண்டபம் செல்ல வேண்டும்..

அடம்பிடித்துக்கொண்டிருந்த சில வாண்டுகள், பழக்கவழக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த சில பெரியவர்கள், கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சில அதிகார வகை உறவினர்கள், பட்டுப்புடவைகள், மலர்களின் வாசம், அணிகலன்கள் என பெண்கள் வசீகரிக்க , சீர் தட்டுகள் சகிதமாக, புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டே புறப்பட்டனர்.

முக்கால் மணி நேரத்தில் மண்டப இடத்தை அடைந்தனர்...

மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தின் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று காத்திருந்தார்கள். பெண் வீட்டார் வந்து அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு எனும் வழக்கம்.

மண்டபத்தின் முகப்பில் மாதவனுக்கு அருகில் அவளது பெயர் பெரிதாக வரையப்பட்டு பெரிய பதாகை வைத்திருந்தனர்.

இவனுக்கு கண்களில் ஒரு கண நேர மகிழ்வு.

மாதவனின் நண்பன் அவனுடன் இருந்து கொண்டான் மாப்பிள்ளை அறையில்..

இரவு உணவிற்குப் பின் முக்கிய உறவினர்கள் அமர்ந்திருக்க நிச்சயதார்த்தம் ஆரம்பமானது .

நீல வண்ணப் பட்டுப்புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள். அருகில் சில பெண்களுடன் சேர்ந்து..

வந்தவள், மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த புடவை வைத்திருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள்.

அதிகம் நேரமெடுக்காமல், மாதவன் தேர்ந்தெடுத்திருந்த மயில் தோகை நிறப் புடவையில் வந்தாள். இரவிற்கு ஏற்றாற் போல கல் பதித்த அணிகலன்கள். நெற்றிச் சுட்டி மட்டும் புதியதாகச் சேர்ந்திருந்தது. மிதமான, கண்களை உறுத்தாத ஒப்பனை.

பல சீர் தட்டுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. தட்டு மாற்றிக் கொண்டார்கள். சம்பிரதாயம் அதுதானாம்.

'கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நிக்கறது, எங்க காலத்தில் எங்க இருந்தது., இப்போ எல்லாமே மாறிடுச்சு'

எனும் பெரியவர்களின் ஆதங்க முனுமுனுப்புகளோடு , மாலை அணிவிக்கப்பட்டு அருகருகே அமர வைக்கப்பட்டு இருந்தனர் இவனும் அவளும். முகங்களில் சந்தன பூசல்களும், தலைகளில் அட்சதை பூக்களும் .. புகைப்படக்காரர்கள் கடமையே முக்கியமாக சில உறவினர்களை பகைத்துக் கொண்டு வேலை செய்தனர்.

நிச்சயதார்த்தம் எனும் அத்தியாயம் இனிதே முடிந்திருந்தது.

விடிந்தால் கல்யாணம் ...

மணக்கும்...
Super da.. nalla ezhuthu nadai iruku ungaluku.. 1st epi kum 5th epi kum neraya difference writing la. 👏👏👏Arumai
 
Last edited:

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
@Vennilaa thozhi - enda 4 lines, 2 lines kadhai edum kedyadha? iskul book ah pakra madriye ekru ne post panradhu, 2 line dan padichen - adkula thookam vandrchu thozhi!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

நான் போட்ட பூமாலை

மணம் - 5

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்!!!!
- வாரணமாயிரம்

வீடே கல்யாணக் களை கட்டியிருந்தது..
நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்திருந்தனர்.

பந்தக்கால் நட்டு, வாழைக்குலைகள் இருபுறமும் தோரணமாக இருக்க, குத்து விளக்கு மின்னுமாறு அழகான பந்தல் வாசலை நிறைத்திருந்தது. கதவு நிலவில் மாவிலைத் தோரணம்.
வாசலில் வண்ணக் கோலம்..
நாற்காலிகள், உணவு மேஜைகள் போட்டிருந்தனர்..

விஷேசம் பிரதிபலித்தது எங்கும்.

மாதவனின் ஒரே நண்பன் ஒருவனும் வந்திருந்தான். துணை மாப்பிள்ளையாக.. பள்ளிப்பருவத் தோழன் .

சிலபல சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தன.
மாலையில் ஒரு சடங்கு.. மாப்பிள்ளையை அமர வைத்து, தலையில் நீர் ஊற்றி ஒரு சீர் செய்தார்கள். அப்போது, பெண்ணிற்கும் அவள் வீட்டில் அதே நேரத்திலென பேசி வைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு குளிருமே என்று இவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்ற யோசனையை கைவிட்டான்.

சீரியல் விளக்குகளால் வீடு பிராசித்தது

இருவரும் ஒரே ஊர்தான் என்பதால் போக்குவரத்து எளிதுதான்...மண்டபம் செல்ல, வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவில் கல்யாண மண்டபம் செல்ல வேண்டும்..

அடம்பிடித்துக்கொண்டிருந்த சில வாண்டுகள், பழக்கவழக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த சில பெரியவர்கள், கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சில அதிகார வகை உறவினர்கள், பட்டுப்புடவைகள், மலர்களின் வாசம், அணிகலன்கள் என பெண்கள் வசீகரிக்க , சீர் தட்டுகள் சகிதமாக, புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டே புறப்பட்டனர்.

முக்கால் மணி நேரத்தில் மண்டப இடத்தை அடைந்தனர்...

மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தின் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று காத்திருந்தார்கள். பெண் வீட்டார் வந்து அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு எனும் வழக்கம்.

மண்டபத்தின் முகப்பில் மாதவனுக்கு அருகில் அவளது பெயர் பெரிதாக வரையப்பட்டு பெரிய பதாகை வைத்திருந்தனர்.

இவனுக்கு கண்களில் ஒரு கண நேர மகிழ்வு.

மாதவனின் நண்பன் அவனுடன் இருந்து கொண்டான் மாப்பிள்ளை அறையில்..

இரவு உணவிற்குப் பின் முக்கிய உறவினர்கள் அமர்ந்திருக்க நிச்சயதார்த்தம் ஆரம்பமானது .

நீல வண்ணப் பட்டுப்புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள். அருகில் சில பெண்களுடன் சேர்ந்து..

வந்தவள், மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த புடவை வைத்திருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள்.

அதிகம் நேரமெடுக்காமல், மாதவன் தேர்ந்தெடுத்திருந்த மயில் தோகை நிறப் புடவையில் வந்தாள். இரவிற்கு ஏற்றாற் போல கல் பதித்த அணிகலன்கள். நெற்றிச் சுட்டி மட்டும் புதியதாகச் சேர்ந்திருந்தது. மிதமான, கண்களை உறுத்தாத ஒப்பனை.

பல சீர் தட்டுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. தட்டு மாற்றிக் கொண்டார்கள். சம்பிரதாயம் அதுதானாம்.

'கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நிக்கறது, எங்க காலத்தில் எங்க இருந்தது., இப்போ எல்லாமே மாறிடுச்சு'

எனும் பெரியவர்களின் ஆதங்க முனுமுனுப்புகளோடு , மாலை அணிவிக்கப்பட்டு அருகருகே அமர வைக்கப்பட்டு இருந்தனர் இவனும் அவளும். முகங்களில் சந்தன பூசல்களும், தலைகளில் அட்சதை பூக்களும் .. புகைப்படக்காரர்கள் கடமையே முக்கியமாக சில உறவினர்களை பகைத்துக் கொண்டு வேலை செய்தனர்.

நிச்சயதார்த்தம் எனும் அத்தியாயம் இனிதே முடிந்திருந்தது.

விடிந்தால் கல்யாணம் ...

மணக்கும்...
நாடகம் பாக்கற மாறியே இருக்கு da 🥰👌👌👌👌 awsum @Vennilaa white moon 🥰❤ next day ❤மாதவனுக்கு கல்யாணம்❤..... Awaiting for that.... Very interesting part....
🥰மாதவ கல்யாண வைபோகமே 🥰 சொல்ல துடிக்கும் உதடுகள்... M 🥰🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Agnii

Thanks anna.

வாரணம் ஆயிரம், வைணவ ஆழ்வார் ஆண்டாள் எழுதிய பாசுரம்.

கண்ணனை(இறைவனை) மாப்பிள்ளையாக நினைத்து, திருமணத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கனவு கண்டது போல தோழியிடம் சொல்வதாக எழுதப்பட்டிருக்கும்.

நாளைக்குத் திருமணம் என்று நாள் குறிச்சு , பாக்குமரப் பட்டைகளால் அலங்கரிச்சு, அழகான மணப் பந்தல் போட்டு அதன் கீழே அழகான மிடுக்கான, அப்டியே ஒரு ஒளிவட்டம் தெரியும், மாதவன் என்ற பெயருடைய மாப்பிள்ளை கம்பீரமாகப் புகுவது போன்று கனாக் கண்டேன் தோழி.. என்கிறாள்..

மாதவன் னா, கண்ணனின் இன்னொரு பெயர். நம்ம மாப்பிள்ளைக்கும் அதே பேர்தான்..

கல்யாணத்துக்கு முன்னாடி நாள் இந்த stanza பொருந்தும்...

Watch this song

அற்புதம் 🥰👌👌👌
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
நாடகம் பாக்கற மாறியே இருக்கு da 🥰👌👌👌👌 awsum @Vennilaa white moon 🥰❤ next day ❤மாதவனுக்கு கல்யாணம்❤..... Awaiting for that.... Very interesting part....
🥰மாதவ கல்யாண வைபோகமே 🥰 சொல்ல துடிக்கும் உதடுகள்... M 🥰🥰
Thank you @Argus
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

நான் போட்ட பூமாலை

மணம் - 6

கார் பயணத்தில், கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த மாதவனை, ஓட்டுநரின் குரல் நிகழ்காலத்துக்கு அழைத்திருந்தது...

'தம்பி.....'

'இங்க விட்டா கொஞ்சம் தூரத்திற்கு சாப்பிட வேற நல்ல உணவகம் கிடைக்காது..சாப்டுட்டு போய்டலாமா ' எனக் கேட்டிருந்தார்.

காலைச் சிற்றுண்டிக்கு பிறகு எதுவுமே அருந்தியிருக்கவில்லை.
உடன் பயணித்தவளுக்கும் பசித்திருக்க வேண்டும். மதிய உணவு வேளையைத் தாண்டியிருந்த நேரம். உணவருந்தினார்கள்..

அவள் கேட்டாள்.. ' ஹோட்டல் ரூம் புக் பன்னியாச்சா மேடி.., இல்ல போய்தான் பாத்துக்கனுமா...'

'நேத்தே பன்னிட்டேன் '
ஒரே வரியில் பதிலளித்தான்..

உணவு காலியாகி இருந்தது அவள் தட்டில்.. பாவம் பசியில் இருந்திருப்பாள் போல..
இவனுக்குத் தான் உணவு இறங்க மறுத்தது. பேருக்கு சாப்பிட்டான்.. கவனித்துக் கொண்டிருந்த அவள் கேட்டாள்,

'ஆர் யூ ஓகே??'

'ம்ம்'

மேலும் கீழுமாக தலையாட்டினான்.. அதற்கு மேல் அவளும் வாய் திறக்கவில்லை..

பயணம் தொடர்ந்தது..

விடுபட இயலாத நினைவுகள் மீண்டும் ஆக்கிரமித்தன விடுவேனா என்று...

விடிந்தால் கல்யாணம்...

வாழ்வில் மறக்க இயலாத முக்கியமான நாள்கள் என்றால், பிறந்த நாள், வேலையில் சேர்ந்த நாள், திருமண நாள்..

இதில் மூன்றாவது முக்கிய நாள் நாளை.. மாதவனின் நண்பன் இவனிடம் கதை பேசிக் கொண்டிருந்தான்.. அப்படியே தூங்கியும் விட்டான்..

இவனுக்கு பல வேறுபட்ட கலவையாண உணர்வுகள். பரவசம், பயம், ஆவல் என சிலவற்றை சொல்லலாம் வெளிப்படையாகவே. .

இன்றாவது அவளிடம் பேசி விடலாமா. திருமணத்திற்கு முன் பேசவில்லை என்பதை மாற்றி விடலாமா, என எண்ணினான்.

வழக்கம் போல செய்தி தான் அனுப்பினான். ஆனால் குரலில் ..

'ஹலோ ..தூங்கியாச்சா? ' - இவன்

'ஹலோ...இன்னும் இல்லை.. நீங்க? '
- அவள்

'தூக்கம் இன்னும் வரலை' - இவன்

' காலைல 3 மணிக்கே அழகு நிலையத்திலிருந்து வருவாங்க. கொஞ்சம் தூங்கினா தான் முடியும்., நீங்க தூங்கலையா..சீக்கிரம் தூங்குங்க..'
- நீண்டதாக அவள் குரலில் செய்தி

'தூங்கறேன்.. குட் நைட்' - இவன்

'குட் நைட்' - அவள்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம்..ஏதேதோ சத்தங்கள்..அவள் சொன்ன 3 மணி ஆகியிருக்குமோ..கண்ணைத் திறக்காமல் யோசித்தான்..

மாப்பிள்ளை அறைக் கதவு தட்டப்பட்டது..
நம்மதான் இந்த ஒப்பனை சிகை அலங்காரம் எல்லாம் வேண்டாம்னு சொன்னமே ... இன்னும் கொஞ்சம் தூங்கிருக்கலாம் என நினைத்துக் கொண்டே , கதவைத் திறந்தான்..நண்பன் அசரவில்லை அப்டி ஒரு தூக்கம்..

மாதவனின் அண்ணன் தான் கதவை தட்டியிருந்தான்.

'இந்த நேரத்தில் நீ ஏன் முழிச்சிட்டு !! ..' - மாதவன்

'மாதவா ஏதாவது குடிக்கிறியா..'

இப்போது அருமை நண்பன் வாய் திறந்து பேசினான்..

'காஃபி சொல்லிடுங்க அண்ணா...'

'தயாராகிட்டு வாங்க ..'

'இப்போவே தயாராகனுமா..??'

'ஆமா..மணி 4 ஆகுது...'

நண்பனுடன் வெளியில் வருவதற்குள், மொத்த குடும்பமும் மாப்பிள்ளை அறைக்குள் வந்திருந்தனர். இன்னும்
தயாராகாமல் இவங்கெல்லாம் இங்க என்ன செய்யப் போறாங்க என யோசித்தான்...

'பொண்ண காணலையாம்...'

தலைக்குள் ஏதோ ஆகியது போல ஓர் உணர்வு மாப்பிள்ளைக்கு..

'எனக்குப் புரியல'.
தெளிவு வேண்டி மறுபடியும் கேட்டான்..

அம்மா கண்கலங்கியபடியே பேசினார்.. 'காலைல இருந்தே காணோமாம்..'

'காணோம்னா ??'

அவளின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான். அணைத்து வைக்கப்பட்டிருந்தது..

'தேடலாம்., அவங்களுக்கு என்னாச்சு தெரியலையே.. போலிஸ்ல சொல்லிடலாமா ??' மாதவனின் நண்பன் தான் கேட்டான்

'அதற்கு அவசியமில்லை . அவங்க வீட்டில, அவளாகத்தான் போயிருக்கனும்னு சொல்லிட்டாங்க..'
யாரோ சொன்னார்கள் இதை.

'விடிய ஆரம்பித்து விட்டது. எல்லாரும் வந்துருவாங்க.. என்ன செய்றது தெரியலை..'

'என்ன இப்போ வந்து இப்படி சொல்றாங்க..என்ன அநியாயமா இருக்கு', நண்பன் தான் ஆதங்கத்தோடு, ஆத்திரப்பட்டான்.

மாதவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. துடைக்கப்பட்டிருந்தது ..

'வருபவர்களிடம் கல்யாணம் நின்னுடுச்சு சொல்லிக்கலாம்'

திருமணத்திற்கு வந்திருந்த
உறவுக்கார பெண்களில் யாரையாவது செய்து வைக்கலாம் என்ற சில பெரியவர்களின் கருத்துகளை, பிடிவாதமாக மறுத்து விட்டான் மாதவன்.

பெண்ணின் குடும்பத்தினர் பரிதாபமாக நின்றனர்.

கல்யாண மண்டபம் வந்து, கல்யாணம் நின்னா, எவ்வளவு பெரிய அவமானம்..

'மாப்பிள்ளை பிடிக்காம அந்த பொண்ணு தப்பிச்சு போயிருச்சு..'

'அவளுக்கு முன்பே ஒரு காதல் இருந்ததாம். அவனுடன் விடியறதுக்குள்ள ஓடிவிட்டாளாம்...'

'என்ன நெஞ்சழுத்தம்
இந்த பொண்ணுக்கு..சொல்லி நிறுத்தியிருக்கலாம். இப்படியா எல்லாரையும் சேர்த்து அவமானப்படுத்துவது.'

'நல்ல வேளை. கல்யாணம் செய்யல இன்னும்., தலைக்கு வந்தது, தலைப்பாகையோட போயிருச்சு...'

இதெல்லாம் கடந்து தான் வீடு வந்து சேர்ந்தனர்.

இறுக்கமான அந்த படைப்பு மேலும் கடினமானது...

சில மாதங்களில் அலுவலக மாற்றம் செய்து கொண்டான்.. புதிய மனிதர்களுக்கு இவன் கதையும் தெரியாது, இரக்கப் பார்வையும் இல்லை.. நிம்மதியாக உணர்ந்தான்..

ஒரு வருடத்தில் வெளிநாட்டில் பணிபுரிய நிர்வாகம் கேட்டதை ஒப்புக் கொண்டு கிளம்பியும் விட்டான், மாறுதல் தேவையென. பெற்றோர் தான் தவித்தனர்.

ஒரு வருடம் ..வராமலேயே இருந்து விட்டான்..

அவளை நினைத்ததுண்டு பலமுறை.. தான்தான் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமோ.. பேசக்கூட இல்லையே.. என்னிடம் சொல்லியிருந்தால் நிறுத்தியிருக்கலாமே..
எங்கே என்ன செய்கிறாளோ
இது வரையில் தகவல் இல்லை. அல்லது தகவல்இவனுக்கு மறைக்கப்பட்டிருக்கலாம்.

விடுமுறைக்கு ஒரு மாத காலம் இப்போது தான் வந்திருந்தான்.

கார், கோவையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அடைந்திருந்தது.. ஊருக்கு வந்துவிட்டிருந்தார்கள்..

மணக்கும்...
 
Top