What's new

சித்திரம் பூக்கும் சிறுகதைக் குவியல்

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 2) - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 3

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 3)

முட்புதருக்குள் உட்புகுந்த இரண்டு கரிச்சான்கள், அத்தனை பூச்சிகளையும் வெளியே கொண்டுவந்தன. காத்திருந்த மூன்று கரிச்சான்களும் வட்ட வடிவில் வியூகம் அமைத்து வேட்டையைத் துவங்கின. அப்பொழுது வண்டினத்தின் தலைவன், முட்டாள் கரிச்சானே, நாங்கள் கொடிய விஷப்பூச்சிகள், எங்களை நீ உட்கொண்டால் உயிரை விடுவாய் என்று மிரட்டும் தொனியில் எச்சரித்தது..!

என் எதிரில் நின்று எச்சரிக்கும் அதிகாரம் பெற்றுவிட்டாயா?? என்று தன் அலகைச் சுற்றிய அரும்பு மீசைகள் விடைக்க அந்த வண்டை நோக்கி விரைந்தது கரிச்சான். அதே சமயத்தில், புதருக்குள் இருந்து இரண்டு காச்சான்களும் முட்கள் தொய்த்த உடலுடன் வான் நோக்கி மேலெழுந்தன..!

இறக்கையை அடித்து சுழன்றதில், விஜயன் வில் விடுத்து புரப்பட்ட கனைகளைப் போல, முட்கள் அனைத்தும் வண்டுகளை குறிவைத்து துளைத்தன, அதில் அந்த தலைமை வண்டும் மடிந்தது. இவ்வாறாக பூச்சிப் படையை நாசமாக்கிய சில வினாடிகளிலேயே எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து ஒன்று ஒரு கரிச்சானைக் கவ்விச் சென்றது..!

சற்றும் தாமதிக்காமல், ஏனைய நான்கு கரிச்சான்களும் கூக்குரலுடன் பருந்தை துரத்தி கொத்தித் தீர்த்தன. காலினில் அகப்பட்டிருந்த கரிச்சானை விடுவித்து, பருந்தை விரட்டியடித்தன..!

கண்ணுக்குத் தெரிந்த எதிரி எளியவனோ வலியவனோ, பயமறியாது நெஞ்சில் உறுதியுடன் எதிர் நோக்கும் நமது இனம் எண்ணிக்கையில் குறைந்ததற்குக் காரணம், கண்ணிற்கு புலப்படாத கதிர் இயக்கமே என தொலைவில் இருந்த கதிர் இயக்க கோபுரத்தைக் கண்டன..!

குறிப்பு: இன்றைய மனித வாழ்வில் புறக்கணிக்க முடியாத சில விஷயங்களில் ஒன்றாக செல்லிடப்பேசியும், இணையதளமும் மாறிவிட்டன. இருந்தாலும், இயற்கைக்கு புறம்பாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், உடனுக்கு உடனாக இயற்கையின் பதில் மாற்று வடிவில் வந்து கொண்டேதான் இருக்கின்றது. இந்த விளைவை நாம் பெரிதாக உணராமல் இருப்பது போன்று தோன்றினாலும், இதுவே எதார்த்தம் என்று நடக்கும் அனைத்தையும் இயல்பாக்கி வாழ்ந்து வருகின்றோம். இன்றைக்கு, கரிச்சான் போன்ற பல பறவை மற்றும் விலங்கு இனங்கள் குறைந்திருக்கலாம், விரைவில் அது மனிதனுக்கும் நிகழலாம் அல்லவா?? சிந்திப்போம்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்
Fantastic....
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
ஐந்து கரிச்சான்கள் - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 4

ஆலத்தின் ஆழம் (பாகம் - 1)

அது ஒரு அழகிய அடர்ந்த நந்தவனம். பசுமையின் உறைவிடமாக, பலவகையான பழமரங்கள், செடிகள், கொடிகள், பலவண்ணங்களில் மலர்ந்து மணந்திருந்த மலர்கள், படர்ந்து விரிந்திருந்த புல்லினங்கள், பறந்து திரிந்திருந்த புள்ளினங்கள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் என அவ்வளவு உயிரோட்டமாக, பார்ப்பதற்கே இரம்மியமாக காட்சியளித்தது அந்த நந்தவனம்..!

அந்த நந்தவனத்தின் மையப்பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து, பல நூறு கிளைகளை விரித்து, எண்ணற்ற விழுதுகளால் வேரூன்றி கலையாகவும், கம்பீரமாகவும் இருந்தது ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தை மட்டுமே உறைவிடமாகக் கொண்டிருந்தன கோடிக்கணக்கான உயிர்கள். அந்த உயிர்களுக்கு, தினம் ஒரு கதை சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தது அந்த ஆலமரம். அவ்வாறாக அன்று, தான் பசுந்தளிராக இருந்தபோது, உறக்கத்தில் கண்ட அருங்கனவை கதையாக விவரித்தது. (இனி ஆலமரம் கதையை விவரிப்பது போல தொடரும்)..!

பக்க கிளைகள் விடாமல், பச்சிளந்தளிராக நான் இருந்த போது, நித்திரையில் உதித்தது ஒரு அற்புதக் கனவு. அந்த கனவில், நான் பெரிதாக வளர்ந்திருந்தேன். என் கிளைகளில் நிறைய ஆலம்பழங்கள் பழுத்திருந்தன. கனிந்திருந்த என் பழங்களின் மணத்தை, தென்றல் காற்று சுமந்து சென்று, நந்தவனம் எங்கும் நிரப்பியது. அவ்வாறாக, எங்கோ ஒரு ஓரத்தில் இருந்த குரங்கின் நாசியிலும், என் பழங்களின் மணம் நுழைய, அந்த குரங்கு விரைந்து என் கிளையை அடைந்தது..!

எனது மனம் படபடத்த அந்த நொடியில், சற்றும் தாமதிக்காத குரங்கு, வெடுக்கென்று என் பழங்களைப் பறித்து சுவைத்தது. நான் கஷ்டப்பட்டு விளைத்த என் பழங்களை, இப்படி என் அனுமதிகூட இல்லாமல் தின்று விட்டாயே, என்று எரிச்சலுடன் குரங்கை விரட்டுவதாக எண்ணி, என் கிளைகளை அசைத்தேன்..! உண்மையில் என் நித்திரையில் இருந்து விழித்தேன், கிளைகளை அசைப்பதாக எண்ணி, முளைத்திருந்த இரண்டு இலைகள் அசைந்ததால்..!

என்னுடைய பழங்கள், என்னுடைய கிளைகள் என்ற சுயநலமான எண்ணங்கள் என்றும் சுகம் தராது என்று அன்று உணர்ந்தேன். மாறாய், மனம் நிறைய வலிகளை பரிசளிக்கும் என்பதையும் நன்கு உணர்ந்தேன். எனவே, சுயநலமான எண்ணம் எதிலும் வேண்டாம் நண்பர்களே..!

- தொடரும்..!

இச்சிறுகதையின் கருப்பொருள், ஒரு செடியுடனான உரையாடலாக, ஒரு சிறுகவிதைப்பொறியில் தோன்றியது..! இதோ அந்த சிறுகவிதை,

ஒரு செடியின் கனவு

உறங்கும் செடியினில், கனவொன்று முளைத்தது..!
முளைத்ததில் செடியது, மரமென வளர்ந்தது..!
வளர்ந்ததும் மரத்தினில், பழமொன்று பழுத்தது..!
பழுத்ததில் மணமது, காற்றினில் நிறைந்தது..!
நிறைந்ததில் விலங்கொன்று, மரத்தினை அடைந்தது..!
அடைந்ததும் விலங்கது, பழத்தினைப் பறித்தது..!
பறித்தும் மரமது, மனம் வெந்து நொந்தது..!
நொந்ததில் மரமது, கிளையினை அசைத்தது..!
அசைத்ததில் செடியின் கனவு கலைந்தது..!
கலைந்ததும் செடியினில், புது எண்ணம் பிறந்தது..!
சுயநலம் சுகந்தராதென்பது அது..!

மழையினில் நனைந்த செடியின்
இலைகளை நான் வருடியபோது,
தான் சொல்ல மறந்த கதையை,
தன்னை மறந்து என்னிடம் சொன்ன செடி..!

நன்றிகளுடன்,
அகமகிழன்
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
N

Nice 😍👌
 
deepalakshmi

Member
Joined
Jul 11, 2022
Messages
11
Points
23
மோட்சம் - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 2

நகரம்

பளிச்சிடும் மின்விளக்குகளுடன், விளம்பரப்பலகைகளையும் தாங்கி நிற்கும் மின்கம்பங்கள். சாலை விதிகளை மதிக்காமல், விதியே என வீதியில் சுற்றும் மக்கள். எங்கும் இரைச்சல், ஊழல்களுக்கு இல்லை குறைச்சல். பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத, ஒரு நகரத்தின் மையப்பகுதி அது..!

அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில், உடல் மெலிந்த பசு ஒன்று சாலை ஓர குப்பைகளை மேய்ந்து கொண்டிருந்தது. குனிந்த தலை நிமிராமல் சென்ற பசு, ஒரு குப்பைத் தொட்டியை அடைந்தது. குப்பைத் தொட்டியின் பின்புறத்தில் பசுவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது..!

அங்கே அரை மயக்கத்தில் ஒரு புள்ளி மான்குட்டி தரையில் விழுந்து கிடந்தது. அந்த மானைக் கண்டதும், பரிதாபத்தில் பசு தன் நாவால் வருடியது. சற்றே மயக்கத்தில் இருந்து தெளிந்த மான், பசுவிற்கு நன்றியை உரைத்தது. இவ்வாறாக மானிற்கும், பசுவிற்குமான உரையாடல் துவங்கியது..!

பசு : எப்படி இங்கே வந்தாய் ?? ஏன் இந்த நிலைமை ??
மான் : அருகில் இருந்த பூங்காவில் நான் ஒரு காட்சிப் பொருளாக இருந்தேன். அங்கே எனக்குத் தேவையான உணவு, நீர், உறைவிடம் சரியாக கிடைக்காததால், தப்பி ஓடி வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்தும், எந்த உணவும் கிடைக்காததால், பசியில் மயங்கியும் விட்டேன். என் துரதிர்ஷ்டம், நான் இந்த நகரத்தில் வாழ தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்..!

ஒரு வனவிலங்கு தன் வாழ்வியலை முற்றிலும் மறந்து, இந்த நகரம் என்னும் நரகத்தின் பிடியில் சிக்கியிருப்பதை எண்ணி பசு வருந்தியது. இந்தக் காட்சியை கண்ட பசுவின் மனதில், பல எண்ண ஓட்டங்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பசுக்களை கால்நடை விலங்காக மாற்றிய மனித இனம், இன்று வீதிகளில் அம்போ என அனாதையாக விட்டு, செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், காகிதங்கள் மற்றும் நெகிழிப் பைகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் எண்ணி கண்ணீர் வடித்தது..!

சற்றும் எதிர்பாரா நேரத்தில், கூட்டமும் குரைச்சலுமாக ஓடிவந்த தெருநாய்க் கூட்டம் பசுவை விரட்டி, மானை முற்றுகை இட்டது..!

குறிப்பு : இக்கதையின் முடிவு சிலர்க்கு மிகைப்படுத்தப்பட்டதாக தெரியலாம். ஆனால், அது உண்மையில் பெருநகரங்களில் வருடந்தோறும் நடந்துகொண்டிருக்கும் சம்பவம் தான். அநேகர்கள் எளிதில் கடந்து செல்லும் ஐந்தாம்பக்க, ஆறாம்பக்க செய்தி இது. கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அவைகளின் உணர்விற்கும் மதிப்பளிக்கவேண்டும், அவைகளும் நம்மைப் போன்ற உயிர்களே. இந்த நிலை தொடருமானால், இன்றைக்கு கவர்ச்சியான செல்லப்பிராணிகளாக (exotic pets) வளர்க்கப்படும் உயிரினங்கள் (iguana, python, monkey, turtle, hedgehog, etc.,) நாளை வீதிக்கு வந்தால் ?? சிந்திப்போம்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 1) - அடுத்த சிறுகதையைப் படிக்க
You write like poem,, 👍🙌
 
vidya_vidya

Active member
Joined
Apr 11, 2023
Messages
23
Points
33
Wow so good. Nama thinam parthu kadanthu pora vishayangala oru siru kadhaya mathi romba azhaga solli irukeenga. kadhayum sirappu. unga mozhi vanmayum sirappu. Agamahilanin sirukadhai thougupugal nu seekirama oru book publish pannunga. All the best(y)
 
Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
ஐந்து கரிச்சான்கள் - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 4

ஆலத்தின் ஆழம் (பாகம் - 1)

அது ஒரு அழகிய அடர்ந்த நந்தவனம். பசுமையின் உறைவிடமாக, பலவகையான பழமரங்கள், செடிகள், கொடிகள், பலவண்ணங்களில் மலர்ந்து மணந்திருந்த மலர்கள், படர்ந்து விரிந்திருந்த புல்லினங்கள், பறந்து திரிந்திருந்த புள்ளினங்கள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் என அவ்வளவு உயிரோட்டமாக, பார்ப்பதற்கே இரம்மியமாக காட்சியளித்தது அந்த நந்தவனம்..!

அந்த நந்தவனத்தின் மையப்பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து, பல நூறு கிளைகளை விரித்து, எண்ணற்ற விழுதுகளால் வேரூன்றி கலையாகவும், கம்பீரமாகவும் இருந்தது ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தை மட்டுமே உறைவிடமாகக் கொண்டிருந்தன கோடிக்கணக்கான உயிர்கள். அந்த உயிர்களுக்கு, தினம் ஒரு கதை சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தது அந்த ஆலமரம். அவ்வாறாக அன்று, தான் பசுந்தளிராக இருந்தபோது, உறக்கத்தில் கண்ட அருங்கனவை கதையாக விவரித்தது. (இனி ஆலமரம் கதையை விவரிப்பது போல தொடரும்)..!

பக்க கிளைகள் விடாமல், பச்சிளந்தளிராக நான் இருந்த போது, நித்திரையில் உதித்தது ஒரு அற்புதக் கனவு. அந்த கனவில், நான் பெரிதாக வளர்ந்திருந்தேன். என் கிளைகளில் நிறைய ஆலம்பழங்கள் பழுத்திருந்தன. கனிந்திருந்த என் பழங்களின் மணத்தை, தென்றல் காற்று சுமந்து சென்று, நந்தவனம் எங்கும் நிரப்பியது. அவ்வாறாக, எங்கோ ஒரு ஓரத்தில் இருந்த குரங்கின் நாசியிலும், என் பழங்களின் மணம் நுழைய, அந்த குரங்கு விரைந்து என் கிளையை அடைந்தது..!

எனது மனம் படபடத்த அந்த நொடியில், சற்றும் தாமதிக்காத குரங்கு, வெடுக்கென்று என் பழங்களைப் பறித்து சுவைத்தது. நான் கஷ்டப்பட்டு விளைத்த என் பழங்களை, இப்படி என் அனுமதிகூட இல்லாமல் தின்று விட்டாயே, என்று எரிச்சலுடன் குரங்கை விரட்டுவதாக எண்ணி, என் கிளைகளை அசைத்தேன்..! உண்மையில் என் நித்திரையில் இருந்து விழித்தேன், கிளைகளை அசைப்பதாக எண்ணி, முளைத்திருந்த இரண்டு இலைகள் அசைந்ததால்..!

என்னுடைய பழங்கள், என்னுடைய கிளைகள் என்ற சுயநலமான எண்ணங்கள் என்றும் சுகம் தராது என்று அன்று உணர்ந்தேன். மாறாய், மனம் நிறைய வலிகளை பரிசளிக்கும் என்பதையும் நன்கு உணர்ந்தேன். எனவே, சுயநலமான எண்ணம் எதிலும் வேண்டாம் நண்பர்களே..!

- தொடரும்..!

இச்சிறுகதையின் கருப்பொருள், ஒரு செடியுடனான உரையாடலாக, ஒரு சிறுகவிதைப்பொறியில் தோன்றியது..! இதோ அந்த சிறுகவிதை,

ஒரு செடியின் கனவு

உறங்கும் செடியினில், கனவொன்று முளைத்தது..!
முளைத்ததில் செடியது, மரமென வளர்ந்தது..!
வளர்ந்ததும் மரத்தினில், பழமொன்று பழுத்தது..!
பழுத்ததில் மணமது, காற்றினில் நிறைந்தது..!
நிறைந்ததில் விலங்கொன்று, மரத்தினை அடைந்தது..!
அடைந்ததும் விலங்கது, பழத்தினைப் பறித்தது..!
பறித்தும் மரமது, மனம் வெந்து நொந்தது..!
நொந்ததில் மரமது, கிளையினை அசைத்தது..!
அசைத்ததில் செடியின் கனவு கலைந்தது..!
கலைந்ததும் செடியினில், புது எண்ணம் பிறந்தது..!
சுயநலம் சுகந்தராதென்பது அது..!

மழையினில் நனைந்த செடியின்
இலைகளை நான் வருடியபோது,
தான் சொல்ல மறந்த கதையை,
தன்னை மறந்து என்னிடம் சொன்ன செடி..!

நன்றிகளுடன்,
அகமகிழன்
Ithu epadi ivalo nal pakama viten 😍😍😍👌👌👌

மழையினில் நனைந்த செடியின்
இலைகளை நான் வருடியபோது,
தான் சொல்ல மறந்த கதையை,
தன்னை மறந்து என்னிடம் சொன்ன செடி..!

😱😱😱 Omg ena ipadi eluthureenga. Please continue 💐💐💐
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
Wow so good. Nama thinam parthu kadanthu pora vishayangala oru siru kadhaya mathi romba azhaga solli irukeenga. kadhayum sirappu. unga mozhi vanmayum sirappu. Agamahilanin sirukadhai thougupugal nu seekirama oru book publish pannunga. All the best(y)
Thanks for your time and comments, that motivates a lot..! 💐
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
Ithu epadi ivalo nal pakama viten 😍😍😍👌👌👌

மழையினில் நனைந்த செடியின்
இலைகளை நான் வருடியபோது,
தான் சொல்ல மறந்த கதையை,
தன்னை மறந்து என்னிடம் சொன்ன செடி..!

😱😱😱 Omg ena ipadi eluthureenga. Please continue 💐💐💐
Lol :ROFLMAO: apdilam perusa ethum eluthala @Nanci..! A True story by a Sedi :ROFLMAO:
 
Top