NEET தேர்வு எழுதி, மருத்துவ முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்க "தகுதி மதிப்பெண்' ஆன பூஜ்யம் மார்க் நிர்ணயக்கப் பட்டுள்ளது.
அதாவது, நீங்கள் 80 மார்க் எடுக்கக் கூடிய அறிவுள்ள மருத்துவராகக் கூட இருக்கலாம்! ஆனால், நீட் தேர்வு எழுதவில்லை என்றால் உங்களுக்கு சீட் இல்லை. அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதினால் பூஜ்யம் மார்க் எடுத்தால் கூட போதும். உங்களுக்கு சீட் உண்டு.
இத்தனை காலமாக இவர்கள் "தகுதி" தேவை என குதித்துக் கொண்டிருந்தது நம்மிடம் அதிக அறிவையோ, அதிக உழைப்பையோ, அதிக மதிப்பெண்ணையோ கேட்டு அல்ல!
நாங்கள் ஒரு விதி விதிப்போம்!
நாங்கள் ஒரு கட்டளை இடுவோம்!
நாங்கள் அதை மேலிருந்து செய்வோம்!
அதை நீங்கள் கீழ்ப்படிந்து ஏற்க வேண்டும் என்பதே அந்தத் தகுதி. விளக்கம் சொல்லி சலித்து விட்டது. பட்டால்தான் புரியும் என்றால் பட்டுத் தெளியட்டும். ஆனால், அப்போது மீண்டு வர இயலாத இருளில் சிக்கி இருப்போம்.
View attachment 14103