What's new

GAME ZONE - கவிதைகள் வளர்ப்போம்..

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
தெரியுதே
-------------------
தெரியுதே என்னாலும் உன்னை
நேசிக்க முடியும் என்றும்
தெரியுதே என்னாலும் உன்னை
வெறுக்க முடியும் என்று -ஆனால்
நீ தந்த காயத்தோடு
பிரிவின் அர்த்தம் உணர்கிறேன்
இன்று தனிமையோடு!!!!
 
M

Mathangi

Guest
தனிமை.....

உறவுகள் ஊடலில் இருந்த போதிலும்,
உரிமைகள் தேடலில் இருந்த போதிலும்,
நிழலாய் துணை நிற்பதும்,
ஆறுதலாய் அரவணைப்பதும்,

நீ மட்டுமே...
 
Last edited by a moderator:

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
நீ மட்டுமே போதும் என்ற
வாழ்க்கை பயனம் முடித்துக்
கொள்ள -மனம் தேடியது
உன்னை பார்ப்பதற்கு
முன்னால்
 
M

Mathangi

Guest
உன்னை பார்ப்பதற்கு முன்னால்...

(நான் நல்லாதான் இருந்தேன்,
உன்னை பார்த்த பின்புதான் புரிந்தது...அன்றே முடிந்தது
என்று குறித்து விட்டான்
என்னை படைத்தவன்😂😂) jzt fun....

ஏன் இந்த படைப்போ
என்றிருந்தேன்....
பின்புதான் புரிந்தது
இந்த வாழ்வு
உனக்காக படைக்கப்பட்ட வரம் என்று.....
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
நானிருக்கலாம்

நானிருக்க வேண்டும்
உன் சுவாசம் தொடும் தூரத்தில்...
நானிருக்க வேண்டும்
உன் இதயம் துடிக்கும் தூரத்தில்...
நானிருக்க வேண்டும்
உன் சிரிப்பை ரசிக்கும் தூரத்தில்...
நானிருக்க வேண்டும்
உன் கண்ணிர் துடைக்கும்
தூரத்தில்...

மொத்தத்தில் நான் இருக்குமிடம் அது உன்னிடமாக வேண்டும்..!!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வேண்டும்....
....
....
....
....
வேண்டும்
- வேண்டும் நித்தமும் வேண்டும்....
நித்திரை இல்லா சித்ரா பௌர்ணமி வேண்டும்....
மனவலிகள் இல்லா ஊடல்கள் வேண்டும்....
துயரங்கள் இல்லா இன்னல்கள் வேண்டும்....
வார்த்தைகள் இல்லா மொழிகள் வேண்டும்....
கள்ளமில்லா உள்ளம் வேண்டும்....
பொய்மை இல்லா மெய்மை வேண்டும்....
தன்னலமில்லா நெஞ்சம் வேண்டும்....
வேஷம் இல்லா பாசம் வேண்டும்....
நெருடல் இல்லா புரிதல் வேண்டும்....
சந்தேகம் இல்லா பயணம் வேண்டும்....
தூரம் பார்க்கா ஓரம் வேண்டும்....
மோதல் இல்லா காதல் வேண்டும்....
சாதல் இல்லா சரித்திரம் வேண்டும்....

இன்னும்... வேண்டும்... இன்னும் வேண்டும்....
படைகள் இல்லா கொடைகள் வேண்டும்....
பகைமை இல்லா நட்பு வேண்டும்....
வஞ்சம் இல்லா நெஞ்சம் வேண்டும்....
லஞ்சம் இல்லா சுமுதாயம் வேண்டும்....
தொற்றுதல் இல்லா பற்றுதல் வேண்டும்....
கண்கள் இமைக்கா அவளை காண வேண்டும்....
நினைவுகள் மாறா நினைப்புகள் வேண்டும்....

இன்னும்... வேண்டும்... இன்னும்... வேண்டும்.....
பசியே இல்லா உலகம் வேண்டும்....
தரிசல் காட்டில் கரிசல் வேண்டும்....
நெரிசல் இல்லா வரிசை வேண்டும்....
இதுவே, போதும் என்ற பக்குவம் வேண்டும்....
வளர்ந்த காளையருக்கு மணமுடிக்க பெண்டீர் வேண்டும்....
குழலிசை யாழிசை போல் இசைக்க மழலை செல்வம் வேண்டும்....
நேர்மையை பாராட்டும் தர்மம் வேண்டும்....
காதில் தேன் பாயும் இன்னிசைகள் வேண்டும்....

என்றுமே மாறாத அன்பு வேண்டும்....

இத்தனையும், வேண்டுமென கேட்டேனே - அவளிடம், மன நெகிழ்வுடன் சிலையாய் நின்றாளே அவ்விடத்தில்...!!! ❤🥰
 
Last edited:
M

Mathangi

Guest
வேண்டும்....
....
....
....
....
வேண்டும்
- வேண்டும் நித்தமும் வேண்டும்....
நித்திரை இல்லா சித்ரா பௌர்ணமி வேண்டும்....
மனவலிகள் இல்லா ஊடல்கள் வேண்டும்....
துயரங்கள் இல்லா இன்னல்கள் வேண்டும்....
வார்த்தைகள் இல்லா மொழிகள் வேண்டும்....
கள்ளமில்லா உள்ளம் வேண்டும்....
பொய்மை இல்லா மெய்மை வேண்டும்....
தன்னலமில்லா நெஞ்சம் வேண்டும்....
வேஷம் இல்லா பாசம் வேண்டும்....
நெருடல் இல்லா புரிதல் வேண்டும்....
சந்தேகம் இல்லா பயணம் வேண்டும்....
தூரம் பார்க்கா ஓரம் வேண்டும்....

இன்னும்... வேண்டும்... இன்னும் வேண்டும்....
படைகள் இல்லா கொடைகள் வேண்டும்....
பகைமை இல்லா நட்பு வேண்டும்....
வஞ்சம் இல்லா நெஞ்சம் வேண்டும்....
லஞ்சம் இல்லா சுமுதாயம் வேண்டும்....
தொற்றுதல் இல்லா பற்றுதல் வேண்டும்....
கண்கள் இமைக்கா அவளை காண வேண்டும்....
நினைவுகள் மாறா நினைப்புகள் வேண்டும்....

இன்னும்... வேண்டும்... இன்னும்... வேண்டும்.....
பசியே இல்லா உலகம் வேண்டும்....
தரிசல் காட்டில் கரிசல் வேண்டும்....
நெரிசல் இல்லா வரிசை வேண்டும்....
இதுவே, போதும் என்ற பக்குவம் வேண்டும்....
வளர்ந்த காளையருக்கு மணமுடிக்க பெண்டீர் வேண்டும்....
குழலிசை யாழிசை போல் இசைக்க மழலை செல்வம் வேண்டும்....
நேர்மையை பாராட்டும் தர்மம் வேண்டும்....
காதில் தேன் பாயும் இன்னிசைகள் வேண்டும்....

என்றுமே மாறாத அன்பு வேண்டும்....

இத்தனையும், வேண்டுமென கேட்டேனே - அவளிடம், மன நெகிழ்வுடன் சிலையாய் நின்றாளே அவ்விடத்தில்...!!! ❤🥰

இதை பார்த்ததும் எனக்கு அமர்க்களம் படம் ஞாபகம் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல்......🥰🥰
தோழா அருமை.....
🥰
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
D363D1F2-D9D8-4BEB-AAD3-F13CC1DC4E91.jpeg
உண்மையில் நான் தனிமை என்பதெல்லாம் வடிகட்டிய பொய்யே தான்.
தலைக்கு மேல் வானம், தலை துவட்ட சூரியன், முதுகு சாய மரம், மடி கொடுக்க பூமி,
பேச்சு கொடுக்க காற்று, பொழுது போக கவிதை…
இத்தனையும் என்னோடு இருக்கையில் நான் தனிமை என்பது பொய் தானே? பெயர் மட்டுமே தனிமை, உண்மையில் நான் தனிமையில் இல்லை!!
 

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
என் இனிய தனிமையே...
வாழ்வின் போக்கில்
வந்த உறவெல்லாம்
வழிமாறி நமை நீங்கினாலும்
என்றும் என்உடன் இருக்கும்
என் இனிய தனிமையே.....❤️❤️❤️
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் இனிய தனிமையே...
வாழ்வின் போக்கில்
வந்த உறவெல்லாம்
வழிமாறி நமை நீங்கினாலும்
என்றும் என்உடன் இருக்கும்
என் இனிய தனிமையே.....❤️❤️❤️
என் இனிய தனிமையே....
வாழும் காலங்களில் வாழ்க்கை திசை மாறி போனாலும் போகதே உன் உறவே.... 🥰
நீளும் பயணங்களில் என் அருகே யாரும் இல்லையெனிலும் உன் துணை ஒன்றே சாஸ்வதம்.... 🥰

காணும் காணல் நீற்றின் பிம்பம் போல வந்து போகும் சில உறவுகள் இருப்பினும் எமை விட்டு நீங்காத ஓர் உறுதுணையே.... 🥰
 
M

Mathangi

Guest
என்னை விட்டு நீங்காதே.....

உயிரே.....
உதிரமாய் நீ என்னுள் கலந்தாய்.....
உடலும் உயிருமாய்
என்னுள் ஒன்றி வாழ்கிறாய்....
உடல் போவதால்,
உயிரிருந்து என்ன பயன்?
உயிர் போவதால்
உடலிருந்து என்ன பயன்?
நீங்காதே உயிரே
நீ நீங்கினால் தாங்காது

என் உயிரே....
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
என் உயிரே பிரியமாட்டாய்
என்று நினைத்தேன் ஆனால் பிரிந்தாய் -என் அன்பே
உன்னை சேரும் எப்போது
தருவாய்!
 

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
என் உயிரே பிரியமாட்டாய்
என்று நினைத்தேன் ஆனால் பிரிந்தாய் -என் அன்பே
உன்னை சேரும் எப்போது
தருவாய்!
உன்னைச் சேரும் வரம்?
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தருவாய் 🥰

தருவாய் --- உன் அன்பினை.....
தருவாய் --- உன் ஆதரவை.....
தருவாய் --- உன் அரவணைப்பை.....
தருவாய் --- உன் ஆனந்ததை.....
தருவாய் --- உன் புன்னகையை.....
தருவாய் --- உன் காதல் பரிசை..... 🥰
என் அன்பே 🥰😍
 
M

Mathangi

Guest
என் அன்பே😍😍.....

நீ எங்கே.....

நம் அன்பை
தொடர்வோம் வா....

அதில் தொலைந்து

நம் வாழ்வை புதுப்பிப்போம் வா....😍😍.....
 
Last edited by a moderator:

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
நம் வாழ்வை புதுப்பிப்போம்

குழந்தையின் கிறுக்கல் போல்
தப்பும் தவறுமாய்
சில பக்கங்கள்
வாழ்க்கையில்....
தவறுகள் தவிர்த்துக் கொண்டு
நம் வாழ்வை புதுப்பிப்போம்
புதுமலரென புத்துணர்ச்சியாய்...
 
Top